Thursday, July 29, 2021

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு விரைவில்...

 தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.- ( பத்திரிக்கை செய்தி ) 

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க முடிவு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என சென்னை , ஜூலை 28 : அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது . அக விலைப்படி வழங்குவதற்கான முடிவை தமிழக அரசு எடுத்துள்ள நிலையில் , அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப் படஉள்ளது .

கரோனா நோய்த் தொற்று காரணமாக , அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு கடந்த ஆண்டு ஏப்ரலில் நிறுத்தி வைக்கப்பட்டது . இதற்கான உத்தரவில் , 2021 - ஆம் ஆண்டு ஜூலை வரையில் அகவிலைப்படி உயர்வு வழங்குவது நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது . இப்போது அறிவிப்பு :  கரோனா நோய்த் தொற்று காரணமாக , மத்திய அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது . இந்த நிலையில் , அண்மையில் பிரத மர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கான முடிவு எட்டப்பட்டது . மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கும் போதெல்லாம் , தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வினை அறிவிப்பது வழக்கம்..

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் , அகவிலைப்படி உயர்வு வழங்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்கும் ஜூலை மாதம் நிறைவடையவுள்ளது . இதையடுத்து , தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

No comments:

Post a Comment

back to top

Back To Top