தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது மீண்டும் 58 - ஆக குறைப்பு ? " பாண்ட் " வழங்க ஸ்டாலின் தீவிர யோசனை...
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக குறைக்கலாம் என்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை வருடங்கள் அதிகரித்தார் . அதாவது 60 ஆக உயர்த்தினார் . இதனால் ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வு பெறும்போது செய்ய வேண்டிய செட்டில்மென்ட்கள் தாமதமாகும் என்பது எடப்பாடி பழனிச்சாமி அரசின் திட்டம் . 2 பல இளைஞர்களுக்கு வேலை தேவை தமிழ்நாட்டில் கடும் நிதி நெருக்கடி சூழ்ந்ததால்தான் , அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 - லிருந்து 60 ஆக கடந்த எடப்பாடி ஆட்சியில் உயர்த்தப்பட்டது . அதற்கான அரசாணையையும் பிறப்பித்திருந்தனர் . இதனால் புதிய வேலை வாய்ப்புகள் துறைகளில் உருவாகவில்லை . இளைஞர்களை வேலைக்கு எடுக்கும் புதிய நியமனங்களுக்கும் தடை விழுந்தது . ஸ்டாலின் விருப்பம் இந்த அரசுஇந்த நிலையில் , தற்போது , இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தில் உள்ள முதல்வர் ஸ்டாலின் , 60 ஆக உயர்த்தப்பட்ட அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக மாற்றியமைக்கலாமா ? என்று யோசிப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . 9 3 மாதத்தில் ஓய்வு தரலாமா குறிப்பாக , 60 வயதாக உயர்த்தப்பட்டதால் கடந்த ஆண்டு ஓய்வு பெற வேண்டிய ஊழியர்கள் மாதங்களாக பணியில் தொடர்கிறார்கள் . அவர்களை மேலும் 3 மாதங்கள் பணிபுரிய அனுமதித்துவிட்டு அவர்களை ஓய்வு பெற வைக்கலாம் என்று ஒரு ஆலோசனை நடந்துள்ளது . அப்படி ஓய்வுபெறும் போது அவர்களுக்குரிய ஓய்வூதிய பலன்களை கொடுக்க வேண்டும் ; அதற்கு மிகப்பெரிய அளவிலான தொகை அரசுக்கு தேவை ; ஆனால் , தற்போதையை நிதி நெருக்கடியில் அது சாத்தியமில்லை என்று நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . பாண்ட் கொடுக்கலாமா...கொடுக்கலாமா இதனை ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது . அப்போது , ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் இருந்து , 2 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றிக்கொள்ளும் வகையில் பாண்ட் ( பத்திரங்கள் ) கொடுத்து விட்டால் சமாளிக்கலாமே என்பதாக விவாதம் நடந்துள்ளது . பணமாக 1 தீவிர ஆலோசனை அதேநேரம் , பாண்ட் கொடுத்தால் அரசு ஊழியர்கள் ஏற்கமாட்டார்கள் ; 58 ஆக குறைப்பது சர்ச்சையையே ஏற்படுத்தும் யாரும் ஏற்க மாட்டார்கள் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . இருப்பினும் , எடப்பாடி அரசு போட்ட அரசாணையை ரத்து செய்ய என்ன வழிகள் இருக்கு ? அதற்கு தோதான நிதியை எந்த வழிகளில் உண்டாக்கலாம் என்கிற ஆலோசனை முற்றுபெறவில்லை . இதனை அறிந்து அரசு ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளனர்....
No comments:
Post a Comment