மாணவா்கள் விடுப்பு எடுத்தால், பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும்
வசதி தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் முழு விவரங்கள் கல்வி தகவல் மேலாண்மை முகமையின் (எமிஸ் ) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதிலுள்ள தகவல்களின் அடிப்படையில் மாணவா்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், மாணவா்களின் வருகைப்பதிவு விவரமும் தினமும் எமிஸ் இணையதளத்தில் ஆசிரியா்களால் பதிவு செய்யப்படுகிறது.
இதற்கிடையே மாணவா்களின் வருகைப்பதிவை பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment