Tuesday, December 17, 2019

மேற்கு வங்கத்தை பின்பற்றி தமிழகத்திலும் கொண்டுவர வேண்டும்: பாடத்திட்டத்தில் பாம்புகள் குறித்த விழிப்புணர்வு பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை



மேற்கு வங்கத்தை பின்பற்றி மாண வர்களுக்கு பாம்புகள் பற்றிய விழிப்புணர்வை
கல்வித்துறை செய்ய வேண்டும் என்று பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாம்பு பற்றிய பல தகவல்களை கொண்ட பாடத் திட்டத்தை மேற்கு வங்க அரசு கொண்டு வந்துள்ளது. பாம்புகள் பற்றிய பொய்யான தகவல்கள், முதலுதவி செய்யக்கூடியவை, செய்யக் கூடாதவை, பாம்புகளின் படங்கள் என முழுமையான தகவல் கள் அனைத்தும் 8-ம் வகுப்பு பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
பாம்பு பால் குடிக்கும், கடித்த இடத்தில் வாய் வைத்து விஷத்தை உறிஞ்சுவது போன்ற தவறான புரிதல்களை விளக்கி விழிப்புணர்வு நோக்கத்துடன் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழக பள் ளிக் கல்வித் துறை பாடத்திட்டத் தில், பல்லுயிர் பெருக்கத்தில் பாம்புகளின் பங்கு என்ன என்ற அறிவியல் பாடம் மட்டுமே இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, 'கிராமப்புறங்களை அதிகமாக கொண்ட மாவட் டங்களுக்கு பாம்பு பற்றிய விழிப்பு ணர்வு அதிகம் தேவைப்படுகிறது. பாம்புகள் பற்றிய தகவல்களை முழுமையாக மாணவர்களுக்கு விளக்கும் வகையில் விழிப்புணர்வு செய்ய பள்ளிக் கல்வித் துறை ஆவன செய்யவேண்டும்' என்றனர்.
இது ஒருபுறமிருக்க, பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய பங்கு வகிக்கும் பாம்புகள் இனம் அழிந்துக் கொண்டும் இருக்கிறது. மனிதர்களின் கண்களில்படும் 85 சதவீத பாம்புகள் அடித்துக் கொல் லப்படுகின்றன.

No comments:

Post a Comment

back to top

Back To Top