🔴BIG BREAKING NEWS
உச்ச நீதிமன்றத்தின் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த தமிழக கல்வித்துறை தீவிரம்.
3 ஆண்டுகளுக்கு மேலாக பதவி உயர்வு நடத்தாத காரணத்தால் கிட்டத்தட்ட தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, நடுநிலைப்பள்ளி பட்டதாரி மற்றும் தலைமையாசிரியர் பதவி உயர்வு அதேபோல் பள்ளிக் கல்வித்துறையில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு என 6000 க்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன.
எனவே இத்தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு உடனடியாக பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தி தலைமையாசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் நேற்றே தகுதித்தேர்வு ஆசிரியர்களின் பட்டியலை கல்வித்துறை தயார் செய்துள்ளது.
இதற்கிடையில் இன்று மாலை அமைச்சர் தலைமையில் நடக்கும் கலந்தாலோசனைக் கூட்டத்தில் சங்க பொறுப்பாளர்களிடமும் இதைப்பற்றி தெரிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அதே போல ஆசிரியர்களுக்கென்று சிறப்பு தகுதித்தேர்வு நடத்துவது தொடர்பான முக்கிய முடிவும் இன்று எடுக்கப்படலாம்...
No comments:
Post a Comment