Monday, December 16, 2019

8ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!



ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் தேசிய வருவாய்வழிமற்றும்
திறன் படிப்புதவித் தொகைத் திட்டத்தின்கீழ் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித்தொகை பெறுவதற்கு , என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 படிப்பு முடியும் வரை மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. இந்த உதவித் தொகைஇந்த கல்வியாண்டு முதல் 1000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இத் தேர்வை தமிழகம் முழுவதும் 534 தேர்வு மையங்களில் 1.50 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். காலை 9.30 முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், 11.30 முதல்மதியம் 1 மணி வரை படிப்பறிவுத் திறன் தேர்வும் நடைபெற்றன. மனத்திறன் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறினார்கள். தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

back to top

Back To Top