ஓ.பி.சி. பிரிவினருக்கு சாதிச்சான்று வழங்கும்போது கணக்கீடு செய்ய வேண்டிய வருமானம்...
ஓ.பி.சி. பிரிவினருக்கு சாதிச்சான்று வழங்கும்போது ஊதியம், வேளாண் வருமானம் கணக்கில் எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஓ.பி.சி. சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு புதிய ஆணை வெளியிட்டுள்ளது. இந்திய அரசு பணியிடங்களுக்கான நியமனங்கள் மற்றும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 27% இட ஒதுக்கீடு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) வளமான பிரிவினரை நீக்கி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் இந்திய அரசால் அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், வளமான பிரிவினரை நீக்குவதற்கான நெறிமுறைகளும் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. வளமான பிரிவினரை நீக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரம்பை கணக்கிடும் போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை சேர்க்கக்கூடாது என வழிகாட்டு நெறிமுறையையில் விளக்க அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1993ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.1லட்சத்திலிருந்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 2017ம் ஆண்டு ரூ.8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment