கேந்திரிய வித்யாலயா என்பது மனிதவள மேம்பாட்டுத் துறை
அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட அரசுப் பள்ளியாகும்.
இந்தியாவில் மொத்தம் 1094 பள்ளிகளும் வெளிநாடுகளில் மூன்று பள்ளிகளும் அமைந்துள்ளன.
இந்தப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசுப் பாடத் திட்டத்தின்கீழ் தரமான கல்வி வழங்கப்படுகிறது.
பொதுவான பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகள் பின்பற்றப்படுவதால் வேறு பள்ளிகளுக்கு மாறினாலும் குழந்தைகளின் கல்வித்தரம் பாதிப்படையாது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லாமல் உள்ளது.
2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் தேதி, மத்திய அரசாங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் 50 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளை புதிதாக உருவாக்க அரசாணை வெளியிடப்படுள்ளது,
இந்த 50 பள்ளிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்மூலம், 50 ஆயிரம் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.
தமிழகத்தில் 4 பள்ளிகளில் கோவை மாவட்டத்திலும், மதுரை மாவட்டத்திலும், சிவகங்கை மாவட்டத்திலும், திருப்பூர் மாவட்டத்திலும் அமைக்கப்பட திட்டமிடப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment