Saturday, December 28, 2019

இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரியுமா?

உள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா?


அரசு சர்வர்  சற்று மெதுவாகவே இயங்கும். 

காலை 10 மணிக்கு தொட்டு உங்கள் எலக்சன் ஐடியை போட்டால் உங்களுக்கு எந்த பூத்தில் பணி என்பது பத்துமணிக்கு தெரிந்துவிடும்.


Wednesday, December 25, 2019

தேர்தல் பணிக்குச் செல்பவரா நீங்கள்..?

தேர்தல் பணிக்குச் செல்பவர்கள் எடுத்துச் செல்ல வேண்டிய 50 வகையான முக்கிய பொருட்கள்.



1. தேர்தல் பணி  நியமன ஆணை

2. தேர்தல் அலுவலர் பணி விவரக் குறிப்பேடு

3. பல் துலக்கி

4. பற்பசை

5. துண்டு

6. கைலி

7. பனியன் மற்றும் இதர உள்ளாடைகள்

8. கைக்குட்டை

9. இரண்டு நாட்களுக்கு தேவையான உடைகள் (மேல் சட்டை, கால் சட்டை)

10. கைபேசிகள்

11. கைபேசி மின்னேற்றி

12. மின் சேமிப்பு கலன் (பவர் பேங்க்)

13. கையடக்க காது  ஒலிப்பான் (ஹெட் போன்)

14. முதலுதவி மாத்திரைகள் (தலைவலி, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, சளி, ஒவ்வாமை, தும்மல், காய்ச்சல், கால் வலி, விக்ஸ் மிட்டாய், விக்ஸ் தைலம், அமிர்தாஞ்சன், கால் வலி தைலம் மற்றும் இதர வகைகள்)

15. உடல் நல குறைபாடுகளுக்கு வழக்கமாக உண்ணும் மாத்திரைகள் (உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, வயிற்றுப் புண், புற்று நோய், இதய நோய், சிறுநீரக நோய், மன அழுத்த நோய், நரம்பு மண்டல நோய்கள் மற்றும் இதர வகைகள்)

16. மூக்குக் கண்ணாடி

17. சோப்பு

18. சீப்பு

19. தேங்காய் எண்ணெய்

20. விக்ஸ் மிட்டாய்

21. விக்ஸ் தைலம்

22. ஜண்டு பாம்

23. கால் வலி தைலம்

24. குளிர் பாதுகாப்பு கம்பளி மேலாடை (ஸ்வெட்டர்)

25. பனிக் குல்லா

26. பனி பாதுகாப்பு கழுத்துத் துண்டு (Scarf)

27. கையுறை, காலுறை (பனி மற்றும் கொசு கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள)

28. குடிநீர் குடுவை

29. பணம்

30. பேனா மற்றும் இதர ஸ்டேஷனரி பொருட்கள்

31. இரவில் அணியும் ஆடைகள் (டி சர்ட், நைட்டி போன்றவை)

32. குடை

33. பாலித்தீன் கவர்கள் (ஈர உடைகள் மற்றும் தேவையற்ற பொருள்களை வைக்க)

34. டிஷ்யூ பேப்பர்ஸ்

35. பழைய செய்தித் தாள்கள்

36. பவுடர்

37. முகக் கிரீம், முக பாதுகாப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்கள்

38. போர்வை

39. பெட்ஷீட்

40. கொசு வர்த்தி சுருள்கள், குட் நைட் அட்வான்ஸ் liquid, Odomas கிரீம்

41. டார்ச் லைட்

42. முகக் கண்ணாடி

43. தின் பண்டங்கள்

44. தலையணை

45. முகச்சவர பொருள்கள்

46. வீட்டு முகவரி எழுதப்பட்ட அட்டை

47.  அவசர தகவல் தெரிவிக்க வேண்டிய நபரின் கைபேசி எண்

48. நம்பிக்கையான மற்றும் வழக்கமாக பயன்படுத்தும் சீருந்து ஓட்டுநரின் கைபேசி எண்

49. புகைப்படத்துடன் கூடிய துறை அல்லது அரசு வழங்கிய அடையாள அட்டை



50. தனி நபருக்கான கூடுதல் தேவைப் பட்டியல் (மேலே உள்ள பட்டியலில் அடங்காத, தனிப்பட்ட நபரின் தேவைப் பட்டியல் மற்றும் Travel Bag etc...)

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஒரு வேண்டுகோள்...

மதிப்புமிகு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஒரு வேண்டுகோள்...


 இனி ஒவ்வொரு முறையும் தேர்தல் நடைபெறும் போது பள்ளி வகுப்பறைகளின் வெளிச்சுவர்களிலும்
,உட்சுவர்களிலும் *தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு போஸ்டர்கள் மற்றும் வாக்காளர்களின் சின்னங்கள் ,பெயர்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டும் போது எளிதாக மறுபடியும் எடுக்கும் வண்ணம் குறைவான பசைகளைக் கொண்டு ஒட்டுங்கள்*..


*ஏனெனில் சுவற்றிற்கு வெள்ளையடிப்பது போன்று பசையை தடவி ஒட்டுவதால்  வகுப்பறைகளில் பூசப்பட்ட வண்ணங்கள் அப்படியே பிய்ந்து வருகின்றது*..


யோசித்து பாருங்கள் நம் இல்லமோ,நம் அலுவலகமோ எனில் இப்படி செய்வோமா???

*தற்போது அரசு மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் பல பள்ளிகள் புத்தம் புது வண்ணமயமாக* *காட்சி அளிக்கின்றன*..
*அதனை வேதனைப்படுத்த வேண்டாமே*😭😭😭

எப்படியும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் கண்டிப்பாக ஒரு *ஆசிரியர் வாக்குச்சாவடி அலுவலராக பணி புரிவர்*..இதனை உணர்ந்து எடுத்துக்கூறுங்கள்

*அனைத்துப் பள்ளிகளும்* *நம் பள்ளிகளே*
*நம் பள்ளிகளும் நம் வீடுகளே*


*பள்ளிக்காக ஒரு ஆசிரியரின் வேண்டுகோள்*

AEBAS -பயோ மெட்ரிக் - New software Updates

AEBAS -பயோ மெட்ரிக் - New software Updates சார்ந்த இயக்குநர் அவர்களின் செயல்முறை.


RD serivce Driver uninstall செய்துவிட்டு புதிய RD Service Driver install செய்து Biometric வருகை நடைமுறைபடுத்த வேண்டும்.



உள்ளாட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களா நீங்கள்?

உள்ளாட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களுக்கான அறிவுரைகள்.



Vote Counting Supervisor And Asst Guide 2019 - Download here

 பொது

 1.1  தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் , 1994 , மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் ( தேர்தல்கள் ) விதிகள் , 1995 - ன்படி , ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன . வாக்கு எண்ணும் கடமை மற்றும் பொறுப்பினை ஏற்றுச் செயல்படுவதற்கு முன்னர் இது தொடர்பான நடைமுறைகள் பற்றி நீங்கள் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டியது மிக மிக இன்றியமையாததாகும் .

1 . 2 சாதாரணத் தேர்தல்களின்போது , கீழ்க்காணும் ஊராட்சிகளுக்கான தேர்தல்களில் வாக்குப்பதிவு ஒரே நேரத்தில் நடைபெறும் .

1 . கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்கள் ;
2 . கிராம ஊராட்சி தலைவர் தேர்தல்கள் ;
3 . ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல்கள் ; மற்றும்
4 . மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்கள் .



1 . 3 ஒரு வாக்குச்சாவடியில் நடைபெறும் மேற்கண்ட அனைத்து தேர்தல்களுக்கும் தனித்தனி வாக்குச்சீட்டுக்களில் வாக்குப்பதிவு செய்யப்பட்டு ஒரே நேரத்தில் ஒரே வாக்குப்பெட்டியில் போடப்படும் . அந்த வாக்குச்சாவடி இரு வார்டு வாக்குச்சாவடியாக இருப்பினும் , இரண்டு வார்டுகளுக்கான வாக்குச்சீட்டுகளும் அதே வாக்குப்பெட்டியில் போடப்படும் . மொத்தத்தில் வாக்களிக்கப்பட்ட நான்கு அல்லது ஐந்து வகையான வாக்குச்சீட்டுகளைக் கொண்ட ஒவ்வொரு வாக்குப் பெட்டியும் வாக்குகளை எண்ணுவதற்காக வாக்கு எண்ணுமிடத்திற்கு அனுப்பப்படும் . இந்நான்கு அல்லது ஐந்து வகையான வாக்குச்சீட்டுகளை எளிதாக அடையாளம் காண்பதற்கு ஏதுவாக  வெவ்வேறு வண்ணத் தாள்களில் அவைகள் அச்சிடப் பெறுகின்றன .

உள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரியுமா?

உள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா?




காலை 10 மணிக்கு தொட்டு உங்கள் எலக்சன் ஐடியை போட்டால் உங்களுக்கு எந்த பூத்தில் பணி என்பது பத்துமணிக்கு தெரிந்துவிடும்.

Monday, December 23, 2019

பள்ளி திறக்கும் நாள் 3.1.2020

பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு...

Saturday, December 21, 2019

ஆசிரியர்களின் வேலைச்சுமையைக்குறைக்கும் பொருட்டு மதிப்பெண்கள் பதிவேடு தயாரிக்க EXCEL APP

CCE E-Register

ஆசிரியர்களின் வேலைச்சுமையைக்குறைக்கும் பொருட்டு மதிப்பெண்கள் பதிவேடு தயாரிக்க EXCEL APP வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயன்பாட்டைப் பயன்படுத்தி வேலையை சற்று குறைத்துக் கொள்ளுங்களேன்... சிறு அறிமுக PDF file கீழே கொடுக்கப்பட்டுள்ளது Download செய்து பயன்படுத்துங்கள். இதில் ஏதேனும் குறைபாடு அல்லது சந்தேகம் ,வசதி   தேவை இருப்பின் BLOG ல் உள்ள CONTACT FORM மூலம் தொடர்பு கொள்ளுங்கள்..

Download CCE E- Reg Click Here

Thursday, December 19, 2019

அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்ய வருகிறது புது செயலி


பொதுவாக அரசுப் பள்ளிகளை முதன்மைக் கல்வி அலுவலா்கள், கல்வி மாவட்ட அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள்

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.12.19

திருக்குறள்


அதிகாரம்:துறவு

திருக்குறள்:348

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

விளக்கம்:

அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள். அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்

பழமொழி

Every dog has his day.

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. புறங் கூறுதல் மாணவனாகிய எனக்கு தகுதி அல்ல எனவே புறங் கூற மாட்டேன்.

 2. பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை இப்போது இருந்தே கடைபிடிக்க முயல்வேன்.

பொன்மொழி

மிக அதிக உயரத்தை அடைய விரும்பினால் கீழ் மட்டத்தில் இருந்து தொடங்குங்கள்...

----- சைரஸ்

பொது அறிவு

1. மனித உடலில் மிகவும் கெட்டியான தோல் எங்குள்ளது?

 கால் பாதத்தில் உள்ளது.

 2.மனிதனின் முதுகுத்தண்டில் எத்தனை எலும்புகள் உள்ளன?

33 எலும்புகள்.

English words & meanings

Jaundice -a medical condition in which the skin and white parts of the eyes become yellow. மஞ்சள் காமாலை.

Juridical - relating to judicial proceedings and the administration of the law.சட்டம் குறித்த சட்டம் சம்பந்தப்பட்ட

ஆரோக்ய வாழ்வு

துளசி இலைகளை எலுமிச்சை சாறு சேர்த்து விழுதாக அரைத்து தோல் நோய்களுக்கு பற்றுப் போடலாம் .இதனால் சொறி சிரங்கு போன்றவை முற்றிலும் குணமாகும்.

Some important  abbreviations for students

 CIA - Central Intelligence Agency

CPS - Child Protective Services

நீதிக்கதை

யார் ஏழை?

ஒரு பணக்கார அப்பா, அவர் குழந்தைகளை கிராமத்தை சுற்றி காட்ட அழைத்துச் சென்றார். இரண்டு நாள் ஒரு குடிசையில் ஏழை விவசாயிகள் கூட இருந்தாங்க. திரும்ப வரும் போது, அப்பா கேட்டார்,

ஏழை எப்படி இருக்காங்கன்னு பார்த்தியா?… இப்ப என்ன சொல்றே? மகன் சொன்னான் ஆமா..அப்பா..என் கிட்ட ஒரு நாய் குட்டி தான் இருக்கு. ஆனால் அவங்க கிட்ட நாலு இருக்கு.

நம்ம வீட்ல ஸ்விம்மிங் பூல், கார்டன்ல நடுவிலே இருக்கு. ஆனால் அவங்க வீட்டு பக்கத்துல அழகான ஆறு ஓடுது. நாம கலர் கலரா லைட் போட்டு, படங்கள் மாட்டி நம்ம வீட்டு அழகு படுத்தறோம். ஆனா அவங்க வீட்டுல் ரெயின்போ அழகு படுத்துது... நம்ம சுவரோட நம்ம வீட்டு எல்லை முடிஞ்சுடுது. ஆனால் அவங்களுக்கு கண்ணுக்கு எட்டுன் தூரம் வரை அவங்க எல்லை.

நாம காசு குடுத்து அரிசி வாங்குறோம். ஆனா இவங்க நம்ம கிட்ட அதை விக்கறாங்க. நம்மை பாதுக்காக்குறதுக்கு நம்மை சுற்றி சுவர் மட்டும் தான் இருக்கு... ஆனால் இவங்க பாதுகாப்புக்கு நண்பர்கள் இருக்காங்க.. அப்பா!..நாம எவ்வளவு ஏழைனு புரிய வைத்ததற்கு நன்றி அப்பானு சொன்னான். அவங்க அப்பா வாயடைச்சே போயிட்டார். அவருக்கும் இப்ப நிறைய விஷயங்கள் புரிஞ்சது.

வெள்ளி
சமூகவியல்

வேலூர் கோட்டை:           
            16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு கோட்டை ஆகும்.தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகில் உள்ள வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. விஜயநகரப் பேரரசுக் காலத்தில் நாயக்கர் மன்னரான குச்சி பொம்மு நாயக்கரால் கட்டப்பட்டது. இந்தியாவில் அகழியோடு கூடிய ஒரே கோட்டை என்ற பெயரைப் பெற்றது.  இக்கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டையில் மூன்று பக்கங்களில் தண்ணீர் உள்ளது. கிழக்குப் பக்கத்தில் நுழைவாயில் உள்ளது. இக்கோட்டையில் ஒரு  கோயில், ஒரு பள்ளிவாசல் மற்றும் ஒரு  தேவாலயம் உள்ளது.

இன்றைய செய்திகள்

20.12.19

◆உதகையில் உயர்கல்வி மாநாட்டை  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.

◆தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

◆குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்துவதை அடுத்து சென்னை பல்கலைக்கழகம் விடுமுறை அறிவித்தது. இந்நிலையில் மாநிலக் கல்லூரியும் விடுமுறையை அறிவித்துள்ளது.

◆ஓபிசி மாணவர்களுக்கு நவோதயா, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தனியாக இட ஒதுக்கீடு வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

◆அமெரிக்க அதிபர்  ட்ரம்ப்பின் பதவிக்கு ஆபத்து: பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கக்கோரும் தீர்மானம் நிறைவேற்றம்.

◆ சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இரண்டு முறை ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையை நேற்று முன்தினம் நடைப்பெற்ற போட்டியில்  குல்தீப் யாதவ் தன்வசப்படுத்தி உள்ளார்.

Today's Headlines

🌸Banwarilal Purohit, the Governor of Tamilnadu inaugurated the conference for higher education in Ooty.

🌸Due to the local body elections of TamilNadu, Anna University has announced that semester exams has been postponed.

🌸Chennai University and State college  have declared holiday due to the protests by the students against Citizenship amendment bill.

🌸Ministry of Human Resource Development has given consent to allot reservations for OBC students  in Navodhaya and Kendriya vidhyalaya schools.

🌸Threat to the post of American President Trump as the resolution to dethrone him was passed in the House of Representatives.

🌸Kuldeep yadav has set a remarkable record as the first Indian to take 'hatrick' wicket twice in ODI cricket in the match that took place the day before yesterday.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2s0Qa92

Wednesday, December 18, 2019

PINDICS EMIS -இல் பணி முடிப்பதற்கு நாட்கள் நீட்டிப்பு... SPD proceedings...

PINDICS EMIS -இல் பணி முடிப்பதற்கு நாட்கள் நீட்டிப்பு...

SPD proceedings...

100 மதிப்பெண்ணை 60 க்கு கணக்கிடும் எளிய வழி... அட்டவணை.

100 மதிப்பெண்ணை 60 க்கு கணக்கிடும் எளிய வழி... மிக எளிமையாக அட்டவணையை பார்த்து கணக்கிடலாம்.

100 to 60 marks table.... Click here...

அண்ணா பல்கலையை இரண்டாக பிரிக்க அரசு முடிவு


'கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகள், தமிழக அரசுக்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும். மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனங்களில், 69 சதவீத

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு


நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான

5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துதல் சார்பு - வழிமுறைகள் வெளியீடு

5,8 வகுப்புகளுக்கு அனைத்து வகைப்பள்ளிகளில் பொதுத்தேர்வு நடத்துதல் சார்பு - வழிமுறைகள் வெளியீடு

 

 

Proceedings View / Download Click Here.. 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.12.19

திருக்குறள்


அதிகாரம்:துறவு

திருக்குறள்:347

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

விளக்கம்:
பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.

பழமொழி

Don't bargain for fish which is still in the water.

கைக்கு வராததைக் கணக்கு பார்க்காதே.

இரண்டொழுக்க பண்புகள்

1. புறங் கூறுதல் மாணவனாகிய எனக்கு தகுதி அல்ல எனவே புறங் கூற மாட்டேன்.

2. பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை இப்போது இருந்தே கடைபிடிக்க முயல்வேன்.

பொன்மொழி

உற்சாகமான உழைப்பு இல்லாமல் உயர்ந்த வெற்றி எதையும் பெற முடியாது.
----- எமர்சன்.

பொது அறிவு

* நோபல் பரிசு எத்தனை  துறைகளுக்கு வழங்கப்படுகிறது?

ஆறு  துறைகள். (இயற்பியல்,வேதியியல்,மருத்துவம்,          பொருளாதாரம்,அமைதி,இலக்கியம்)

* நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?

சர்.சி.வி. ராமன்.

English words & meanings

Insectology – study of insects. பூச்சியியல். பூச்சிகளை குறித்த படிப்பு மற்றும் அறிவியல்.

Identical -similar in every detail. ஒரே மாதிரியான அல்லது ஒரே தன்மையுள்ள.

ஆரோக்ய வாழ்வு

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி,மிளகு மற்றும் சீரகம் சேர்த்து அரைத்து, தினமும் காலையில் சாப்பிட்டு வர ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.

Some important  abbreviations for students

at. no. - atomic number
at. wt. -  atomic weight

நீதிக்கதை

ஜோடிக் காக்கை
ஓர் ஊரில் பணக்காரன் ஒருவன் இருந்தான், அவன் ஒருநாள் தூங்கி எழுந்ததும் விடியற்காலையில் ஜோடியாக உள்ள காக்கைகளைக் கண்டால் அன்றைக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும் என்று கேள்விப்பட்டு அறிந்தான். தான் ஜோடிக் காக்கைகளைக் காலையில் எழுந்ததும் காண வேண்டும் என்ற எண்ணம் கொண்டான்.
அவ்வாறு எண்ணம் கொண்ட அப்பணக்காரன் தன் வேலைக்காரனை அழைத்து நீ விடியற்காலையில் ஜோடி காக்கைகளைப் பார்த்து வந்து என்னை எழுப்பு என்று கூறினான். அவ்வேலைக்காரன் மறுநாள் விடியற்காலையில் ஓர் இடத்தில் ஜோடிக் காக்கைகள் இருப்பதைப் பார்த்தான், உடனே ஓடிச் சென்று தன் எஜமானை எழுப்பினான்.
அப்பணக்காரன் படுக்கையிலிருந்து எழுந்து சென்று பார்க்கும் பொழுது அங்கே ஒரு காக்கை மட்டுமே இருந்தது. ஒரு காக்கையை மட்டும் பார்த்த பணக்காரன் கோபம் கொண்டு மற்றொரு காக்கை பறந்து செல்வதற்கு முன்னால் என்னை வந்து ஏன் எழுப்பவில்லை என்று சொல்லிக் கொண்டே வேலைக்காரனை அடித்தான். அப்போது அந்த வேலைக்காரன் எஜமானனே விடியற்காலையில் ஜோடிக் காக்கைகளைப் பார்த்தால் எனக்கு உண்டான அதிர்ஷ்டத்தைப் பார்த்தீர்களா? உங்களிடம் அடி வாங்கியதுதான் அதிர்ஷ்டம் என்று கூறினான். அதைக் கேட்ட பணக்காரன் ஆமாம் என்று சொல்லி அடிப்பதை நிறுத்திவிட்டான்.

வியாழன்
அறிவியல்

பூச்சிகளும் புதுமைகளும்:

1.) A ladybird might eat more than 5,000 insects in its lifetime. லேடிபர்ட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கரும்புள்ளி செவ்வண்டு தன் வாழ்நாளில் தீங்கு தரும் 5,000 பூச்சிகளை உண்டு அழிக்கும்.


2. ) A bee’s wings beat 190 times a second. ஒரு தேனீ ஒரு நொடியில் 190 முறை தன் இறக்கைகளை அடிக்கும்.

இன்றைய செய்திகள்
19.12.19

◆ஜிப்மரில் முதுநிலை மருத்துவத்துக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. டிசம்பர் 24-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் நிலையில், ஜனவரி 1-ம் தேதி வகுப்புகள் தொடங்குகின்றன.

◆ *'சூல்'* நாவலுக்காக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு 2019-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

◆கடைகளில் வாங்கப்படும் நொறுக்குத் தீனி, துரித உணவுகளில் அபாயத்தை ஏற்படுத்தும் அளவில் உப்பு, கொழுப்பு ஆகியவை இருப்பதாக, மத்திய அரசு நிறுவனமான அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

◆நிர்பயா  வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 கைதிகளில் ஒருவரான அக்சய் குமார் தண்டனையை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

◆ 17 வயதுக்குட்பட்ட மூன்று நாடுகள் மகளிா் கால்பந்து போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றது.

Today's Headlines

🌸 Entrance Examination result for Masters of Medicine in JIPMER has been released.  The classes begin on January 1, with the  counselling starting from December 24.

🌸Sahithya Academy award for the year 2019 was announced to S Dharman for his novel " sool".

🌸 Central government Organisation Science and Environmental Centre has warned that dangerous level of salt and fat, which is a risk factor is present in fast foods.

🌸 Highcourt dismissed the petition seeking review of the one of the 4 victims and affirmed the death sentence to Akshay Kumar,  in Nirbhaya case.

🌸22  killed in airstrikes in Idlib, Syria.  It is to be noted that many of those killed were children.

🌸 In the under 17 women football series India qualified for the finals.


Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2Pyowcr

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் விவரம் கோரப்படுகிறது.

பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்- தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் விவரம் கோரப்படுகிறது.



TNTP -உடற்கல்வி - தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான கையேடு.

PHYSICAL EDUCATION- TEACHERS HANDBOOK MODULE

உடற்கல்வி - தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான கையேடு.



பதிவிறக்கம் செய்ய👇👇👇

1. STD -1, TAMIL MEDIUM, CLICK HERE

2. STD -1, ENGLISH MEDIUM, CLICK HERE

3. STD -2, TAMIL MEDIUM, CLICK HERE

4. STD -2, ENGLISH MEDIUM, CLICK HERE

5. STD -6, TAMIL MEDIUM, CLICK HERE

6. STD -6, ENGLISH MEDIUM, CLICK HERE

OTHER CLASSES COMING SOON

IT Form Easy Basic Excel E-Register 2019 (updated)

IT  form Easy Basic Excel E-Register 2019

IT E-Reg Download Here..

Tuesday, December 17, 2019

டிஜிட்டல் வகுப்பு; நல்லொழுக்கக் கல்வி'-தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் குருவிமலை அரசுப் பள்ளி!



இந்தப் பள்ளியில் மாணவர்களுக்குச் செய்துகொடுக்கப்பட்டுள்ள

மேற்கு வங்கத்தை பின்பற்றி தமிழகத்திலும் கொண்டுவர வேண்டும்: பாடத்திட்டத்தில் பாம்புகள் குறித்த விழிப்புணர்வு பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை



மேற்கு வங்கத்தை பின்பற்றி மாண வர்களுக்கு பாம்புகள் பற்றிய விழிப்புணர்வை

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.12.19

திருக்குறள்


அதிகாரம்:துறவு

திருக்குறள்:346

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்.

விளக்கம்:

யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்.

பழமொழி

Change is the law of nature .

 மாற்றமே இயற்கையின் நியதி.

இரண்டொழுக்க பண்புகள்

1. புறங் கூறுதல் மாணவனாகிய எனக்கு தகுதி அல்ல எனவே புறங் கூற மாட்டேன்.

 2. பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை இப்போது இருந்தே கடைபிடிக்க முயல்வேன்.

பொன்மொழி

எளிமையும் தூய்மையும் ஒருவனை உயர்ந்த மனிதனாக மாற்றுகின்றன..

--- கெம்பில்.

பொது அறிவு

1.நாணயங்கள் செய்ய பயன்படும் உலோகம் எது?

நிக்கல்

2.ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் எரிப்பொருள் எது?

 மண்ணெண்ணெய்

English words & meanings

Hematology – study of blood. இரத்தம் குறித்த படிப்பு மற்றும் அறிவியல்.

 Habitable - suitable to be lived in. வசிக்க தகுந்த

ஆரோக்ய வாழ்வு

துளசி சாற்றையும் எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடுபடுத்தி சிறிது தேன் கலந்து தினமும் உணவுக்குப் பின்பு உட்கொண்டு வந்தால் உடல் எடை படிப்படியாக குறையும்.

Some important  abbreviations for students

c/o -  care of

CCTV  - closed-circuit television

நீதிக்கதை

பிறர் துன்பத்தில் இன்பம் காணாதே

ஒரு பணக்கார மாணவன் காலையில் நடைப்பயணம் செய்துக் கொண்டிருக்கும்பொழுது வழியில் அவனுடைய ஆசிரியரை கண்டான். இருவரும் உரையாடிக்கொண்டே அவர்களுடைய நடை பயணத்தை தொடர்ந்தனர். செல்லும் வழியில் ஒரு பழைய சட்டையும், காலனியும் மற்ற துணிகளையும் கண்டனர். அந்த மாணவன் ஆசிரியரிடம் அந்த ஆடைகள் இங்குள்ள வயல்வெளியில் வேலை செய்பவர்களுடையதாக இருக்கும் என்றான்.

அந்த சிறுவன் அந்த ஆடைகளை ஒளித்து வைத்து விளையாட முடிவெடுத்து ஆசிரியரிடம் கூறினான். அதற்கு ஆசிரியார் மற்றவர்களை துன்பப்படுத்தி அதில் நீ சந்தோஷம் காண்பது ஒரு நல்ல மனிதனுக்கு அழகல்ல. விளையாடிற்கு கூட மற்றவர்கள் நம்மால் துன்பப்படக்கூடாது என்று ஆசிரியர் கூறினார். நீ அவர்களிடம் விளையாடவேண்டும் என்று முடிவெடுத்து விட்டாய். எனவே நான் சொல்வதைபோல் விளையாடு என்று கூறினார்.

நீ பணக்கார மாணவன் தானே உண் கைகளில் அணிந்திருக்கும் இந்த மோதிரத்தை நீ அவர்களுக்கு கொடுக்க மனம் இருந்தால் அந்த விவசாயின் பழைய சட்டை பையில் இந்த மோதிரத்தை வைத்துவிட்டு ஒளிந்திருந்து நடப்பவற்றை பார் என்றார். அந்த மாணவனும் அவ்வாறே செய்தான். ஒரு வயதான விவசாயி அவருடைய ஆடையை எடுத்து அணியும் போது, அவருடைய சட்டை பையில் இருந்த மோதிரத்தை கண்டார். பிறகு சுற்றி சுற்றி பார்த்தார்.

அவர் கண்களுக்கு யாருமே தென்படவில்லை. உடனே, கதரி அழ ஆரம்பித்தார். இறைவனே என் மனைவி நோய்வாய்ப்பட்டு வீட்டில் இருக்கிறாள் அவளை குணப்படுத்த என்ன வழி என்று உண்னிடம் புலம்பினேன். யாரோ ஒரு நல்லவர் மூலமாக இந்த தங்க மோதிரத்தை எனக்கு அனுப்பி வைத்துவிட்டாய். உனக்கும் இந்த மோதிரத்தை வைத்துவிட்டு சென்ற அந்த நல்ல மனிதருக்கும் நன்றி என்று கூறிவிட்டு, என் மனைவியை குணப்படுத்த இது போதும் இறைவா என்று அந்த முதியவர் அழுதார். அதை பார்த்த அந்த மாணவன் மெய்சிலிர்த்து, அவன் கண்களில் நீர் ஒடியது. ஆசிரியர் மாணவனை பார்த்து நீ சொல்வதுபோல் செய்திருந்தால் மனவருத்தம்தான் மிஞ்சியிருக்கும். இந்த விளையாட்டால் உன் மனம் பேரானந்தத்திற்கு உள்ளாகியுள்ளது. அந்த மாணவனும் இனி என்மனதால் கூட மற்றவர்களுக்கு தீங்கு நினைக்கமாட்டேன் என்று உறுதி கூறினான்.

புதன்
கணக்கு

நேரம் மாறிப் போச்சு

*மணிகண்டன்*:
நான் என் பாட்டி வீட்டிலிருந்து எனது வீட்டிற்கு செல்ல ஒன்றரை மணி நேரம் ஆகும்.
வீணா:
என் மாமா வீட்டிலிருந்து என் தாத்தா வீட்டிற்கு செல்ல 90 நிமிடங்கள் ஆகும் ..

கேள்வி : மணிகண்டன் ,வீணா குறிப்பிட்ட நேர அளவுகள் ஒன்றே ,எப்படி???

விடை:
1 மணி =  60 நிமிடங்கள்
1.30 மணி என்பது 60 + 30 = 90 நிமிடங்கள்
எனவே இருவரும் கூறிய நேர அளவும் ஒன்றே...

இன்றைய செய்திகள்

18.12.19

◆ டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடப்பதை ஒட்டி  27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலில் 2,98,335 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

◆ டெல்லியில் மீண்டும் வன்முறை: குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மோதல், கல்வீச்சு, போலீஸ் தடியடி.

◆ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற இரு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 10 பேர் பலியாகினர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.

◆ இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்க அணியில்     6 புதுமுக வீரர்கள்.

◆ ஐசிசியின் மகளிருக்கான ஒருநாள் மற்றும்  டி20 அணியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா உள்பட 6 வீராங்கனைகள் தேர்வு.

Today's Headlines

*2, 98, 335 candidates from 27 districts have filed their nominations as local body elections are going to be conducted on  27th and 30th of this month.

*In protests against citizenship amendment act, violence bursts out in Delhi  again as clash, brickbat and also thwack by the police.

*In two bomb blasts that took place in Afghanistan, 10 lost their lives and 17 got injured.

*To play in a test series against England, 6 new players are introduced in SouthAfrican team.

*For ICCI women one day and T20 team, 6 indian players including Smrithi Mandhana are selected.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2PtwbsK

Festival Advance Application - 2019

Festival Advance Application Format - 2019




Festival advance Download Here - Doc format

Monday, December 16, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.12.19

திருக்குறள்


அதிகாரம்:துறவு

திருக்குறள்:345

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.

விளக்கம்:

பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு பொருளின் தொடர்பு எதற்காக?

பழமொழி

A man is known by the company he keeps.

 நம் நண்பர்களை வைத்தே நம்மை எடை போடுவார்.

இரண்டொழுக்க பண்புகள்

1. புறங் கூறுதல் மாணவனாகிய எனக்கு தகுதி அல்ல எனவே புறங் கூற மாட்டேன்.

 2. பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை இப்போது இருந்தே கடைபிடிக்க முயல்வேன்.

பொன்மொழி

உங்கள் எண்ணங்களை மாற்றினால் உங்களால் உலகையே உயர்த்த முடியும்.

---- நார்மன் வின்சென்ட் பீல்

பொது அறிவு

1. மராத்திய மாமன்னர் வீரசிவாஜி எதிரிகளின் கோட்டையை கைப்பற்றிய போது அவரின் வயது என்ன?

அவரின் வயது 13.

2. தாகூர் ஆரம்பித்த சாந்திநிகேதன் என்பதற்கு பொருள் என்ன?

சூரிய ஒளி பள்ளி

English words & meanings

Gynaecology - study of the reproductive parts of the women. பெண்களின் இனப்பெருக்கம் சம்பந்தப்பட்ட படிப்பு மற்றும் அறிவியல்.

Gainful - serving to increase wealth. ஆதாயமுள்ள

ஆரோக்ய வாழ்வு

தினமும் துளசி இலையை மென்று தின்றால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

Some important  abbreviations for students

YT = YouTube

DM = Direct Message

நீதிக்கதை

புரட்சி எண்ணம்

குளிர்ப் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணம் கொண்ட ஒரு சிட்டுக்குருவி வாழ்ந்து வந்தது. இலையுதிர்கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசையை நோக்கிப் பறக்க ஆயுத்தமாயின. ஆனால் இந்த சிட்டுக்க்குருவி மட்டும் அவைகளோடு செல்லக் கூடாதெனத் தீர்மானித்துவிட்டது. குளிர்காலம் வந்தது .

குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக்குருவி கலங்கிவிட்டது. கடைசியில் அதுவும் தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்த போது, அந்த குளிரின் கடுமையில் பறந்தால் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து இருந்த இடத்திலேயே இருந்துவிட்டது.

அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதனை பறக்கவிடாமல் செய்ததோடு அது மரத்தினின்று கீழே ஒரு விவசாயின் வீட்டு முற்றத்தில் வீழுந்துவிட்டது. அந்த முற்றத்தில் சென்று கொண்டிருந்த பசு ஒன்று அந்த சிட்டுக்குருவி மீது சாண்ம் போட்டுவிட்டுச் சென்றுவிட்டது. சிட்டு குருவிக்கு மூச்சு திணறினாலும் அந்த சாணத்தின் சூடு வெப்பம் அதற்கு இதமாக இருந்தது.

சூட்டினாலும், மூச்சுவிட முடிந்ததாலும், மகிழ்ச்சியுற்ற அந்த சிட்டுக்குருவி பாட ஆரம்பித்தது. அந்தப் பக்கமாக வந்த பூனை பாட்டு வரும் திசையை கண்டது. சாணத்தை அகற்றிப் பார்த்தது. பறவையை பார்த்ததும் மகிழ்ச்சியோடு அதை விழுங்கிவிட்டது.

செவ்வாய்
English

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Which is the biggest English alphabet that contains the most water in it?

♥Answer: The letter ‘C’.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

💁Interesting facts about English language-1

Capitonyms are words which change the meaning if the the first letter is capitalised for example:

♥Turkey (the country), turkey (bird)

♥ March (the month), march( to move)

இன்றைய செய்திகள்

17.12.19

◆உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. மனுக்கள் இன்று பரிசீலனை.

◆அனைத்துப் பள்ளிகளிலும் இசை ஒரு பாடமாக்கப்பட வேண்டும் என்று முதலாவது உலகத் தமிழ் இசை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

◆காயமடைந்த ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுவியுங்கள் என்று டெல்லி சிறுபான்மை ஆணையம், காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

◆ஏமனில் 2020-ம் ஆண்டில் வன்முறைகள் குறையும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

◆நியூஸிலாந்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Today's Headlines

🌸 The filing of nominations for the local government elections ended yesterday.  Nomination form Wil be reviewed today.

🌸In First World Tamil Music Conference resolution has been taken to make music as a subject of all schools in Tamilnadu

 🌸 The Delhi Minority Commission has ordered the police to immediately release the injured Jamia University students.

 🌸 United Nations organisation saysthat violence will decrease in Yemen by 2020

🌸 Australia won by 296 runs in the first Test against New Zealand.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/36y7Vvc

சிறந்த உலக கல்வி நிறுவனங்கள் - 2020

அந்த பட்டியல் இதோ...1. மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.,), யுனைடெட் ஸ்டேட்ஸ்

மாணவர் பட்டியல்: திருத்தம் செய்ய அவகாசம்

இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை

பிளஸ் 2 புத்தகத்தில் திருத்தம் ஆசிரியர் குழு அமைப்பு

சென்னை: பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடப் புத்தகங்களில் திருத்தம் மேற்கொள்ள

8ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!



ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் தேசிய வருவாய்வழிமற்றும்

Sunday, December 15, 2019

உங்கள் பகுதியில் இதுவரை யார் யார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் உங்கள் பகுதியில் இதுவரை யார் யார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டுமா?




பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.12.19

திருக்குறள்


அதிகாரம்:துறவு

திருக்குறள்:344

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.

விளக்கம்:

ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும். ஒன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும்.

பழமொழி

A danger forseen is half avoided

 முன் அறிந்த ஆபத்து பாதி தவிர்த்தது போல்.

இரண்டொழுக்க பண்புகள்

1. புறங் கூறுதல் மாணவனாகிய எனக்கு தகுதி அல்ல எனவே புறங் கூற மாட்டேன்.

 2. பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை இப்போது இருந்தே கடைபிடிக்க முயல்வேன்.

பொன்மொழி

நூற்றாண்டுகள் கடந்து இன்றும் வரலாற்றில் இடம் பெற்றவர்கள் அன்று முயற்சி, உழைப்பு இதனை இரு கண்ணாக கொண்டவர்கள் தான்

                  ....இறையன்பு

பொது அறிவு

1. வெள்ளையரை எதிர்த்து தனது பன்னிரண்டாவது வயதில் சிறை சென்றவர் யார் ?
.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சீதாராம் கேசரி.

2. சமூக சீர்திருத்தத்திற்கு பாடுபட்டு வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டவர் யார் ?

ஈ.வே.ரா.பெரியார்

English words & meanings

• Floristry – art of cultivating and selling flowers. மலர்களை உற்பத்தி செய்து அவற்றை வியாபாரம் செய்வது குறித்த அறிவியல்.

• Favourable -showing liking or approval. ஒத்த, உகந்த சூழல் அல்லது நிலைப்பாடு

ஆரோக்ய வாழ்வு

 தினமும் துளசி இலையை மென்று சாறை விழுங்கி வந்தால் குடல், வயிறு ,வாய் தொடர்பான பிரச்சினைகள் வாழ்நாள் முழுக்க வரவே வராது.

Some important  abbreviations for students

 * MA - Master of Arts

* M.PHIL - Master of Philosophy

நீதிக்கதை

அற்புதமான சிற்பி

ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா? அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா? என்று கேட்டார். தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.

பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார். அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டானர். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர். முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.

அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு சிற்பி, வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார். கடைக்காரர் வியந்தார். ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது! என்றார். தேவையற்ற சிந்தனைகளை நீக்கினால், பிறர் போற்றும்படியான வாழ்வை பெற முடியும்.

திங்கள்
தமிழ்
தாய தமிழ் சொற்கள் அறிவோம்

கிரயம் - விலை             
குதூகலம்    - அக்களிப்பு           
கோஷ்டி  -  குழாம்         
சக்தி   -   ஆற்றல்           
சகஜம் - வழக்கம்

இன்றைய செய்திகள்

16.12.19

◆சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.

◆அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி வடகொரியா மீண்டும் முக்கியமான ஏவுகணை பரிசோதனையை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

◆குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மத்திய பல்கலைக்கழகத் துணை வேந்தர்களைச் சந்தித்து உயர் கல்வி குறித்துப் பேசினார்.

◆சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ததையடுத்து இந்திய அணி முதலில் பேட் செய்யும் வாய்ப்பைப் பெற்றது.

Today's Headlines

*Chennai IIT student Fathima's suicidal case enquiry has been transferred to CBI.

*It  has been reported that North Korea has conducted an important missile test again violating the warning given by America.

*Indian President Ramnath Govind had an  interaction with the Vice-Chancellors of Central University regarding higher education today.

*In the one day match in Chennai chepauk stadium  between India and West Indies, as West Indies has won the toss and decided to field, Indian team has got the chance to bat first.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2YRLqOY

மாணவர்களுக்கு நாளைக்குள் மடிக்கணினி வழங்க வேண்டும் -பள்ளிக்கல்வித்துறை உத்தரவு



தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ஆணையில், 2017-18, 2018-19 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு

NMMS EXAM MAT ORIGINAL QUESTION PAPER

NMMS EXAM MAT ORIGINAL QUESTION PAPER - 2019



Click here to download 

TN EMIS Attendance App - Update New Version 0.0.15

TN EMIS Attendance App - Update New Version 0.0.15


Update click here..

வாக்காளர் பட்டியலில் உங்களின் பாகம் எண், வரிசை எண் அறிய (Part No ,Serial No)

Election 2019 - வாக்காளர் பட்டியலில் உங்களின் பாகம் எண், வரிசை எண் அறிய (Part No ,Serial No) - Direct Link வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் உள்ளதா என்று தெரிந்து கொள்ளுங்கள்...

உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை அறிய

EPIC No. search click Here..


தேசிய வாக்காளர் சேவைதளமான NVSP-யின் (https://www.nvsp.in/) எலக்ட்ரோல் தேடல் பக்கத்துக்குச் செல்லுங்கள் (Electoral Search). அதில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை இரண்டு வழிகளில் அறிந்துகொள்ள முடியும். 

1. உங்களைப் பற்றிய தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் உங்கள் பெயர் இருக்கிறதா என அறிந்துகொள்ளலாம்.
2. வாக்காளர் அட்டையில் இருக்கும் EPIC எண்ணைப் பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம்.



EPIC எண் இல்லையெனில்,

NVSP Electoral Search (எலக்ட்ரோல் தேடல்) பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.

Search by Details (தகவல்களை உள்ளீடு செய்து) என இருப்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு, அதில் உங்களின் பெயர், பாலினம், வயது, தொகுதி முதலிய விவரங்களைப் பதிவிட வேண்டும். பின் Search என இருப்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் சமயத்தில், Search பட்டனுக்குக் கீழ் உங்களின் பெயர் காண்பிக்கப்படும்.

EPIC எண் இருந்தால்,

NVSP Electoral Search  (எலக்ட்ரோல் தேடல்) பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.

Search by EPIC No என இருக்கும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

பிறகு, அங்குள்ள கட்டத்தில் EPIC எண்ணைப் பதிவுசெய்த பிறகு, மாநிலத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு பின் Search என இருப்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

அதன் பின்னர், உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும்பட்சத்தில், Search பட்டனுக்குக் கீழ் உங்களின் பெயர் காண்பிக்கப்படும்.

பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கு...

பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள்.




பணி நிறைவு என்பது ஒரு சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வருவதுபோலத்தான். பணி நிறைவுக்குப்பின் இருக்கும் ஒவ்வொரு நாளின் 24 மணி நேரமும் உங்கள் கையில். நீங்கள் விரும்பியதை உங்கள் விருப்பம்போல் செய்ய எந்த தடையும் இருக்காது. யாரிடமும் அனுமதி வேண்டி நிற்கவேண்டிய நிலை இருக்காது.

ஆனால் சில நினைக்கலாம். அலுவலகத்தில் பணியாற்றும்போது கிடைக்கின்ற மரியாதை நின்று போய்விடுமே என்று. ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். Out of sight is out of mind என்பார்கள்.

பணி நிறைவு பெற்றபின் நீங்கள் பணி புரிந்த இடத்திற்கு சென்று பாருங்கள். முதலில் சில நாட்கள் உங்களை சிரித்த முகத்தோடு வரவேற்கும் உங்கள் முன்னாள் நண்பர்களுக்கு பின்னர் நீங்கள் வேண்டா விருந்தாளியாகிவிடுவீர்கள். கூடியவரையில் நாம் பணிபுரிந்த இடத்திற்கு சில காலம் செல்லாமல் இருப்பதே நல்லது

எனக்குத் தெரிந்து ஒரு வங்கியில் வட்டார அலுவலகத்தில் பணி புரிந்த இருவர், பணி நிறைவுக்குப் பின் அருகில் இருந்த அவர்கள் பணியாற்றிய வங்கியின் கிளைக்கு வரைவு காசோலை எடுக்க எடுக்க சென்றபோது அதைத் தர வங்கியில் அதிகம் நேரம் எடுத்துக் கொண்டார்களாம்.

விரைவில் தரக்கூடாதா என கேட்டதற்கு, அங்கிருந்த ஊழியர்கள் உடனே வட்டார அலுவலகத்தை தொலை பேசியில் தொடர்பு கொண்டு, பணி நிறைவு பெற்ற அலுவலர்கள் கிளைக்கு வந்து பணி செய்யவிடாமல் இடையூறு செய்வதாக புகார் செய்தார்களாம். இத்தனைக்கும் அந்த முன்னாள் அலுவலர்கள், அங்கு இருந்த ஊழியர்களுக்கு மிகவும் தெரிந்தவர்கள்.

அதைப் பார்த்த மனம் வெதும்பிய அந்த முன்னாள் அலுவலர்கள் இனி இந்த கிளைக்கே வரக்கூடாது என எண்ணி திரும்பிவிட்டார்களாம். இது தான் உண்மை நிலை.

பதவி ஒய்வு பெற்ற நீதியரசர் சந்துரு அவர்கள் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், அவர் ஓய்வு பெரும் நாளில் நீதிமன்றத்தில் இருந்த 47 நீதிபதிகளில் 7நீதிபதிகள் மட்டுமே அவரை சந்தித்து வாழ்த்து சொன்னதாக சொல்லியிருந்தார்கள்.

ஒரு நேர்மையான நீதிபதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண குடிமகனுக்கு மட்டும் தனி மரியாதை கிட்டுமா என்ன?

எனவே பணியில் இருப்பதால் மரியாதை கிடைக்கிறது என எண்ணவேண்டாம். வேடிக்கையாக சொல்வார்கள். ஒரு மாவட்ட ஆட்சித்தலைவரின் செல்ல நாய்க்குட்டி இறந்தபோது அந்த ஊரே திரண்டுவந்ததாம் அஞ்சலி செலுத்த!

ஆனால் அந்த மாவட்ட ஆட்சித்தலைவர் இறந்தபோது ஒருவர் கூட அஞ்சலி செலுத்த வரவில்லையாம். இந்த யதார்த்த நிலையை புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் பெற்ற மரியாதை உங்களுக்கு அல்ல அது உங்கள் பதவிக்குத்தான் என்பதை.

எனவே பணி நிறைவுக்கு உங்கள் மன நிலையைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள். அந்த நாள் நெருங்க நெருங்க இயல்பாக இருங்கள். கடைசி நாளன்று உணர்ச்சி வசப்படாதீர்கள்.

பணி நிறைவுக்குப்பின் என்ன செய்யவேண்டும்?

1. உடல் நலமே உண்மையான சொத்து. Health is wealth. என்பதை உணருங்கள். தலை இருந்தால் எத்தனை குல்லாக்கள் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்பார்கள்.

இதுவரை புறக்கணித்த உடல் நலத்தை இனி பேணுங்கள்.தினம் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்யுங்கள். சிலர் நடைப்பயிற்சி என்ற பெயரில் நண்பர்களோடு பேசிக்கொண்டே செல்வார்கள். அது தவறு அல்ல. ஆனால் Walking தான் முக்கியமே தவிர Talking அல்ல.

2. நடைப்பயிற்சி செய்யமுடியாதவர்கள் கோயிலுக்கு சென்று பிரகாரத்தை சுற்றி வருவதைக்கூட செய்யலாம்.

3. தோட்டம் உள்ளவர்கள் புதிய பூச்செடிகள் நடுவதிலும், காய்கறிகளை பயிரிடுவதிலும் அவைகளைப் பராமரிப்பதிலும் நேரத்தை செலவிடலாம். பசுமையான செடிகள் வளர்வதையும், வண்ணப் பூக்களையும், நாம் பயிரிட்ட காய்கறிகளையும் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

4.  அளவோடு, நேரத்தோடு சாப்பிடுங்கள். அதுவும் இரவில் 7.30மணிக்கே சாப்பிட்டுவிடுவது நல்லது.

5. குறைந்தது 7 மணி நேரம் உறங்குங்கள்.

6. பல் மருத்துவரிடமும் பொது மருத்துவரிடமும் குறிப்பிட்ட இடைவெளியில் தவறாது சென்று பரிசோதனை செய்துகொள்ளவும். குறிப்பாக கண் பரிசோதனை, சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் , போன்றவைகளை கண்டிப்பாக பரிசோதனை செய்துகொள்ளவும்.

7. அதிக நேரம் தொலைக்காட்சி முன் அமர்ந்து நேரத்தை வீணாக்காமல் அருகில் உள்ள நல்வாழ்வு மன்றங்களோடு (Welfare Club) இணைத்துக்கொண்டு சமூக சேவைகள் செய்யலாம்.

8.  முடிந்தால் வசதியற்றவர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக பாடங்கள் சொல்லிக் கொடுக்கலாம்.

9. உறவினர்களையும் நண்பர்களையும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களை சந்தித்து அளவளாவி மகிழலாம்.

10. தற்பெருமையையும் ஆணவத்தையும் (Ego) விட்டோழியுங்கள்.

11.  நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்

12. யாருக்கும் தேவையில்லாமல் ஆலோசனையைவழங்காதீர்கள். ஏனெனில் கோரப்படாத ஆலோசனையை (Unsolicited advice) யாரும் விரும்புவதில்லை.

13. பண விஷயத்தில் முனைப்போடு இருங்கள். பணத்தை கண்டபடி செலவு செய்துவிட்டு பின் திண்டாடாதீர்கள்.

’கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்

எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை

இல்லாளும் வேண்டாள்; மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்

செல்லா(து) அவன்வாயிற் சொல்.’

என்ற ஔவைப் பாட்டியின் மூதுரையை நினைவில் கொள்ளுங்கள்.

பணி நிறைவில் கிடைக்கும் பணத்தை வங்கிகள் அல்லது அஞ்சலக மாத வருவாய் வரும் திட்டங்களில் முதலீடு செய்து நிம்மதியாய் வாழுங்கள். கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் அதிக வட்டி வட்டி தருவதாக சொல்லும் தனியார் நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்யாதீர்கள். அதுபோல பங்கு வணிகத்தில் தீவிரமாக இறங்கி சேமித்த பணத்தை இழக்காதீர்கள்.

பாசம் கண்ணை மறைக்க, கையில் உள்ள பணத்தை பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு கண்ணீரோடு அல்லல் படவேண்டாம். நம் பிள்ளைகள் தான். அவர்களுக்கு கொடுக்காமல் யாருக்குக் கொடுக்கப்போகிறோம். ஆனால் அவைகளை நம் காலத்திற்குப் பிறகு கிடைக்க வழி செய்வோம்.

‘பெட்டியிலே பணமில்லே பெத்தபுள்ளே சொந்தமில்லே’, ‘பானையிலே சோறிருந்தால் பூனைகளும் சொந்தமடா’ என்ற கவியரசர் கண்ணதாசனின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள்.

ஏனெனில் தங்களுடைய பணிக்கால கொடைகளை பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு பின்னால் கஷ்டப்பட்டவர்கள் பலர் உண்டு.

14. முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய் வருவதை தடுக்க அறிவாற்றல் சார்ந்த செயல்களான (Intellectual activities), புத்தகங்கள் படிப்பது குறுக்கெழுத்து புதிர்களில் கலந்துகொள்வது, இசைக்கருவிகளை இசைப்பது, தவறாமல் சமூகத்தொடர்பு (Social connections) கொண்டிருப்பது போன்றவைகளை செய்யலாம்.

ஏன் வயதான காலத்தில் இன்னொரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது கூட மனதை சுறுசுறுப்பாக (Mentally active) வைத்துக் கொள்ள உதவும்.

15. ‘பழைய நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும்போது, மூளையில் உள்ள திசுக்கள் சுறுசுறுப்பூட்டப்படுவதால் (Activate) அவைகள் அழிவது தடுக்கப்படுகிறது என்பதும், அதனால்முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு தடுக்கப்படுகிறது என்றும் அறிவியலார்கள் சொல்கிறார்கள்.

எனவே தினம் படுக்கப் போகுமுன் அன்று நடந்த நிகழ்வுகளை ஒரு முறை மனதில் நினைத்துப் பாருங்கள். இதுவும் ஒருவகையில் மனதில் நாட்குறிப்பு (Diary} எழுதுவது போலத்தான்.

ஆசிரியர் பணி தொழிலா? சேவையா ?

ஆசிரியர் பணி தொழிலா? சேவையா ?


🍑 *ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருக்கிறார்கள்.*

🌻அவர்களுக்கு ஆசிரியர் பாடம் நடத்துவதை ஒரு பார்வையாளராக கவனித்தால், அதன் மதிப்பு உங்களுக்குப் புரியாது.

🌻 *‘‘அவர்களுக்குப் பாடம் எடுங்கள்’’* என்று உங்களை வகுப்புக்குள் அனுப்பி வைத்தால், நீங்கள் போய் பாடமெடுத்தால் மட்டுமே, ஆசிரியரின் கடின உழைப்பு புரியும்.

🌻40 மாணவர்களையும் முதலில் அமைதியாக இருக்க வைக்க வேண்டும். அதற்கு கொஞ்சம் அதட்ட வேண்டும், கொஞ்சம் அன்பாகப் பேச வேண்டும், கொஞ்சம் கெஞ்ச வேண்டும்.

🌻‘‘பிரின்சிபல் (தலைமை ஆசிரியர்) கிட்ட சொல்லிருவேன்’’ என்று மிரட்ட வேண்டும். இதில் ஏதாவது ஒன்றை அதிகமாகச் செய்தாலும் பிரச்சனை வந்து விடும்.

🌻இப்போதெல்லாம் பலரும் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்வதால், குழந்தைகள்மீது அதிக பாசம் வைக்கிறார்கள்.

🌻பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தையின் முகம் லேசாக வாடினாலே பள்ளிக்குத் தேடி வந்து விடுகிறார்கள்.

🌻அதனால் ஆசிரியர்களால் அதிகம் அதட்டவும் முடியாது. அப்படி அதட்டாமல் அன்பாகச் சொன்னால் மாணவர்களை உடனே கட்டுப்படுத்தவும் முடியாது.

🌻 வகுப்பின் நேரமே 40 நிமிடங்கள்தான். அங்கே அன்பாகப் பேசி கட்டுப்படுத்த 15 நிமிடங்கள் எடுக்க முடியாது. பாடம் எடுத்து, அது ஒவ்வொரு மாணவருக்கும் புரிந்திருக்கிறதா?என்று கவனிக்க வேண்டும்.

🌻ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் என்றால், அதை மாணவர்கள் ஒழுங்காக நோட்டில் எழுதுகிறார்களா என்று சோதிக்க வேண்டும்.

🌻இப்படி 40 நிமிடங்களில் ஓர் ஆசிரியர் பெற்றோரை, மாணவரை, தலைமையாசிரியரை, கல்வித்துறை அதிகாரிகளை என பலரையும் திருப்தி செய்ய வேண்டும்.

🌻இவ்வளவையும் செய்து பாடத் திட்டத்தையும் சரியான காலத்தில் முடிக்க வேண்டும்.

🌻ஆசிரியர் தொழில் என்பது முழுக்க முழுக்க மனித மனங்களோடு உறவாடுவதுதான்.

🌻ஒரு பொறியாளர் மாதிரி வேலையை செய்துவிட்டுப் போக முடியாது. ஆசிரியர்களின் வேலையே பேசுவதுதான்.

🌻ஆசிரியர்கள் வகுப்பில் பாடத்தை ஒருமுறைதான் சொல்லிக் கொடுக்க முடியும். அதைத் திரும்பத் திரும்ப வீட்டில் படிக்க வைப்பது பெற்றோர்கள் கடமையே.

🌻இப்படி வகுப்பையும் கட்டுப்படுத்தி, ஒழுக்கத்தையும் போதித்து, கல்வியையும் போதிக்கும் ஆசிரியர்களை சரியாக ஒவ்வொரு  பெற்றோரும் புரிந்துகொள்ளும் போதுதான் அங்கே மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

 *ஆசிரியர்களைப் புரிந்து கொள்வோம்.*

மாத சம்பளம் வாங்குபவர்கள் கவனத்திற்கு...

மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்!


வங்கிகள் பல இருந்தாலும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க எஸ்பிஐ அதிரடியாக மிகச் சிறந்த சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது தொடர் வைப்பு நிதிஅதாவது ரெக்கரிங்க் டெபாசிட் ஆகும். அதிக லாபம் பெறக்கூடிய திட்டமும் இது தான்.

மாத சம்பளம் வாங்குவோர் இந்த திட்டத்தில் இணைந்து நல்ல லாபத்தைப் பெற முடியும். இது நிரந்தர வைப்பு நிதி திட்டத்தை போன்ற ஒரு சேமிப்பு திட்டமாகும்.
இந்த திட்டத்தில் இருக்கும் ஒரு மாபெரும் சிறப்பு சலுகை என்னவென்றால் வெறும் ரூ.100 இருந்தாலே வங்கியில் கணக்கை தொடர முடியும்.மாதம் 10 ரூபாய்முதல் இந்த கணக்கில் சேமிக்கலாம்.
குறிப்பாக இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிகப்படியான சலுகை வழங்கப்படுகிறது.
அவர்கள் சேமிக்கும் பணத்திற்கு, 7 சதவீதம் முதல் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
1 வருடம், 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள் என திட்டத்திற்கு ஏற்ப வட்டி விகிதங்கள்மாறுபடுகிறது. வழக்கமான சேமிப்பு கண்க்கில் வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு வட்டி விகிதம் கிடைக்குமோ அதை விட 1 சதவீதம் இதில் அதிகம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, December 14, 2019

Bio - Metric பதிவு நேர வித்தியாசம் - விளக்கம் கோரி மெமோ

Bio - Metric பதிவிற்கும் வருகைப்பதிவேடு கையொப்பம் நேரத்திற்கும் வித்தியாசம் - விளக்கம் கோரி மெமோ - Proceedings



Local Body Election Duties 2019

📛📛📛📛📛📛📛📛📛📛📛

*Local Body Election Duties*


📛📛📛📛📛📛📛📛📛📛📛
👇👇👇👇👇👇👇👇👇👇👇

*Duties of PO1 :*

1 Identification

2 Maintanance of Village
 Panchayat Ward Marked copy of Electoral

3 Issueing of Village pt ward Ballot paper

4 Note  serial no,part no of voter in the Counterfoil

5 Get  Signature of voter in the Counterfoil
------------------
For Two Ward Booth Another polling officer Do the  Same Duties of polling officer 1

Marking in the Marked copy of Electoral
Male -Underline
Female -Underline & Tickmark
---------------------------
*Duties Of PO2 :*

இடது ஆள்காட்டி விரலில் விரலில் அழியாத மை வைத்தல்
--------------------------------
*Duties of PO3 :*

1 Maintanance of Village Panchayat President Marked copy of Electoral

2 Issueing of Village Panchayat  President Ballot paper

3 Note  serial no,part no of voter in the Counterfoil

4 Get  Signature of voter in the Counterfoil
--------------------------
*Duties of PO4 :*

1 Maintanance of Union Councillors Marked copy of Electoral

2 Issueing of Union councillors Ballot paper

3 Note  serial no,part no of voter in the Counterfoil

4 Get  Signature of voter in the Counterfoil
---------------------------
*Duties of PO5 :*

1.Maintanance of District Councillors Marked copy of Electoral

2 Issueing of District  councillor Ballot paper

3 Note  serial no,part no of voter in the Counterfoil

4 Get  Signature of voter in the Counterfoil
-------------------------
*Duties of PO6 :*

1 Incharge of Ballot Box

2 Giving 2 sided Arrow CrossMark Rubber Stamp with ink

3  வாக்கு சீட்டை செங்குத்தாக நீளவாக்கிலும்,பின்பு குறுக்கே மடித்தல்

4 Confirmation of BP posted in Box
---------------------
*Colours of Ballot paper*

1.Dt Panchayat Ward -YELLOW

2.pt.union Council Ward  -Green

3.Village Pt.President -pink

4.Village pt .Ward -white(Single Ward) White&Blue(Double Ward )
----------------------------

📛📛📛📛📛📛📛📛📛📛📛

மாணவா்கள் விடுப்பு எடுத்தால் பெற்றோருக்கு குறுஞ்செய்தி: அரசுப் பள்ளிகளில் அடுத்த மாதம் முதல் அமல்

மாணவா்கள் விடுப்பு எடுத்தால், பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும்

தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் அகில இந்திய போட்டித் தோவுகளுக்கான நூல்கள்

அகில இந்தியப் போட்டித் தோவுகளுக்கான அரிய நூல்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு

Friday, December 13, 2019

வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வுக்கான கல்வித்தகுதி குறித்து புதிய அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வுக்கான கல்வித்தகுதி குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு

http://trb.tn.nic.in/beo2019/msg1.htm

Thursday, December 12, 2019

EMIS - PINDICS - HOW TO DONE THIS...

PINDICS SOME GUIDES WITH SCREEN SHOT AND TAMIL TRANSLATION IN PDF FORMATS...




PINDICS screen shots for reference click Here.


PINDICS details in Tamil click Here.

தமிழகத்தில் 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்.!



கேந்திரிய வித்யாலயா என்பது மனிதவள மேம்பாட்டுத் துறை

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.12.19

திருக்குறள்


அதிகாரம்:துறவு

திருக்குறள்:343

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

விளக்கம்:

ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றை யெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.

பழமொழி

A guilty  conscience needs no accuser

 குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள்

 1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

 2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்

பொன்மொழி

அன்பு இல்லாத மனிதம்  பற்றற்ற நிலைக்கு மாறும். ஞானமில்லாத பலனைத் தரும்

           .....கண்ணதாசன்

பொது அறிவு

1. தாஜ்மஹாலை உருவாக்கிய தலைமை சிற்பி யார்?

 இஸ்தாக் உஸ்தாத்.

2. வாஸ்கோடகாமாவின் கல்லறை எங்கு உள்ளது?

 கேரளாவிலுள்ள கொச்சியில்.

English words & meanings

• Embryology – study of embryos. முளையவியல் - தாயின் கர்ப்பத்தில் கரு உருவாகி வளர்ந்து வருவது குறித்த அறிவியல் பிரிவு.

 • Eager - ஆவலுள்ள

ஆரோக்ய வாழ்வு

 முள்ளங்கி சாறுடன் தேன் கலந்து சாப்பிட குடல் புண் வாய் புண் குணமாகும்.

Some important  abbreviations for students

IMO - In My Opinion

IRL - In Real Life

நீதிக்கதை

இதுதான் பார்வை!

ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது. அவ்வழியாக வந்த ஒருவன், ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான். அதற்குத் துறவி , இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை என்றார். சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான். அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான் என்றார்.

மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன் துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக் கேட்டதா? தயவு செய்து கூறுங்கள் என்று பணிவோடு கூறினான். உடனே துறவி, மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத் தான் கேட்டனர். என்றார்.

மிகவும் வியந்த அரசன், துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்? என்று கேட்டான். அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும். முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார். அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தொனித்தது. ஆனால் தாங்களோ மிகவும் பணிவாகப் பேசுகிறீர்கள் என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி.

வெள்ளி
சமூகவியல்

கோயம்புத்தூர்
சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம். தென்னிந்தியாவின் ஒரு முக்கிய ஜவுளி மற்றும் பொறியியல் மையம். இது தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என குறிப்பிடப்படுகிறது,தென்னிந்தியாவின் பண்டைய கொங்குநாடு பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும்.மேலும் ஜவுளி ஆலைகள், பொறியியல் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள்,  மற்றும் கல்வி நிறுவனங்கள் அதிகமாக உள்ளன.

இன்றைய செய்திகள்

13.12.19

◆குரூப்-1 நேர்முகத் தேர்வு திட்டமிட்ட தேதியில் நடக்கும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

◆வைகை அணையில் இருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு.

◆டிசம்பர் 2019 கணக்கெடுப்புப்படி நாடு முழுவதும் 344 தனியார் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

◆காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பெர்க், டைம்ஸ் இதழின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

◆சென்னை சேப்பாக்கத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் சில வீரர்கள் இன்று சென்னை வந்து சேர்ந்தனர்.

◆ஸ்பெயினில் புகழ்பெற்ற கால்பந்து லீக் போட்டியான லா லிகாவின் இந்தியாவுக்கான முதல் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

Today's Headlines

*TNPSC announces that the interview for Group-1 candidates will be conducted on the scheduled date.

*No objection to release water from vaigai dam for kiruthumal river ordered Highcourt.

*As per december 2019 census, 344 autonomous universities are functioning in India declares the HRD minister Ramesh Pokhriyal.

*Greta Thunberg, who continuously voices against climatic changes is selected as the best person in 2019 by  the  Times Magazine.

*Some Indian players under the captainship of Virat Kohli reached chennai today  for the one day match to be held on coming sunday in chennai chepauk stadium.

*Indian cricket's vice captain Rohith Sharma is appointed as India's first ambassador for Spain's famous football league La Liga.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/38zkckD

Departmental exam postponed....

துறை தேர்வு தேதி மாற்றம்:



வரும், 22ம் தேதி முதல், 30 வரை நடக்கவிருந்த துறை தேர்வுகள், உள்ளாட்சி தேர்தல் காரணமாக, ஜன., 5 முதல், 12 வரை நடக்கும்.டில்லி உட்பட, 33 மையங்களில் தேர்வு நடக்கும்
 தேர்வர்களின் ஹால் டிக்கெட்டை, டிச., 27 முதல், ஜன., 12க்குள் தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in ல் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.இத்தகவலை, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்து உள்ளது.

மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் பயணப்படி பெறவேண்டி விண்ணப்பம் .

மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் பயணப்படி பெறவேண்டி விண்ணப்பம்  மாதிரி படிவங்கள்..



Conveyance Full proposal click Here 


Traveling allowance click Here


Exam time table Half yearly 2019 updated

Erode district exam time table
Half yearly -2019


பழைய பாடத்திட்டத்தில் (OLD SYLLABUS) தேர்வு எழுத கடைசி வாய்ப்பு

12ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு பழைய பாடத்திட்டத்தில் (OLD SYLLABUS) தேர்வு எழுத கடைசி வாய்ப்பு:


மார்ச் 2020-ல் நடைபெறவுள்ள 12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று 11.12.2019 முதல் 20.12.2019 வரை தங்களின் விண்ணப்பத்தினைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். அதற்கு மேலும் சந்தேகம் எனில் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். இது ஒரு சேவை நோக்கத்திற்கான ஒரு வழிகாட்டுதல் மட்டுமே. உங்களுக்கு இந்த செய்தி பயன்படவில்லையொன்றாலும் மற்ற யாருக்காவது பயன்படலாம்.
என்றும் அன்புடன்.....
*மு.காதர்,*
முதுகலை வணிகவியல் ஆசிரியர், திருவண்ணாமலை.
செல்:- 9360235244.

Exam Time table - Half yearly 2019

Half yearly Exam time table - 2019 Erode Block.




Wednesday, December 11, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.12.19

திருக்குறள்


அதிகாரம்:துறவு

திருக்குறள்:342

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.

விளக்கம்:

ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.

பழமொழி

Anything valued where it belongs.

 எதுவும் இருக்கிற இடத்தில் இருந்தால் தான் மதிப்பு.

இரண்டொழுக்க பண்புகள்

 1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

 2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்

பொன்மொழி

உழைப்பின் சக்தியே உலகில் மிக உன்னதமானது.அதை வெற்றி கொள்ளும் ஆற்றல் வெறெந்த சக்திக்கும் கிடையாது-

ஆபிரகாம் லிங்கன்.

பொது அறிவு

1. மாவீரன் அலெக்ஸாண்டர் எந்த நோய் ஏற்பட்டதால் மரணமடைந்தார்?

மலேரியா . 

  2. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை தலைவராகப் பதவியேற்ற முதல் பெண் தலைவர் யார்?

 விஜயலட்சுமி பண்டிட்

English words & meanings

Dendrology – study of trees. மரங்கள் குறித்து படிக்கும் அறிவியல் பிரிவு.

 Declared -  to state something publicly. அதிகாரபூர்வமாகவும் ஒன்றை அறிவித்தல்

ஆரோக்ய வாழ்வு

 சுண்டைக்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

Some important  abbreviations for students

CIA - Central Intelligence Agency

CID - Criminal Investigation Department

நீதிக்கதை

நூலும் பட்டமும்

அப்பாவும், பிள்ளையும் சேர்ந்து பட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், கண்ணா! நூலினுடைய வேலை என்ன என்று சொல்லு பார்க்கலாம்? பையன் கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னான் நூல்தாம்ப்பா பட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு. அப்பா சொன்னார், இல்லை மகனே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு. பையன் சிரித்தான். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது. ஒழுக்கம் இப்படியானதுதான் மகனே!

அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால் அந்த சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய். ஒழுக்கம்தான் உன்னைக் கொடி கட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே என்றார்.

வியாழன்
அறிவியில்&கணினி
அறிவோம் அறிவியல்

ஒளி விலகல் மாயம்

 தேவையான பொருட்கள் :

ஒட்டும் குறிப்பு தாள், ஒரு மார்க்கர், ஒரு ஒளிபுகும் குப்பி, நீர்

 குப்பியில் நீர் நிறைக்கவும். பின்னர் குறிப்பு தாளில் இரு எதிரெதிர் அம்பு குறி வரையவும். பின்னர் அதை ஒரு சுவரில் ஒட்டவும். இப்பொழுது நீர் நிரம்பிய குப்பியை தற்போது அந்த குறிப்பு தாளுக்கு முன் மெதுவாக நகர்த்தி செல்லவும். தற்போது ஒரு அதிசயம் காணலாம். அம்பு குறி வலம் இடம் மாறி தெரியும்.



அறிவியல் உண்மை

ஒளி விலகல். எந்தவொரு ஒளி அலையும் ஓர் ஊடகத்திலிருந்து பிறிதொரு ஊடகத்துள் செல்லும்போது முறிவடையும் அல்லது விலக்கம் அடையும் . சுவற்றில் உள்ள அம்புக்குறி நீரை கடந்து வருவதால் இந்த ஒளித் தோற்றம் தோன்றுகிறது.

இன்றைய செய்திகள்

11.12.19

* 90 சதவிகித ரயில்களில் பயோ கழிவறை வசதி அமல்படுத்தப்படும் என  மக்களவையில் பியூஷ் கோயல் தகவல்.

*குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்.

*உலகிலேயே சீனாவில்தான் இந்த ஆண்டு பத்திரிகையாளர்கள் அதிகம் பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பத்தரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*கிரிக்கெட்டில் நடுவராக பணியாற்றி  ஸ்டீவ் பக்னரின் சாதனையை முறியடிக்க உள்ளார் அலீம் தார்.

*தமிழ்நாடு சடுகுடு பிரிமீயா் லீக் 2020 போட்டிகளுக்கான 8 அணிகளுக்கு 120 வீரா்களைத் தோ்வு செய்யும் முகாம் திருச்சியில் வரும் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

Today's Headlines

*Biotoilet facility will be implemented in 90% of rails says Biyush Goyal in Loksabha.

*Protest against citizenship amendment bill in North Eastern states.

*Maximum number of reporters were kept in prison in  china, which is the highest in the world, says reporters protection committee in a report.

*Aleem dhar to break Steve buckner's record as an umpire in cricket.

*Players selection camp for Tamilnadu Kabadi Premier League 2020 is  likely to be held in Trichy on 14th and 15th of this month in which  120 players for 8 teams will be selected.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/36qX0Dy

back to top

Back To Top