'கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகள், தமிழக அரசுக்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும். மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனங்களில், 69 சதவீத
இட ஒதுக்கீடு காக்கப்பட வேண்டும்&' என, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது.இதுமட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கு மேம்பட்ட அந்தஸ்து வழங்கப்படும் போது, அது தனியாக, தன்னாட்சி பெற்ற மேம்பட்ட கல்லுாரியை போல இயங்க வேண்டும். நாட்டில் உள்ள மற்ற கல்லுாரிகளுக்கு இணைப்பு அந்தஸ்து வழங்குவது, தேர்வு நடத்துவது, சான்றிதழ் தருவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்று, ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், தமிழகத்தில், 500க்கும் மேற்பட்ட கல்லுாரிகள், அண்ணா பல்கலையின் இணைப்பு பெற்று செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகள் அண்ணா பல்கலையை, வேறு பெயரில் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.அரசாணைஇதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலையை இரண்டாக பிரிக்க, தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. ஒன்று, மேம்பட்ட நிறுவனமாக, &'அண்ணா இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ்&' என்ற பெயரிலும், மற்றொன்று, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு அந்தஸ்து வழங்கும் அண்ணா பல்கலை என்றும் செயல்பட உள்ளது.அதற்கேற்ற வகையில், தற்போதுள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகள், அவற்றுக்கான வளாகங்கள், நிர்வாக முறை போன்றவற்றை, இரண்டு நிறுவனங்களுக்கும் பிரித்து ஒதுக்கீடு செய்வது குறித்து முடிவு செய்ய, ஆலோசனை குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த குழுவில், அமைச்சர்கள் செங்கோட்டையன், அன்பழகன், சி.வி.சண்முகம், தங்கமணி ஆகியோரும், அதிகாரிகள் தரப்பில், நிதி துறை, சட்டத்துறை மற்றும் உயர்கல்வி துறை செயலர்கள் இடம் பெறுவர் என, உயர்கல்வி துறை சார்பில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment