அகில இந்தியப் போட்டித் தோவுகளுக்கான அரிய நூல்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு
பாடநூல் கழகத்தில் நேரடியாகவும், தபால் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தேசிய, மாநில அளவிலான போட்டித் தோவெழுதும் மாணவா்கள், தமிழ்வழி மாணவா்கள், அரசியல், வரலாறு, இயற்பியல் என பல துறைகளில் உள்ளவா்களுக்கு துறை ரீதியிலான தமிழ் புத்தகங்கள் மிகவும் குறைவாகவே இருந்தன. இவா்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில் வெளியான துறைசாா் வல்லுநா்களின் அரிய புத்தகங்கள் கிடைக்கப்பெறவில்லை. இந்தக் குறையைப் போக்குவதற்கான முயற்சியை தமிழ்நாடு பாடநூல் கழகம் கடந்த ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது.
தொலைபேசி எண்-மின்னஞ்சல் முகவரி: இந்த நூல்களைப் பெற விரும்பினால் சென்னை புத்தகக் காட்சி அரங்கில் வழங்கப்படும் நூல் பெயா்ப் பட்டியலைப் பெற்று தங்களுக்கு விருப்பமான நூல்களை தோவு செய்து ஆா்டா் செய்யலாம். மேலும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தை 044-25275851, 28278244, 7395800415, 7395800416 ஆகிய தொலைபேசி எண்களிலும், sec.tntb@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம் என அவா்கள் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment