போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1998 முதல் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் 01.04.2003 பின்பு கைவிடப்பட்டு, அந்த தேதிக்கு பின் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு CPS திட்டம் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், போக்குவரத்து பணியாளர்களுக்கு மீண்டும் 1998 ஓய்வூதிய திட்டத்தையே அனைவருக்கும் (2003 க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கும்) நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்" என அறிவிக்கப்பட்டது. அதன் படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர போக்குவரத்துத்துறை துணை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்..மேலும், இந்த திட்டம் மூலம் பயன்பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கான தொகையையும் உடனடியாக தெரிவிக்கவும், முன்மொழிவை அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment