Thursday, July 29, 2021

வாட்ஸ்அப்புக்கும் மாற்று செயலி..

 வாட்ஸ்அப்புக்கும் மாற்று செய்தி செயலி அறிமுகப்படுத்தும் மத்திய அரசு . 

உடனுக்குடன் மெசெஜ் அனுப்ப இந்தியாவின் ' சந்தேஷ் ' ஆப் அறிமுகம்!  

  ‌நாம் இருக்கும் இடம் தான் உலகம் என்று வாழ்ந்துகொண்டிருந்த காலம் போய் தற்போது நம் கைக்குள் உலகம் அடங்கியிருக்கிறது . ஸ்மார்ட்போன்கள் அவ்வாறு செய்திருக்கின்றன . இந்த டெக் உலகத்தில் சமூக வலைதளங்கள் தான் மக்களின் பிரதான சாய்ஸாக உள்ளது . முழு நேரமும் அதிலே மூழ்குபவர்களும் உண்டு . பார்மலிட்டிக்காக வைத்திருப்பவர்களும் உண்டு . அனைவரும் ஏதோ ஒரு சமூக வலைதளத்தைப் பயன்படுத்தாமல் இருக்க மாட்டார்கள் . உலகளவில் வாட்ஸ்அப் , பேஸ்புக் , ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் கோலோச்சுகின்றன .

இந்நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கவும் புதியவர்களை உள்ளிழுக்கவும் அவர்களின் பயன அனுபவத்தை மகிழ்ச்சியாக்க புதுப்புது அப்டேட்கள் , அம்சங்களை அறிமுகப்படுத்துகின்றன.

இம்மாதிரியான நேர் வழியில் சென்றாலும் நம்பிக்கையின்மையால் சந்தையில் நிலைத்து நிற்க குறுக்கு வழியிலும் ஈடுபடுகின்றன . அதாவது போட்டி நிறுவனங்களே இல்லாமல் ஆக்குவது அல்லது அந்நிறுவனத்தை பெரும் தொகைக்கு வாங்கி அதையும் தனக்கு கீழ் கொண்டுவருவது . பேஸ்புக் நிறுவனம் அப்படி தான் வாட்ஸ்அப்பையும் இன்ஸ்டாவையும் விலைக்கு வாங்கியது . இதனால் தங்களை தவிர வாடிக்கையாளர்கள் வேறு செயலியைப் பயன்படுத்த கூடாது என்ற நிலையை உருவாக்குகிறார்கள் . அவர்களுக்கு டிமாண்ட் அதிகரிக்க அதிகரிக்க நம் நாட்டில் அவர்கள் வைத்தது தான் சட்டமாக இருக்கிறது . இந்திய சட்டங்களுக்கு உடன்படாமல் மத்திய அரசுக்கு தண்ணி காட்டுகின்றனர் . உதாரணமாக மத்திய அரசின் புதிய ஐடி விதிகளுக்கு உடன்பட முடியாது என ட்விட்டர் நிறுவனம் சமர் புரிந்து வருகிறது . இது ஒருபுறம் என்றால் இந்தியர்களின் தனிப்பட்ட பிரைவசி தகவல்களும் திருடப்படுகின்றன . தரவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

சமீபத்தில் வாட்ஸ்அப் தனது வாடிக்கையாளரின் தரவுகளை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக அறிவித்திருந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம் . இதையெல்லாம் கருத்தில் கொண்டு மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவான சமூக வலைதளங்களை அறிமுகப்படுத்தி வருகிறது . ஏற்கெனவே ட்விட்டருக்குப் போட்டியாக கூ ( koo ) என்பதை அறிமுகப்படுத்தியது . இது இந்தியர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்றாலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை . 

     இச்சூழலில் தற்போது வாட்ஸ்அப்புக்கு போட்டியாக சந்தேஸ் ( sandes ) என்ற புதிய செயலி மற்றும் சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது . செய்தி ( Message ) என்பதற்கு இந்தியில் சந்தேஸ் என்று பொருள் . வாட்ஸ்அப்பில் இருக்கும் அனைத்தும் அம்சங்களும் இருப்பது போல் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது .

    இதில் ஒருவருக்கு மெசெஜ் செய்யலாம் , வீடியோ , புகைப்படங்கள் , பிடிஎஃப் ஆவணங்கள் என அனைத்தையும் அனுப்பலாம் . ஆரம்பத்தில் அரசு அதிகாரிகளும் ஏஜென்சி ஆட்களும் பயன்படுத்துவதற்காகவே இது அறிமுகப்படுத்தப்பட்டது . தற்போது பொதுமக்கள் உபயோகப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது . இதில் மொபைல் எண் அல்லது @ mygov.in என்ற இந்திய அரசின் மின்னஞ்சல் முகவரி கொண்டு புதிய கணக்கை உருவாக்கலாம் . ஜிமெயில் போன்ற இதர மெயில் ஐடி கொண்டு தொடங்க முடியாது . இதனை கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

App Download Here


No comments:

Post a Comment

back to top

Back To Top