Friday, July 30, 2021

ஓய்வு வயது மீண்டும் 58 ...

தமிழகத்தில் அரசு ஊழியர் ஓய்வு வயது மீண்டும் 58 ஆக குறைப்பு?

 பணப் பயன்களுக்கு பதிலாக பத்திரம் தருவதற்கு எதிர்ப்பு!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக குறைப்பது, பணப்பயன்களை பத்திரமாக தற்போதுவழங்குவது என அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழக அரசில் 12 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு சார்ந்த பொதுத்துறை ஊழியர்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கான ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது.


கடந்த ஆண்டு கரோனா பாதிப்பால் நிதிச் சிக்கல்களை சந்தித்து வந்த நிலையில், அப்போதைய முதல்வர் பழனிசாமி, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தி அறிவித்தார். இதுகுறித்த அரசாணையில், 2020 மே 31-ம் தேதி பணி ஓய்வு பெறும் அனைவருக்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் 2020-ல் ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வுக்கால பணப் பயன்களை வழங்குவதை தவிர்த்தது.


💡💡💡 கடந்த பிப்ரவரியில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்தது. அப்போது, முதல்வராக இருந்தபழனிசாமி, அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படும். 2021 மே 31-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்று சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களிடையே ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. ஓய்வு வயது நீட்டிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.


✅✅  தற்போது திமுக அரசு பொறுப்பேற்ற நிலையில், முதல்வர் தனிப்பிரிவுக்கு வந்த மனு அடிப்படையில், அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதைமீண்டும் 58 ஆக குறைக்க முடிவு எடுத்திருப்பதாகவும், அதற்கான கோப்பு தயாரிக்கப்பட்டு முதல்வர் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இதன்மூலம், உடனடியாக 40 ஆயிரம் பேருக்குமேல் ஓய்வு பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

தற்போதைய நிதி நெருக்கடி சூழலில் ஓய்வு பெறுவோருக்கு உடனடியாக பணப்பயன்கள் வழங்கப்படாது என்றும் அதற்கு பதில் ‘அரசு பத்திரம்’ வழங்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அதை செலுத்தி பணம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தலாம் என அரசு முடிவுஎடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இத்துறையினர் கூறியதாவது:


📽️📽️ தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் மு.அன்பரசு:


கடந்த ஆட்சியில் ஓய்வு வயதை உயர்த்தியபோதே எதிர்த்தோம். தற்போதுஓய்வு வயதை குறைப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், ஓய்வூதிய பணப் பயன்களை அரசுபத்திரமாக தருவது ஏற்கக்கூடியதுஅல்ல. பல ஆண்டுகளாக இந்தபணப் பயன்களை நம்பி குழந்தைகளின் படிப்பு, திருமணம்போன்றவற்றை நடத்த காத்திருப்போருக்கு அதிர்ச்சியாக உள்ளது.


1️⃣ தலைமைச் செயலக சங்கமுன்னாள் செயலாளர் கு.வெங்கடேசன்: ஜாக்டோ ஜியோ சார்பில்,ஓய்வு வயது உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். தற்போது ஓய்வு பெறும் வயதுகுறைப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், பணப் பயன்களை பத்திரமாக வழங்குவதை ஏற்க முடியாது.


2️⃣  அரசு அலுவலர்கள் ஒன்றியத்தின் தலைவர் ஆர்.சண்முக ராஜ்: ஓய்வு வயதைக் குறைப்பதற்குத் அரசுக்கு திட்டம் எதுவுமிருந்தால், அதை கைவிட வேண்டும். இதனால், பணி நீட்டிப்பு பெற்ற ஏராளமான அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசுஊழியர்களுக்கு சலுகை வழங்கப்படும் என்று 1989-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அவரின் வழி வந்த ஆட்சி அரசு ஊழியர்களை வஞ்சிக்காது என்று நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Thursday, July 29, 2021

அனைத்து வகை ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும்...

தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் 02.08.2021 முதல் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!





Proceedings Download Here



8ம் வகுப்பு | கணிதம் | கனமூலம் காணல் | பகாக்காரணி முறை | எ. கா. 1.32 , 1.33 , 1.34 , 1.35

8ம் வகுப்பு | கணிதம் | கனமூலம் காணல் | பகாக்காரணி முறை | எ. கா. 1.32 , 1.33 , 1.34 , 1.35
8ம் வகுப்பு | கணிதம் | கனமூலம் காணல் | பகாக்காரணி முறை | எ. கா. 1.32 , 1.33 , 1.34 , 1.35 கணக்குகள்...


View on YouTube

8ம் வகுப்பு / கணிதம் / கனங்கள் அறிமுகம், கனங்களின் பண்புகள்

8ம் வகுப்பு / கணிதம் / கனங்கள் அறிமுகம், கனங்களின் பண்புகள்
8ம் வகுப்பு / கணிதம் / கனங்கள் அறிமுகம், கனங்களின் பண்புகள்


View on YouTube

வாட்ஸ்அப்புக்கும் மாற்று செயலி..

 வாட்ஸ்அப்புக்கும் மாற்று செய்தி செயலி அறிமுகப்படுத்தும் மத்திய அரசு . 

உடனுக்குடன் மெசெஜ் அனுப்ப இந்தியாவின் ' சந்தேஷ் ' ஆப் அறிமுகம்!  

  ‌நாம் இருக்கும் இடம் தான் உலகம் என்று வாழ்ந்துகொண்டிருந்த காலம் போய் தற்போது நம் கைக்குள் உலகம் அடங்கியிருக்கிறது . ஸ்மார்ட்போன்கள் அவ்வாறு செய்திருக்கின்றன . இந்த டெக் உலகத்தில் சமூக வலைதளங்கள் தான் மக்களின் பிரதான சாய்ஸாக உள்ளது . முழு நேரமும் அதிலே மூழ்குபவர்களும் உண்டு . பார்மலிட்டிக்காக வைத்திருப்பவர்களும் உண்டு . அனைவரும் ஏதோ ஒரு சமூக வலைதளத்தைப் பயன்படுத்தாமல் இருக்க மாட்டார்கள் . உலகளவில் வாட்ஸ்அப் , பேஸ்புக் , ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் கோலோச்சுகின்றன .

இந்நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கவும் புதியவர்களை உள்ளிழுக்கவும் அவர்களின் பயன அனுபவத்தை மகிழ்ச்சியாக்க புதுப்புது அப்டேட்கள் , அம்சங்களை அறிமுகப்படுத்துகின்றன.

இம்மாதிரியான நேர் வழியில் சென்றாலும் நம்பிக்கையின்மையால் சந்தையில் நிலைத்து நிற்க குறுக்கு வழியிலும் ஈடுபடுகின்றன . அதாவது போட்டி நிறுவனங்களே இல்லாமல் ஆக்குவது அல்லது அந்நிறுவனத்தை பெரும் தொகைக்கு வாங்கி அதையும் தனக்கு கீழ் கொண்டுவருவது . பேஸ்புக் நிறுவனம் அப்படி தான் வாட்ஸ்அப்பையும் இன்ஸ்டாவையும் விலைக்கு வாங்கியது . இதனால் தங்களை தவிர வாடிக்கையாளர்கள் வேறு செயலியைப் பயன்படுத்த கூடாது என்ற நிலையை உருவாக்குகிறார்கள் . அவர்களுக்கு டிமாண்ட் அதிகரிக்க அதிகரிக்க நம் நாட்டில் அவர்கள் வைத்தது தான் சட்டமாக இருக்கிறது . இந்திய சட்டங்களுக்கு உடன்படாமல் மத்திய அரசுக்கு தண்ணி காட்டுகின்றனர் . உதாரணமாக மத்திய அரசின் புதிய ஐடி விதிகளுக்கு உடன்பட முடியாது என ட்விட்டர் நிறுவனம் சமர் புரிந்து வருகிறது . இது ஒருபுறம் என்றால் இந்தியர்களின் தனிப்பட்ட பிரைவசி தகவல்களும் திருடப்படுகின்றன . தரவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

சமீபத்தில் வாட்ஸ்அப் தனது வாடிக்கையாளரின் தரவுகளை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக அறிவித்திருந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம் . இதையெல்லாம் கருத்தில் கொண்டு மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவான சமூக வலைதளங்களை அறிமுகப்படுத்தி வருகிறது . ஏற்கெனவே ட்விட்டருக்குப் போட்டியாக கூ ( koo ) என்பதை அறிமுகப்படுத்தியது . இது இந்தியர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்றாலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை . 

     இச்சூழலில் தற்போது வாட்ஸ்அப்புக்கு போட்டியாக சந்தேஸ் ( sandes ) என்ற புதிய செயலி மற்றும் சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது . செய்தி ( Message ) என்பதற்கு இந்தியில் சந்தேஸ் என்று பொருள் . வாட்ஸ்அப்பில் இருக்கும் அனைத்தும் அம்சங்களும் இருப்பது போல் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது .

    இதில் ஒருவருக்கு மெசெஜ் செய்யலாம் , வீடியோ , புகைப்படங்கள் , பிடிஎஃப் ஆவணங்கள் என அனைத்தையும் அனுப்பலாம் . ஆரம்பத்தில் அரசு அதிகாரிகளும் ஏஜென்சி ஆட்களும் பயன்படுத்துவதற்காகவே இது அறிமுகப்படுத்தப்பட்டது . தற்போது பொதுமக்கள் உபயோகப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது . இதில் மொபைல் எண் அல்லது @ mygov.in என்ற இந்திய அரசின் மின்னஞ்சல் முகவரி கொண்டு புதிய கணக்கை உருவாக்கலாம் . ஜிமெயில் போன்ற இதர மெயில் ஐடி கொண்டு தொடங்க முடியாது . இதனை கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

App Download Here


தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு விரைவில்...

 தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.- ( பத்திரிக்கை செய்தி ) 

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க முடிவு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என சென்னை , ஜூலை 28 : அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது . அக விலைப்படி வழங்குவதற்கான முடிவை தமிழக அரசு எடுத்துள்ள நிலையில் , அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப் படஉள்ளது .

கரோனா நோய்த் தொற்று காரணமாக , அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு கடந்த ஆண்டு ஏப்ரலில் நிறுத்தி வைக்கப்பட்டது . இதற்கான உத்தரவில் , 2021 - ஆம் ஆண்டு ஜூலை வரையில் அகவிலைப்படி உயர்வு வழங்குவது நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது . இப்போது அறிவிப்பு :  கரோனா நோய்த் தொற்று காரணமாக , மத்திய அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது . இந்த நிலையில் , அண்மையில் பிரத மர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கான முடிவு எட்டப்பட்டது . மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கும் போதெல்லாம் , தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வினை அறிவிப்பது வழக்கம்..

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் , அகவிலைப்படி உயர்வு வழங்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்கும் ஜூலை மாதம் நிறைவடையவுள்ளது . இதையடுத்து , தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

std6 / maths / exercise 1.3 / part 1 / 6ம் வகுப்பு கணிதம் பயிற்சி 1.3 பகுதி -1 BIDMAS rule

std6 / maths / exercise 1.3 / part 1 / 6ம் வகுப்பு கணிதம் பயிற்சி 1.3 பகுதி -1 BIDMAS rule
std6 / maths / exercise 1.3 / part 1 6ம் வகுப்பு கணிதம் பயிற்சி 1.3 பகுதி -1 வினாக்கள் 1 முதல் 6 முடிய... செயலிகளின் வரிசை


View on YouTube

Wednesday, July 28, 2021

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு .

 தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆய்வு : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு . 

சத்துணவு கிடைக்காமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் , கிராமப்புறங்களில் தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த அறிவியல் பூர்வ ஆலோசனைகளைப் பெற்று ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .


உணவை கரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் , சத்துணவு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட வழங்க உத்தரவிடக் கோரி ' சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்ஷன் குரூப் ' என்ற அமைப்பின் சார்பில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது . இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது . அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , பள்ளிகள் மூடப்பட்டதால் சத்துணவு இல்லாமல் மாணவர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் , சத்துணவுத் திட்டம் மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருட்களைப் பெற்றோர் , பொருளாதார பாதிப்பு காரணமாக அவற்றை விற்று விடுவதாகவும் வாதிட்டார் . மேலும் அவர் , அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறந்து , அவற்றின் மூலம் மாணவர்களுக்குச் சத்துணவு வழங்க நடவடிக்கை எடுக்கலாம் எனவும் யோசனை தெரிவித்தார் .

இந்த யோசனை குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கூறினார் . இதையடுத்துத் தலைமை நீதிபதி அமர்வு , " கரோனா தாக்கம் தணிந்துள்ளதாலும் , மூன்றாவது அலை தாக்கும் என்பதற்கு அறிவியல்பூர்வமாக எந்தக் கணிப்பும் இல்லாததாலும் , கிராமப்புறங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அறிவியல்பூர்வமாக ஆலோசனைகளைப் பெற்று ஆய்வு செய்ய வேண்டும் " எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது . அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறப்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் , மாணவர்களுக்குச் சத்துணவு சென்றடையச் செய்வதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டு , விசாரணையை ஆகஸ்ட் 4 - ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர் .

அரசு அதிகாரிகளின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் எத்தனை பேர் ... ? ..

அதிகாரிகளின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் எத்தனை பேர் ... தரவுகளை சேகரிக்கிறது அரசு .. !

 எத்தனை ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர் என்ற தரவுகளை அரசு சேகரித்து வருகிறது . சிறப்பு ஆசிரியர்களை நீக்குவது குறித்த மனுவை பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அனில் குமார் உபாத்யாயா விசாரித்தார் . 

அப்போது , அதிகாரிகளின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்காத வரை கல்வி அமைப்பில் பெரிய முன்னேற்றங்கள் இருக்காது நீதிபதி குறிப்பிட்டார் . மேலும் , ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட எத்தனை உயர்நிலை அதிகாரிகளின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர் என்ற தகவல்களை சமர்பிக்குமாறு பீகார் அரசுக்கு உத்தரவிட்டார். இந்த இடைக்கால உத்தரவின்பேரில் தரவுகளை சேகரிக்கும் பணியில் பீகார் அரசு இறங்கியுள்ளது . பீகாரில் உள்ள 38 மாவட்டங்களிலும் , ஐஏஎஸ் , ஐபிஎஸ் உட்பட எத்தனை உயர்நிலை அதிகாரிகளின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர் என்ற தரவுகளை சமர்பிக்க வேண்டும் என ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலர் சஞ்சய் குமார் அறிவுறுத்தியுள்ளார் . 

ஆகஸ்ட் 4 ம் தேதிக்குள் இந்த தரவுகளை சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது . இந்த விவகாரத்தில் ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலர்களும் உதவ வேண்டும் எனவும் கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலர் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். 

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் தலைமைச் செயலர் திரிபுராரி சரண் காணொலி வாயிலாக ஆகஸ்ட் 4 ம் தேதி ஆலோசனை நடத்துகிறார் . இது தொடர்பான தரவுகளை சேகரிப்பது நாட்டில் இதுவே முதல் முறையாக இருக்கக்கூடும் .

Tuesday, July 27, 2021

std6/maths/ exercise 1.2 /6ஆம் வகுப்பு / கணிதம் பயிற்சி 1.2

std6/maths/ exercise 1.2 /6ஆம் வகுப்பு / கணிதம் பயிற்சி 1.2
std6/maths/ exercise 1.2 /6ஆம் வகுப்பு / கணிதம் பயிற்சி 1.2 பெரிய எண்கள், சிறிய எண்கள்


View on YouTube

ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு விடுமுறை விவரம்...

 தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ !

 தற்போது ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் அதிக வங்கி விடுமுறை நாட்கள் ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்டது . இதனை தொடர்ந்து வர இருக்கும் ஆகஸ்ட் மாதத்திலும் அதிக விடுமுறை வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .

இதில் , மாநிலத்திற்கேற்ப பண்டிகை நாட்கள் மற்றும் திருவிழாக்களை பொறுத்து விடுமுறை தினங்கள் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது . அதில் தமிழகத்தில் ஆறு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . இதனால் பொதுமக்கள் தங்களின் வங்கி பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது .

1 , ஆகஸ்ட் 2021 ஞாயிற்றுக்கிழமை 

8 , ஆகஸ்ட் 2021 - ஞாயிற்றுக்கிழமை 

13 , ஆகஸ்ட் 2021 - திங்கட்கிழமை - Martyrdom Day ( Imphal ) 

14 , ஆகஸ்ட் 2021 - இரண்டாவது சனிக்கிழமை

 15 ஆகஸ்ட் 2021 - ஞாயிற்றுகிழமை - சுதந்திர தினம் * அரசு விடுமுறை 

16 , ஆகஸ்ட் 2021 திங்கட்கிழமை பார்சி புத்தாண்டு மகராஷ்டிராவின் பெலாப்பூர் , மும்பை மற்றும் நாக்பூர் மண்டலங்கள் 

19 , ஆகஸ்ட் 2021 - வியாழக்கிழமை - முஹர்ரம் / ஆஷுரா * அரசு விடுமுறை 

20 , ஆகஸ்ட் 2021 - வெள்ளிக் கிழமை IBPS

21 , ஆகஸ்ட் 2021 - Muharram / First Onam பெங்களூரு , சென்னை , கொச்சி , மற்றும் கேரளா மண்டலங்கள் 

21 , ஆகஸ்ட் 2021 - சனிக்கிழமை ஓணம் கொச்சி , கேரளா 

22 , ஆகஸ்ட் 2021 - ஞாயிற்றுகிழமை ரக்ஷா பந்தன் ( ராக்கி ) * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே

 23 , ஆகஸ்ட் 2021 | திங்கட்கிழமை ஸ்ரீ நாரயண குரு ஜெயந்தி - கொச்சி , கேரளா

 28 , ஆகஸ்ட் 2021 - நான்காவது சனிக்கிழமை

 29 , ஆகஸ்ட் 2021 - ஞாயிற்றுக்கிழமை 

30 , ஆகஸ்ட் 2021 திங்கட்கிழமை ஜன்மாஷ்டமி - அரசு விடுமுறை 

31 , ஆகஸ்ட் 2021 - செவ்வாய் கிழமை ஸ்ரீ கிருஷ்ணா அஷ்டமி - ஹைதராபாத்

வழி: புலனம்


Monday, July 26, 2021

4 ஆம் வகுப்பு தமிழ்..

 பனைமரச் சிறப்பு புத்தக பயிற்சி...


26-07-2021 முதல் நிகழ்ச்சி நிரல்..

26-07-2021  முதல் 30-07-2021

கல்வி டிவி நிகழ்ச்சிகள்...




Pdf Download Here... 

Saturday, July 24, 2021

வேலை வாய்ப்புகள்...




வருமான வரித்துறையில் வேலை


*காலியிடங்கள்: 155

தகுதி: 10th, Degree

சம்பளம்: Rs.1,42,000/-

கடைசி தேதி: 25/08/2021

*தேர்வு கிடையாது

 Apply Link: https://bit.ly/3jTFOQZ

        ════════════════


 போஸ்ட் ஆபீசில் வேலை


காலியிடங்கள்: 2479

தகுதி: 10th, 12th

சம்பளம்: Rs.18,000/-

கடைசி தேதி: 19/08/2021

தேர்வு கிடையாது


 Apply Link: https://bit.ly/3x41FIm

        ════════════════


பாதுகாப்பு படையில் வேலை


வேலை: Assistant

காலியிடங்கள்: 65

தகுதி: 10th,12th,Dip

சம்பளம்: Rs. 21,700 /-

கடைசி தேதி: 26/07/2021


Apply Link: https://bit.ly/2SxDbZZ

        ════════════════


அரசு ஆணையத்தில் வேலை


வேலை: Constable

காலியிடங்கள்: 25,000

தகுதி: 10th

சம்பளம்: Rs. 69100/-

கடைசி தேதி: 31/08/2021


Apply Link: https://bit.ly/3es475c

        ════════════════


 மின் உற்பத்தி நிலையத்தில் வேலை


காலியிடங்கள்: 1000

வேலை: Apprentice

தகுதி: Deg, Dip , ITI

சம்பளம்: Rs.15,000/-

கடைசி தேதி: 20/08/2021

Apply Link:  https://bit.ly/3wGk8uo

        ════════════════


 அற நிலையத்துறையில் வேலை


காலியிடங்கள்: 355

தகுதி: 8th, 10th, 12th

சம்பளம்: Rs. 50,000/-

கடைசி தேதி: 11/08/2021

தேர்வு கிடையாது


Apply Link:  https://bit.ly/2SWnPya

        ════════════════

7ம் வகுப்பு கணிதம் பயிற்சி 1.2

7ம் வகுப்பு கணிதம் பயிற்சி 1.2
7ம் வகுப்பு கணிதம் பயிற்சி 1.2


View on YouTube

std8/maths/Ex 1.4 / q7 and q8/8ம்வகுப்பு/கணிதம்/ பயிற்சி 1.4 / கணக்கு எண் 7 மற்றும் 8

std8/maths/Ex 1.4 / q7 and q8/8ம்வகுப்பு/கணிதம்/ பயிற்சி 1.4 / கணக்கு எண் 7 மற்றும் 8
8ம்வகுப்பு/கணிதம்/ பயிற்சி 1.4 / கணக்கு எண் 7 மற்றும் 8 (நீள்வகுத்தல் முறை) தசம எண்களின் வர்க்கமூலம், பின்ன எண்களின் வர்க்கமூலம் காணல் ..


View on YouTube

பள்ளிகள் திறந்தவுடன் பணி ஆணை..

 TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளிகள் திறந்தவுடன் பணி ஆணை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.


தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஆசிரியர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . தற்போது வரை தேதி அறிவிக்கப்படவில்லை . மேலும் ஏற்க்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை .

இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது . அதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்தாண்டுகளில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளிகள் திறந்தவுடன் பணி ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் .

Friday, July 23, 2021

100 சதவீத அளவில் பள்ளிக்கு..

 100 சதவீதம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும்...

கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் , கல்லூரிகள் மூடப்பட்டன . இந்தாண்டும் 2 வது அலையாக தொற்று பரவியதால் இன்னும் பள்ளிகள் , கல்லூரிகள் திறப்பது குறித்து அரசு முடிவு எடுக்கவில்லை . இருப்பினும் தொற்றின் பாதிப்பு குறையத் தொடங்கியதையடுத்து தமிழகத்தில் படிப்படியாக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது . இறுதியாக கடந்த வாரம் முதல்வர் அறிவிப்பின்படி , பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது . 

  முன்னதாக 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு சுழற்சி முறையில் வந்து தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தனர் . இதையடுத்து 19 ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது . ஆசிரியர்கள்  சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகின்றனர் . தற்போது 10 மற்றும் பிளஸ் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் 100 சதவீதம் பள்ளிக்கு வரவழைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது . 

  மேற்கண்ட வகுப்பு ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து ஆன்லைன் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க வேண்டும் . அனைத்து ஆசிரியர்களும் பாடக்குறிப்பேடு , செயல்திட்ட குறிப்பேடு , தினமும் எழுதி அதை தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து பெற வேண்டும் . கல்வி தொலைக்காட்சி கண்காணிப்பு பதிவேடு தயாரிக்க வேண்டும் , கல்வி தொலைக்காட்சி வகுப்புகளில் அளிக்கப்படும் ஒப்படைப்புகளை மாணவர்களுக்கு அனுப்பி எழுத வைத்து , அதை திரும்ப பெற்று மதிப்பீடு செய்து பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் . 

   ஐடெக் கணினிகள் அனைத்தையும் தலைமை ஆசிரியர்கள் பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது . மேலும் , பிளஸ் 2 . வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் , தற்போது 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மட்டும்தான் மாணவர்கள் இருப்பார்கள் . அவர்கள் அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டிய வகையில் மேற்கண்ட வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் 100 சதவீத அளவில் பள்ளிக்கு வந்தால்தான் பாடங்களை மாணவர்களுக்கு முழுமையாக தெரிவிக்க முடியும் என்பதால் அவர்களை முழுமையாக பள்ளிக்கு வரவழைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது . இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளார் .

என்ற செய்தி வாட்ஸப்  மற்றும் வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது...

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு...

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு : இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்...

பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன . தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 19 - ஆம் தேதி வெளியிட்டார் . இதில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 மாணவர்கள் அனைவரும் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றனர் . இந்தநிலையில் , தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன .


மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது மதிப்பெண் பட்டியலில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தாலோ மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர்களை அணுகி தீர்வு பெறலாம் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .

Mark list Download Here.. 

Wednesday, July 21, 2021

உங்களின் செல்போன் வேவு பார்க்கப்படுகிறதா ?

செல்போன் வேவு பார்க்கப்படுகிறதா ?        சில அறிகுறிகள்...

செல்போன் , கம்ப்யூட்டரில் என்னதான் வலுவான பாஸ்வேர்டுகளுடன் தகவல்களை பத்திரமாக வைத்திருந்தாலும் , ஸ்பைவேர்கள் மூலம் அவற்றை எளிதாக திருடி விடலாம் என்பதை தற்போதைய பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் மீண்டும் நிரூபித்துள்ளது . இந்த ஸ்பைவேர் சாப்ட்வேர் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யாருடைய செல்போனையும் கேட்கலாம் , தகவல்களை திருடலாம் . 

பெகாசஸ் ஸ்பைவேரால் சாமானிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் , ஒட்டுமால்வேர்கள் பிற உளவு சாப்ட்வேர்கள் மூலமாக செல்போனை ஹேக் செய்ய முடியும் . அப்படி ஹேக் செய்து , உங்கள் வங்கி கணக்கு பாஸ்வேர்டு அறிந்து , அதன் மூலம் பணத்தையும் திருட முடியும் .

 ஒருவேளை உங்கள் செல்போனில் இதுபோன்று ஹேக் செய்யப்பட்டாலோ , வேவு பார்க்கப்பட்டாலோ சில அறிகுறிகள் காட்டிக் கொடுத்திடும் . அதன் மூலம் , நீங்கள் உஷாராகி செல்போனை ரீசெட் செய்யலாம் அல்லது வேறு செல்போனை மாற்றி விடலாம் . செல்போன் கேட்கப்படுகிறது அல்லது வேவு பார்க்கப்படுகிறது என்பதை காட்டிக் கொடுக்கும் சில அறிகுறிகள் இதோ ...

 * வழக்கத்தை விட போன் பேட்டரி வேகமாக தீரும் . அப்படி எனில் , மால்வேர் அல்லது உங்கள் செல்போனில் தில்லுமுல்லு செய்வதற்கான மோசடி மென்பொருள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என அர்த்தம்

 * நீங்கள் டவுன்லோடு செய்யாத ஆப்கள் போனில் இருக்கும் . அது , ஸ்பைவேர் அல்லது ஹேக்கர்களின் வேலையாக இருக்கும் . உங்களுக்கே தெரியாமல் அந்த ஆப் பதிவிறக்கம் செய்யப்பட்டு , அதன் மூலம் உங்கள் போன் வேவு பார்க்கப்படும் . 

* போன் செயல்பாட்டு வேகம் திடீரென மிகவும் குறைந்துவிடும் . மோசடி மென்பொருளான மால்வேர் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் என்பதால் போனின் செயல்திறன் இப்படி குறையும் . 

* மொபைல் இன்டர்நெட் டேட்டா வேகமாக தீரும் . 

* போன் வித்தியாசமாக செயல்படும் . வழக்கமான வெப்சைட்கள் வித்தியாசமாக தோன்றும் . ஆப்கள் திடீரென செயலிழக்கும் அல்லது ஓபன் செய்ய முடியாது . 

* வித்தியாசமான பாப் - அப் நோட்டிபிகேஷன்கள் வந்தபடி இருக்கும் . செல்போன் திரையில் பாப்அப் மெசேஜ்கள் நிரம்பி வழியும் . அதில் , வரும் எந்த லிங்க்கையும் தொடாதீர்கள் .

* போட்டோ , வீடியோ கேலரியில் உங்களுக்கு சம்மந்தமில்லாத படங்கள் திடீரென சேமிக்கப்பட்டு இருக்கும் . அது , ஏதோ தெரியாமல் நடந்திருக்கும் என அலட்சியமாக இருக்கக் கூடாது . 

* நீங்கள் போனை பயன்படுத்தாத நேரத்திலும் திடீரென டார்ச் லைட் தானாகவே எரிய தொடங்கும் . 

* அதிக நேரம் போனை பயன்படுத்தினால்தான் சூடாகும் . ஆனால் , நீங்கள் போனை எடுக்கும் போதே அது சூடாக இருந்தால் , யாரோ ஹேக் செய்து இயக்குகிறார்கள் என அர்த்தம் . 

* நீங்கள் செய்யாத போன் கால் அல்லது எஸ்எம்எஸ்.கள் உங்கள் லாக் அல்லது கால்ஸ் லிஸ்ட்டில் காணப்படும் . இதுபோன்ற அறிகுறிகள் உஷாராகி விடுங்கள் .

 உடனே , உங்கள் செல்போனை ரீசெட் செய்திடுங்கள் . அப்படி செய்தால் , உங்கள் போனுக்குள் ஊடுருவிய கோல்மால் மென்பொருள்கள் அழிந்து விடும் .

ஆரம்பப் பள்ளிகளை திறக்கலாம்...

 ஆரம்பப் பள்ளிகளை முதலில் திறக்கலாம் - பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான சரியான நேரம் இதுதான்..! எய்ம்ஸ் இயக்குநர்..

இந்தியா முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை என தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டதால், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான சூழல் ஏற்படவில்லை. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் மாணவர்களின் இறுதி ஆண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருப்பதற்காக, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே நிலவி வருகிறது. இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா அளித்த பேட்டியில் கூறியதாவது; கொரோனாவின் இரண்டாவது அலை குறைந்துள்ளது. நாடு முழுவதும் 40 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஆரம்பப் பள்ளிகளைத் திறக்க அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.


பள்ளிகள் திறக்கப்பட்டால் மட்டுமே குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி, கல்வியில் முன்னேற்றம் அடைய முடியும். ஆன்லைன் வகுப்புகளை விட குழந்தைகள் பள்ளிக்கு சென்று படிப்பது முக்கியம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியால் குழந்தைகளை கொரோனாவில் இருந்து எளிதாக குணப்படுத்த முடிகிறது. இது ‘செரோ’ கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது’ என்றார்.

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது மீண்டும் 58 - ஆக குறைப்பா...?

 தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது மீண்டும் 58 - ஆக குறைப்பு ? " பாண்ட் " வழங்க ஸ்டாலின் தீவிர யோசனை...

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக குறைக்கலாம் என்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை வருடங்கள் அதிகரித்தார் . அதாவது 60 ஆக உயர்த்தினார் . இதனால் ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வு பெறும்போது செய்ய வேண்டிய செட்டில்மென்ட்கள் தாமதமாகும் என்பது எடப்பாடி பழனிச்சாமி அரசின் திட்டம் . 2 பல இளைஞர்களுக்கு வேலை தேவை தமிழ்நாட்டில் கடும் நிதி நெருக்கடி சூழ்ந்ததால்தான் , அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 - லிருந்து 60 ஆக கடந்த எடப்பாடி ஆட்சியில் உயர்த்தப்பட்டது . அதற்கான அரசாணையையும் பிறப்பித்திருந்தனர் . இதனால் புதிய வேலை வாய்ப்புகள் துறைகளில் உருவாகவில்லை . இளைஞர்களை வேலைக்கு எடுக்கும் புதிய நியமனங்களுக்கும் தடை விழுந்தது . ஸ்டாலின் விருப்பம் இந்த அரசுஇந்த நிலையில் , தற்போது , இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தில் உள்ள முதல்வர் ஸ்டாலின் , 60 ஆக உயர்த்தப்பட்ட அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக மாற்றியமைக்கலாமா ? என்று யோசிப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . 9 3 மாதத்தில் ஓய்வு தரலாமா குறிப்பாக , 60 வயதாக உயர்த்தப்பட்டதால் கடந்த ஆண்டு ஓய்வு பெற வேண்டிய ஊழியர்கள் மாதங்களாக பணியில் தொடர்கிறார்கள் . அவர்களை மேலும் 3 மாதங்கள் பணிபுரிய அனுமதித்துவிட்டு அவர்களை ஓய்வு பெற வைக்கலாம் என்று ஒரு ஆலோசனை நடந்துள்ளது . அப்படி ஓய்வுபெறும் போது அவர்களுக்குரிய ஓய்வூதிய பலன்களை கொடுக்க வேண்டும் ; அதற்கு மிகப்பெரிய அளவிலான தொகை அரசுக்கு தேவை ; ஆனால் , தற்போதையை நிதி நெருக்கடியில் அது சாத்தியமில்லை என்று நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . பாண்ட் கொடுக்கலாமா...

கொடுக்கலாமா இதனை ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது . அப்போது , ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் இருந்து , 2 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றிக்கொள்ளும் வகையில் பாண்ட் ( பத்திரங்கள் ) கொடுத்து விட்டால் சமாளிக்கலாமே என்பதாக விவாதம் நடந்துள்ளது . பணமாக 1 தீவிர ஆலோசனை அதேநேரம் , பாண்ட் கொடுத்தால் அரசு ஊழியர்கள் ஏற்கமாட்டார்கள் ; 58 ஆக குறைப்பது சர்ச்சையையே ஏற்படுத்தும் யாரும் ஏற்க மாட்டார்கள் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . இருப்பினும் , எடப்பாடி அரசு போட்ட அரசாணையை ரத்து செய்ய என்ன வழிகள் இருக்கு ? அதற்கு தோதான நிதியை எந்த வழிகளில் உண்டாக்கலாம் என்கிற ஆலோசனை முற்றுபெறவில்லை . இதனை அறிந்து அரசு ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளனர்....


std7/maths/ex.1.1/question 8 to 12 / 7ம்வகுப்பு/கணிதம்/பயிற்சி1.1/வினாக்கள் 8 முதல் 12 முடிய

std7/maths/ex.1.1/question 8 to 12 / 7ம்வகுப்பு/கணிதம்/பயிற்சி1.1/வினாக்கள் 8 முதல் 12 முடிய
std7/maths/ex.1.1/question 8 to 12/ 7ம்வகுப்பு/கணிதம்/பயிற்சி1.1/வினாக்கள் 8 முதல் 12 முடிய


View on YouTube

Tuesday, July 20, 2021

FLASH NEWS ERODE CEO20.07.21

ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்.



1.கல்வி தொலைக்காட்சியில் 1 - 12 வகுப்பு வரை ஒளிபரப்பப்படும் பாடங்களின் அட்டவணைடையின்பற்றி அனைத்து மாணவர்களும் தினமும் பார்ப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்தல் வேண்டும் . 

2.கல்வி தொலைக்காட்சியின் மூலம் கற்பிக்கப்பட்ட பாடங்களின் Youtuhe Links அடுத்தநாள் அனைத்து மாணவர்களுக்கு அனுப்பி வைத்து தொடர் கற்றலை உறுதி செய்தல் வேண்டும்.

3.மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியை பார்த்து வருவதை , ஒரு வகுப்பில் உள்ள அனைத்து பாட ஆசிரியர்களும் மாணவர்கள் பெற்றோர்களை தொடர்பு கொண்டு தொடர்ந்து கேட்டறிந்து தினந்தோறும் கல்வி பயில்வதை உறுதிபடுத்துதல் வேண்டும் . 4.Whatsapp,Telegram , etc போன்ற செயலி குழுக்களில் ஆசிரியர்கள் கல்வி தொலைக்காட்சியின் You tube link , TNTP videos தாங்கள் எடுக்கும் பாடங்களை பதிவு செய்து அதன் வீடியோ ஆகியவற்றை பதித்திட வேண்டும்.

5. Google Meet etc. , போன்ற செயலிகளை பயன்படுத்தி மாணவர்களுக்கு online முறையில் கற்பித்தல் பணியை மேற்கொள்ள வேண்டும் .

6. கற்பிக்கப்பட்ட பாடங்களில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி மதிப்பீடு செய்தல் வேண்டும் மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்விற்குரிய விடைத்தாள்களை Whats app மூலமாகவோ அல்லது பெற்றோர்கள் மூலமாக பள்ளியில் ஒப்படைப்பதற்கும் , விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருந்தி மதிப்பெண் பதிவேட்டில் பதிவு செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . 

7.மாணவர்கள் , பெற்றோர்கள் பள்ளிக்கு வரும் சமயங்களில் பின்பற்றிட வேண்டும் .

8. ஆசிரியர்களால் மேற்கொள்ளப்படும் Online கற்றல் கற்பிக்கல் செயல்பாடுகள் அனைத்தும் உரிய பதிவேட்டில் தினமும் பதிவு செய்து பராமரித்திடல் வேண்டும் . 

9.மாணவர்களுக்கு Counselling கொடுத்து ஊக்கப்படுத்தி கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுத்திட ஆசிரியர்கள் தக்க ஆலோசனைகளை வழங்கிட வேண்டும் . 

10. மேற்காண் செயற்பாடுகள் அனைத்தையும் பள்ளியில் செயல்படுத்திட போதுமான  எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வருகைதர தலைமை ஆசிரியர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

செயல்முறைகள் நகல் மற்றும் மாதிரி பதிவேடுகளுக்கு கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்...


CEO Proceedings Download Here

ஓ.பி.சி. பிரிவினருக்கு சாதிச்சான்று ...

  ஓ.பி.சி. பிரிவினருக்கு சாதிச்சான்று வழங்கும்போது கணக்கீடு செய்ய வேண்டிய வருமானம்...

ஓ.பி.சி. பிரிவினருக்கு சாதிச்சான்று வழங்கும்போது ஊதியம், வேளாண் வருமானம் கணக்கில் எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஓ.பி.சி. சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு புதிய ஆணை வெளியிட்டுள்ளது. இந்திய அரசு பணியிடங்களுக்கான நியமனங்கள் மற்றும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 27% இட ஒதுக்கீடு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) வளமான பிரிவினரை நீக்கி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் இந்திய அரசால் அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.


மேலும், வளமான பிரிவினரை நீக்குவதற்கான நெறிமுறைகளும் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. வளமான பிரிவினரை நீக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரம்பை கணக்கிடும் போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை சேர்க்கக்கூடாது என வழிகாட்டு நெறிமுறையையில் விளக்க அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1993ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.1லட்சத்திலிருந்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 2017ம் ஆண்டு ரூ.8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சாதி , இருப்பிடம் , வருமானம் , சான்றிதழ்கள் இனி ஈஸி..

இனி உங்க ஸ்மார்ட்போனிலேயே சாதி , இருப்பிடம் , வருமானம் , அடங்கல் சான்றிதழ்கள் எல்லாம் பெற முடியும் ! எப்படினு பார்க்கலாம்...

சாதி சான்றிதழ் , வருமான சான்றிதழ் , இருப்பிட சான்றிதழ் , OBC சான்றிதழ் , வாரிசு சான்றிதழ் , முதல் பட்டதாரி சான்றிதழ் , வேலையில்லா பட்டதாரி சான்றுதழ் , விதவை சான்றிதழ் , கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ் , விவசாயத்திற்கான அடங்கல் ஆகியவற்றை எல்லாம் நீங்கள் இனி உங்கள் ஸ்மார்ட்போன் மூலமே விண்ணப்பத்து பெற முடியும் .

இனி உங்களுக்குத் தேவையான அரசு சான்றிதழ்களை பெற VAO அலுவலகங்களுக்கோ , தாலுகா அலுவலகத்திற்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை . அனைத்து சான்றிதழ்களுக்கும் இப்போது உங்கள் மொபைல் போனிலேயே விண்ணப்பிப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம் . . 

https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.a spx # எனும் வலைத்ததிற்குச் சென்று முதலில் New User என்பதை கிளிக் செய்து Register செய்து கொள்ள வேண்டும் . • Register செய்யும் போது உங்களுடைய முழு பெயர் , முகவரி , தாலுக்கா , மாவட்டம் , கைபேசி எண் , மின்னஞ்சல் முகவரி , ஆதார் எண் , Login ID , password ஆகியவற்றை சரியாக உள்ளிட வேண்டும் . அடுத்து திரையில் Captcha குறியீட்டை உள்ளிட்டு Sign Up பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும் .

இப்போது நீங்கள் கொடுத்த மொபைல் நம்பருக்கு OTP ஒன்று வரும் . அந்த OTP எண்ணை உள்ளிட்டு சரிபார்த்ததும் உங்களுக்கான கணக்கு திறக்கப்படும் .

https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.a spx #  வலைத்தளத்திற்குச் சென்று நீங்கள் உருவாக்கிய Username , Password , Captcha code ஆகியவற்றை கொண்டு Login செய்து கொள்ள வேண்டும் . . Login ஆனதும் , Department Wise எனும் விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும் . அதில் Revenue Department எனும் விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும் . அதில் வருவாய் துறை மூலம் கிடைக்கும் சேவைகளின் பட்டியலைக் காணலாம் . . அவற்றில் உங்களுக்கு தேவையான சேவையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் . . எடுத்துக்காட்டாக உங்களுக்கு சாதி சான்றிதழ் வேண்டுமென்றால் Community Certificate என்பதை கிளிக் செய்கிறீர்கள் என்றால் , புதிதாக ஒரு பக்கம் திறக்கும் .

அதில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் , சேவை விவரம் மற்றும் விண்ணப்ப கட்டணம் போன்ற தகவல்கள் இருக்கும் . அதை படித்துவிட்டு , Proceed எனும் விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும் . . இப்போது CAN நம்பர் என்று சொல்லக்கூடிய குடிமக்கள் கணக்கு எண் தேவைப்படும் . உங்களிடம் இல்லை என்றால் Register CAN என்பதை கிளிக் செய்து புதிய CAN எண்ணைப் பெற்றுக்கொள்ள முடியும் . • CAN எண்ணுக்கு விண்ணப்பிக்க உங்களிடம் விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை உடன் வாக்காளர் அடையாள அட்டை , ரேஷன் கார்டு , PAN கார்டு போன்ற ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும் . விண்ணப்பத்தாரரின் விவரங்களைப் பூர்த்திச் செய்துவிட்டு , அடுத்து அடுத்து தற்போதைய முகவரி , நிலையான முகவரி , வங்கி கணக்கு விவரங்கள் போன்றவற்றை உள்ளிட வேண்டும் .

அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து CAN எண்ணை பெற்றதும் CAN எண்ணை உள்ளிட்டு தேடுதலை தொடங்கி உங்களுக்கான விண்ணப்பத்தை தொடங்கலாம் . நீங்கள் தேர்ந்தெடுத்த சேவைக்குத் தேவையான ஆவணங்களான Photo ID proof , address proof , பிறப்பு சான்றிதழ் , self declaration ஆகியவற்றை பதிவேற்ற வேண்டும் . பதிவேற்றியதும் , Make Payment எனும் விருப்பம் தோன்றும் . அதை கிளிக் செய்து விண்ணப்பக் கட்டணத்தை கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் போன்ற வழிகளைப் பயன்படுத்தி செலுத்த வேண்டும்.

இப்படி நீங்கள் விண்ணப்பித்து முடித்ததும் ஓரிரு நாட்களுக்குள் நீங்கள் விண்ணப்பித்த சான்றிதழைப் பெற முடியும் .

1.singular - plural

std8/Maths/Ex.1.4/Question 6/8ம்வகுப்பு/கணிதம்/ பயிற்சி 1.4 / கணக்கு எண் 6 /நீள்வகுத்தல் முறை

std8/Maths/Ex.1.4/Question 6/8ம்வகுப்பு/கணிதம்/ பயிற்சி 1.4 / கணக்கு எண் 6 /நீள்வகுத்தல் முறை
8ம்வகுப்பு/கணிதம்/ பயிற்சி 1.4 / கணக்கு எண் 6 வர்க்க மூலம் காணல் (நீள்வகுத்தல் முறை)


View on YouTube

8ம்வகுப்பு/கணிதம்/ பயிற்சி 1.4 / கணக்குகள் 1 முதல் 5 முடிய / பகுதி 1

8ம்வகுப்பு/கணிதம்/ பயிற்சி 1.4 / கணக்குகள் 1 முதல் 5 முடிய / பகுதி 1
8ம்வகுப்பு/கணிதம்/ பயிற்சி 1.4 / கணக்குகள் 1 முதல் 5 முடிய வர்க்கம், வர்க்க மூலம் காணல் (பகாக்காரணி முறை)...


View on YouTube

Monday, July 19, 2021

இக்னோ பல்கலை B.Ed மாணவர் சேர்க்கை

 ஜூலை 31 வரை இக்னோ பல்கலை . மாணவர் சேர்க்கை 


சென்னை இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் ( இக்னோ ) சென்னை மண்டல இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : மத்திய அரசின் இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்விதிட்டத்தில் பல்வேறு இளங் கலை , முதுகலை , டிப்ளமா , சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது . இந்நிலையில் , ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .  



https : // ignouadmission . samarth.edu.in 

என்ற இணைய தளத்தை பயன்படுத்தி ஜூலை 31 வரை ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம் . இக்னோவில் குறிப்பிட்ட சில இளங்கலை படிப்பு , டிப்ளமா , சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்சி , எஸ்டி வகுப் பினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது . மாணவர் சேர்க்கை தொடர் பான விவரங்களை பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் 

 ( www.ignou.ac.in ) அறியலாம் . மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டும் தெரிந்துகொள்ளலாம் . இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார் .

பனைமரச்சிறப்பு

Sunday, July 18, 2021

கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி நிரல்..


ஜூலை 19 முதல் 21 வரை கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்கள்




Download PDF Here 

Saturday, July 17, 2021

Flash News : +2 மதிப்பெண் பட்டியல் 19.07.2021 அன்று காலை 10 மணிக்கு வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்ககம்.

+2 மதிப்பெண் பட்டியல் 19.07.2021 அன்று காலை 10 மணிக்கு வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்ககம்.

 

19-ஆம் தேதி காலை 11 மணிக்கு +2 மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும்.


22-ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


அரசாணை ( நிலை ) எண் .105 பள்ளிக் கல்வித் ( அ.தே ) துறை , நாள் .12.07.2021 - ன்படி , 2020-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் , 19.07.2021 அன்று காலை 11.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம் . 

1. www.tnresults.nic.in 

2. www.dge1.tn.nic.in

3. www.dge2.tn.nic.in 

4. www.dge.tn.gov.in 

மாணவர்கள் , பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும்.


மேலும் , பள்ளி மாணவர்கள் 22.07.2021 அன்று காலை 11.00 மணி முதல் www.dge.tn.gov.in , www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.







BEd கற்பித்தல் பயிற்சியை பணிபுரியும் பள்ளியிலேயே விடுப்பின்றி மேற்கொள்ளலாம் அரசாணை வெளியீடு .

அரசாணை எண் 77 

பள்ளிக்கல்வி நாள் : 24 / 04 / 2017 தொடக்கக்கல்வி -ஊராட்சி / நகராட்சி / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது BEd கற்பித்தல் பயிற்சியை பணிபுரியும் பள்ளியிலேயே விடுப்பின்றி மேற்கொள்ளலாம் அரசாணை வெளியீடு .


            


G.O.77



8ம்வகுப்பு/கணிதம்/ வர்க்க எண்கள் அறிமுகம், வர்க்க எண்களின் பண்புகள்

8ம்வகுப்பு/கணிதம்/ வர்க்க எண்கள் அறிமுகம், வர்க்க எண்களின் பண்புகள்
std8/maths/square numbers /8ம்வகுப்பு/கணிதம்/ வர்க்க எண்கள் அறிமுகம், வர்க்க எண்களின் பண்புகள்


View on YouTube

Friday, July 16, 2021

6ம் வகுப்பு / கணிதம் / பருவம் 1/ பயிற்சி 1.1 / 6th maths /term1/ exercise 1.1

6ம் வகுப்பு / கணிதம் / பருவம் 1/ பயிற்சி 1.1 / 6th maths /term1/ exercise 1.1
6ம் வகுப்பு / கணிதம் / பருவம் 1/ பயிற்சி 1.1 / 6th maths /term1/ exercise 1.1


View on YouTube

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் 31.7. 2021 வரை நீட்டிப்பு குறித்து செய்தி வெளியீடு!!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு




1️⃣  தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகளுக்கு தடை தொடரும்.


2️⃣  புதுச்சேரி தவிர, மற்ற மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்து தடை


3️⃣  சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடை


4️⃣  திருமண நிகழ்வுகளில் 50 பேரும், இறுதி சடங்கில் 20 பேரும் பங்கேற்க அனுமதி


5️⃣  பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி!


விரிவான தகவல்கள் பெற கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்..

 Download PDF click here

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த முன்மொழிவுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


1998 முதல் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் 01.04.2003 பின்பு கைவிடப்பட்டு, அந்த தேதிக்கு பின் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு CPS திட்டம் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், போக்குவரத்து பணியாளர்களுக்கு மீண்டும் 1998 ஓய்வூதிய திட்டத்தையே அனைவருக்கும் (2003 க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கும்) நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்" என அறிவிக்கப்பட்டது. அதன் படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர போக்குவரத்துத்துறை துணை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்..மேலும், இந்த திட்டம் மூலம் பயன்பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கான தொகையையும் உடனடியாக தெரிவிக்கவும், முன்மொழிவை அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Thursday, July 15, 2021

IGNOU மறுமதிப்பீட்டுச்சான்று வேண்டாம் என்பதற்கான G.O..

 B.Ed,..IGNOU மறுமதிப்பீட்டுச்சான்று வேண்டாம் என்பதற்கான G.O.






01.04.2020 முதல் நடைமுறைக்கு வருகிறது.

  33 ஆண்டுகள்  அல்லது 60 வயது...

அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அதில் ஓய்வு பெற வேண்டும். இது 1.4.2020 முதல் அமுலுக்கு வருகிறது. இதனால் தற்போது 33 ஆண்டு பணிக்காலம் முடித்தவர்கள் ஒய்வு பெறுகிறார்கள்.

ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. எது முதலில் வந்தாலும் 33 ஆண்டுகள் சேவை அல்லது 60 வயது.


22 வயதில் சேர்ந்த ஒருவர் 55 வயதில் ஓய்வு பெறுவார். இது 01.04.2020 முதல் நடைமுறைக்கு வருகிறது.



Wednesday, July 14, 2021

கடன் தொகைகள் அரசிடமிருந்து பெறும் முறை...

 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இரண்டு சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் திருமணம் தொடர்பான கடன் தொகைகள் அரசிடமிருந்து பெறும் முறை, அரசாணைகள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள்.


◆Finance [Salaries] Department G.O.Ms.No.27, Dated 20-01-2021...

◆ Finance [Loans and Advances Cell] Department G.O.Ms.No.98, Dated 26-02-2021...

◆FORM OF APPLICATION BY A GOVERNMENT SERVANT FOR AN ADVANCE  FOR PURCHASE OF A MOTOR CAR / MOTOR CYCLE / SCOOTER / MOPED...

◆RECOMMENDATION AND CERTIFICATE BY THE HEAD OF OFFICE

◆ The Tamil Nadu Financial Code Vol – 1 –Loans and Advances – 289-371 (Pg – 12 -94)

◆ TNFC- FORMS – 487-502 (Pg – 95-110)

◆ TNFC-REGISTERS – 570-578 (Pg – 111-120)


விண்ணப்பம் மற்றும் கூடுதல் தகவல்கள் பெற...  கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்..

Download Here...

பள்ளிகள் திறப்பு ? தயாராகும் தமிழ்நாடு அரசு !

 ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறப்பு ? தயாராகும் தமிழ்நாடு அரசு !

தமிழ்நாட்டில் பள்ளிகளை விரைவில் தொடங்க கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 36,000 என்ற அளவிலிருந்து 2500 என்ற அளவுக்கு குறைந்துள்ளது . 

ஒவ்வொரு நாளும் இதில் சரிவு ஏற்பட்டு வரும் நிலையில் விரைவில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன . இந்நிலையில் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி பெற்றோர் , கல்வியாளர்கள் , ஆசிரியர்கள் , பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது .

புதுச்சேரியில் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர் . வல்லுனர் குழு அமைத்து , மருத்துவ , உளவியல் நிபுணர்கள் கருத்துக்களுடன் அரசுக்கு அறிக்கை அளிக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது . இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது . 

பள்ளிகளைத் திறக்கும் முன் , அனைத்து ஆசிரியர்கள் , பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் . மாணவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில் , தமிழ்நாடு அரசு உரிய வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து , அதை பள்ளிகள் பின்பற்ற உத்தரவிட வேண்டும் கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


வீடியோக்களை மாணவர்களுக்கு அனுப்பக்கூடாது...?!

 யூடியூப் வீடியோக்களை மாணவர்களுக்கு அனுப்பக்கூடாது -தினகரன் நாளிதழ் செய்தி

யூடியூப்பில் பாடங்களை பதிவு செய்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அனுப்பக் கூடாது என்று முதன்மை கல்வி அலுவலர் உத்தர விட்டுள்ளார் . ஈரோடு மாவட்ட தலைமையாசிரியர்களுக்கான ஆன்லைன் கூட்டம் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் முருகன் தலை மையில் நேற்று முன்தினம் நடைபெற்றது . கூட்ட முடி வில் முதன்மை கல்வி அலுவ லர் வெளியிட்ட உத்தர வில் , பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும் . மாணவர் சேர்க்கை விவரங்களை தினமும் ஆன்லைனில் 

ஆசிரியர்களுக்கு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் . அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகம் வழங்கப் படவேண்டும் . அனைத்து ஆசிரியர்களும் தினமும் தங்கள் வகுப்பில் குறைந்த பட்சம் 10 மாணவர்களு டன் அலை பேசியில் தொடர்பு கொண்டு பாடங்கள் தொடர்பாக பேச வேண்டும் . ஆசிரியர்கள் மாணவ மாணவிகளின் கற்றல் விப ரங்களை பதிவேடுகளில் குறித்துவைக்க வேண்டும் அனைத்து ஆசிரியர்களும் வாட்ஸ்அப்மற்றும் கல்வி டிவி பாடப் பகுதிகளை மாணவர்கள் பார்க்கி றார்களா ? என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் . யூடியூப் வீடி யோக்களை வாட்ஸ்அப் குழுவில் அனுப்பக்கூ டாது . ஆசிரியர்கள் கூகுள் மீட் அல்லது ஜூம் செயலி மூலம் மாணவர்களிடம் நேரடியாக பாடம் நடத்த வேண்டும் . திங்கட்கிழமை மட்டும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் . மற்ற நாட்கள் சுழற்சி முறையில் 50 சதவீதம் வர வேண்டும் என சிஇஓ உத்தரவிட்டுள்ளார் .

Tuesday, July 13, 2021

துவங்கியது 3ம் அலை ஆய்வாளர் அதிர்ச்சி தகவல்

துவங்கியது 3ம் அலை ஆய்வாளர் அதிர்ச்சி தகவல் - தினமலர்




ஐதராபாத் : நாட்டில் கொரோனா மூன்றாம் அலை துவங்கி உள்ளதாக , ஐதராபாத் ஆய்வாளர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் . தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பல்கலையின் இயற்பியல் துறை நிபுணரும் , முன்னாள் துணை வேந்தருமான டாக்டர் விபின் ஸ்ரீவத்சவா , கொரோனா மூன்றாம் அலை தொடர்பாக சில ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார் . கடந்த 15 மாதங்களில் புதிய தொற்று பரவல் , இறப்பு தொடர்பான தினசரி பதிவுகளை பகுப்பாய்வு செய்துள்ள அவர் , 4 ம் தேதி கொரோனா மூன்றாம் அலை துவங்கியுள்ளதாக கூறுகிறார் . கடந்த பிப் . , மாதம் நாட்டில் இரண்டாம் அலை துவங்கியபோது பதிவான தொற்று பரவல் மற்றும் இறப்பு எண்ணிக்கை தொடர்பான புள்ளி விபரங்கள் , தற்போதைய நிலையுடன் ஒத்திருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார் .

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படாவிட்டால் , மூன்றாம் அலை வேகம் எடுப்பதை தடுக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார் .


12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அரசாணை வெளியீடு!!!

 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் முறை குறித்த அரசாணை வெளியீடு!!!

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020-2021 ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஏற்கெனவே இரத்து செய்யப்பட்டுள்ளன.

 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்வதற்காகப் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் , சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர் . பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அரசுக்கு தனது அறிக்கையை அளித்துள்ளது . 10 , 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன . 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு , அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 12 ஆம் வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களைக் கீழ்க்கண்ட விகிதாச்சார அடிப்படையில் வழங்க வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

அதைத்தொடர்ந்து அரசின்‌அரசாணை வெளியீடு செய்யப்பட்டது...

அரசாணை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்..Download here...

ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரலாம்..

 பள்ளிக்கல்வி ஆணையர் அடுத்த உத்தரவு வரும் வரை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல் !


தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பாட புத்தகங்களை வழங்குவது உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காக ஆசிரியர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரலாம் என்ற ஜாக்டோ அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்ததை அடுத்து புதிய மாணவர் சேர்க்கை மற்றும் மதிப்பீடுகள் உள்ளிட்ட சில நிர்வாகப் பணிகளுக்காக பள்ளிகளை மீண்டுமாக திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா 2 ஆம் அலை காரணமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக செயல்பட்டு வந்த பள்ளிகள் அனைத்தும் மீண்டுமாக மூடப்பட்டது. இதற்கிடையில் பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்தது.

இதை தொடர்ந்து அடுத்த 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கை, பாட புத்தகங்களை வழங்குவது, பள்ளிகளில் சுகாதார பணிகளை மேற்கொள்ளும் பணிகளுக்காக அனைத்து பள்ளிகளும் மீண்டுமாக திறக்கப்பட வேண்டும் எனவும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் உத்தரவின் படி, 100% ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.




மேலும், தினமும் வேலைக்கு வர, சங்க நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், ஜூன் 1 முதல், புதிய கல்வி ஆண்டு பணிகள் துவங்கின.அப்போது, கொரோனா ஊரடங்கு முழுமையாக அமலில் இருந்ததால், ஆசிரியர்கள் தினமும் சுழற்சி முறையில் மட்டும் பணிக்கு வந்தால் போதும் என, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் உத்தரவிட்டார்.


சுற்றறிக்கை

தற்போது, ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதால், பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட கல்வி பணிகளும் தீவிரமாகியுள்ளன. எனவே, தினமும் கல்வி பணிகளை மேற்கொள்ளவும், அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வர வேண்டும். பள்ளியில் இருந்தவாறு, 'ஆன்லைன்' வகுப்புகளை நடத்த வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.


சி.இ.ஓ.,க்கள் மீது புகார் இந்த சுற்றறிக்கைக்கு, ஜாக்டோ - ஜியோவில் உள்ள ஆசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.'கொரோனா தொற்று காரணமாக, ஆசிரியர்களின் உடல் நலன் பாதுகாப்பு கருதி, தினமும் பள்ளிக்கு வேலைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும், ஆசிரியர்களை தினசரி வேலைக்கு வர உத்தரவிட்ட கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மீது, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமாரிடமும், அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடமும் புகார் அளித்துள்ளனர்.


இதை தொடர்ந்து இந்த உத்தரவை ஆணையர் அவர்களின் உத்தரவின் கீழ் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஜாக்டோ நிர்வாக அதிகாரிகள், அம்மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட பிறகு, பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் அடுத்த உத்தரவு வரும் வரை அனைத்து ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு செல்லலாம் என ஜூலை 9 வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

பகிர்வு வழி :http://www.asiriyar.net/2021/07/blog-post_24.htm

முதல்வர் அறிவுரை..

அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு முறை கைத்தறி ஆடைகளை உடுத்த முதல்வர் அறிவுரை சார்ந்து செய்தி வெளியீடு!


 நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் அமைய வேண்டும் ” கைத்தறி , கைத்திறன் , துணிநூல் மற்றும் கதர்த்துறை ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுரை . 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று ( 13.07 2021 ) தலைமைச் செயலகத்தில் , கைத்தறி , கைத்திறன் , துணிநூல் மற்றும் கதர்த்துறையின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது . கைத்தறி மற்றும் துணிநூல் இக்கூட்டத்தில் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடித் திட்டங்களான வேட்டி , சேலை வழங்கும் திட்டம் மற்றும் பள்ளி மாணாக்கர்களுக்குச் சீருடை வழங்கும் திட்டம் குறித்தும் , நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திடும் வகையில் அவர்களுக்குத் தொடர் வேலைவாய்ப்பு அளிப்பது குறித்தும் , அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் நெசவாளர்களுக்குச் சென்றடைய உரிய அறிவுரைகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார் துறையின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் . துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் இதர நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய அணுகுமுறையாக , பாரம்பரியத்தை இளையதலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பது , அனைத்து வயதினருக்கும் ஏற்ற கைத்தறி ஆடைகளை வடிவமைப்பது , ஒருங்கிணைந்த விற்பனை வளாகங்களை உருவாக்குவது கைத்தறியை உயர் வருவாய் பிரிவினரிடம் கொண்டு செல்வதன் மூலம் நெசவாளர்களின் வருமானத்தை உயர்த்துவது , அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகளை உடுத்த அறிவுறுத்துவது , தமிழ்நாட்டின் நெசவிற்கு ஒரு வணிகப் பெயரை ( Branding ) உருவாக்குவது போன்ற அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார்

8ம் வகுப்பு / கணிதம் / இயல் 1 / எண்கள் / பகுதி 3

8ம் வகுப்பு / கணிதம் / இயல் 1 / எண்கள் / பகுதி 3
8ம் வகுப்பு / கணிதம் / இயல் 1 / எண்கள் / பகுதி 3 / விகித முறு எண்களை ஒப்பிடுதல் / ஏறுவரிசை -இறங்கு வரிசை, இடைப்பட்ட ஒரு விகிதமுறு எண்ணைக் கண்டறிதல்


View on YouTube

Monday, July 12, 2021

பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை !!!

 ஆசிரியர்கள் தினசரி பள்ளிக்கு வருவது குறித்து புகார் - பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை !!!


தமிழகத்தில் கொரோனா பரவல் குறைவாக உள்ளதால் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உதவிற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறுப்பு தெரிவித்து புகார் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் கடந்த ஆண்டு முதல் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆன்லைன் மூலமாக படிப்பதில் பல சிரமங்கள் உள்ளதால் பள்ளிகள் கட்டாயம் திறக்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் தேதி முறையாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்ததால் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புதிய கல்வியாண்டு ஜூன் 14 முதல் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே அனைத்து ஆசிரியர்களும் தினமும் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மேலும் ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகளில் இருந்தே நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பிற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பு ஆசிரியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக ஆசிரியர்கள் தினசரி பள்ளிக்கு வந்தால் உடல்நலன் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் தினசரி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில் விலக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் ஆசிரியர்களை தினமும் வேலைக்கு வர உத்தரவிட்ட கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மீது பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட்டு வரும் நிலையில், ஆசிரியர்கள் மட்டும் இவ்வாறு புகார் அளிப்பது சரி இல்லாத ஒன்றாக உள்ளது. இதனால் அரசு பள்ளிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். சுழற்சி முறையில் மட்டும் பள்ளிக்கு வருவோம் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அப்படியெனில் சுழற்சி முறையில் வரும் நாட்களுக்கு மட்டுமே சம்பளத்தை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

பகிர்வு வழி: daily tamilnadu

std7/maths/term1/exercise1.1/முழுக்களின் கூட்டல்

std7/maths/term1/exercise1.1/முழுக்களின் கூட்டல்
std7/maths/term1/exercise1.1/முழுக்களின் கூட்டல் ..


View on YouTube

back to top

Back To Top