Friday, August 27, 2021
7ம் வகுப்பு -கணிதம் -பயிற்சி 1.5 பகுதி -1 வினாக்கள் 1 முதல் 5 முடிய
7ம் வகுப்பு -கணிதம் -பயிற்சி 1.5 பகுதி -1 வினாக்கள் 1 முதல் 5 முடிய
View on YouTube
மூன்றாம் கட்ட ICT பயிற்சி ஒத்திவைப்பு...
மூன்றாம் கட்ட ICT பயிற்சி ஒத்திவைப்பு...
01.09.2021 முதல் பள்ளிகள் திறக்கப்பட
முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணகிரி.
Thursday, August 26, 2021
ICT-பயிற்சி III batch தகவல்
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான ICT பயிற்சியானது உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் உள்ள Hi tech Lab வழியாக வழங்கப்பட உள்ளது.
👉அனைத்து ஆசிரியர்களும் TN EMIS APP update செய்து வைக்கவும்.
👉 அனைத்து ஆசிரியர்களும் அவரவர் தனிப்பட்ட individual 8 Digit EMIS ID& pass word எழுதி வைத்துக் கொள்ளவும்.
👉ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் ஒரு பள்ளியில் எத்தனை ஆசிரியர் கலந்து கொள்ள வேண்டும், எந்த பயிற்சி மையத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப்படும்.
👉அதன்பின் Emis app ல் ஆசிரியர்கள் அவரவர் Emis ID பயன்படுத்தி log in செய்து பயிற்சி மையத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
👉 சனிக்கிழமை காலையில் log in செய்ய தயாராக இருக்க வேண்டும்.
👉31. 08.2021 தொடங்கி 5 நாட்கள் நடைபெறும்.
👉 பயிற்சி நேரம் 9.00 - 4.30
👉பயிற்சிக்கு பதிவு செய்த ஆசிரியர்களுக்கு விடுப்பு அனுமதி இல்லை. எனவே எந்த Batch ல் கலந்து கொள்வது குறித்து முன் கூட்டியே திட்டமிட்டு வைத்துக்கொள்ளவும்.
👉பயிற்சி log in செய்த பின் ஆசிரியர்கள் பயிற்சி நாள் ,இடம் மாற்ற இயலாது.
👉 இதுகுறித்து சந்தேகம் இருப்பின் பள்ளியின் ஆசிரியர் பயிற்றுநரை தொடர்பு கொள்ளவும்.
https://www.youtube.com/watch?v=qi3ujflPzxY&t=65s
https://www.youtube.com/watch?v=K60XWQ9g46s&t=11s
https://www.youtube.com/watch?v=W-Ac-NljhoE
https://www.youtube.com/watch?v=K60XWQ9g46s&t=11s
8ம்வகுப்பு/கணிதம்/ பயிற்சி 1.6/ பகுதி 2 / கணக்கு எண் 5 முதல் 8 முடிய ...
8ம்வகுப்பு/கணிதம்/ பயிற்சி 1.6/ பகுதி 2 / கணக்கு எண் 5 முதல் 8 முடிய ...
View on YouTube
Wednesday, August 25, 2021
12 மாதங்களுக்கு விடுப்பை நீட்டித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவம்.
9 மாத மகப்பேறு விடுப்பில் இருப்பவர்கள் தற்போது 12 மாதங்களுக்கு விடுப்பை நீட்டித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவம்.
மகப்பேறு விடுப்பானது 2021 ஜூலை 1முதல், 270 நாள்களில் இருந்து 365 நாள்களாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. (அரசாணை எண். 84. மனிதவள மேலாண்மைத் துறை, நாள். 23.08.2021)
எனவே, 01.07.2021 அன்று அல்லது அதற்குப் பிறகு 270 விடுப்பு முடிந்து பணியில் சேர்ந்து இருந்தாலும் கூட அவர்கள் மீண்டும் விண்ணப்பித்து, ஏற்கனவே அனுபவித்த 270 விடுப்பு நாள்களுடன் சேர்த்து, மொத்தம் 365 நாட்களுக்கு மிகாமல் மகப்பேறு விடுப்பினை அனுபவித்துக் கொள்ளலாம்.
8ம் வகுப்பு - கணிதம் - பயிற்சி 1.6 - அடுக்குக்குறி விதிகள் - பகுதி - 1
8ம் வகுப்பு - கணிதம் - பயிற்சி 1.6 - அடுக்குக்குறி விதிகள் - பகுதி - 1
View on YouTube
தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை..
ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை ஆசிரியர் , மாணவர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை..
செப் .1 - ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு - ஆசிரியர் , மாணவர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் : தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை என அறிவிப்பு மாணவர்கள் , ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகே கல்லூரிக்கு வரவேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு கட்டாய விடுப்பு என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . தமிழகத்தில் கல்லூரிகள் அனைத்தும் வரும் செப் .7 - ம்தேதி திறக்கப்பட உள்ளன . அதன்படி , அனைத்து வகையான கலை அறிவியல் கல்லூரிகள் பின்பற்றவேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது . அதில் , கூறப்பட்டுள்ளதாவது : மாணவர்கள் , ஆசிரியர்கள் , பணியாளர்கள் அனைவரும் இரு தவணை தடுப்பூசிகளையும் கட்டயாம் போட்டுக் கொண்டிருக்க வேண்டும் . தடுப்பூசி போடாதவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் . தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் விவரங்களை அரசு கேட்கும்போது வழங்க ஏற்றவாறு சேகரித்து வைக்கக் கொள்ளவேண்டும் .
கரோனா சிகிச்சை மையமாக உள்ள கல்லூரிகளில் இணையவழி வகுப்புகளையே தொடர விரைவில் முடிவு செய்யப்படும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் கூட்டி பெற்றோர்களின் ஆலோசனையைப் பெற்றிருக்க வேண்டும் . தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்குக் கல்லூரியிலேயே தடுப்பூசி போட சுகாதாரத் துறை மூலமாக ஏற்பாடு செய்ய வேண்டும் . நோய்த்தொற்று அறிகுறி உள்ள மான ர்கள் கும் , அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் ஆர்டி - பிசிஆர் சோதனை எடுக்க வேண்டும் .
மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்லூரிக்கு வர தேவையில்லை . கல்லூரி வளாகத்தினுள் பயன்படாத பிளாஸ்டிக் கப் , தேநீர் கப் , டயர்கள் , விஷ ஐந்துக்கள் தஞ்சமடையும் இடங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் . நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வழிகளில் கண்காணிப்புக் குழு அமைத்து , வழிகாட்டு நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் . சுத்தமான குடிநீர் வசதியை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் . இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது . பள்ளிகளில் அனுமதி இல்லைதமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன .
தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் , வரும் செப்டம்பர் 1 - ம் தேதி முதல் 9 , 10 , 11 மற்றும் 12 - ம் வகுப்புகள் சுழற்சி முறையில் இயங்கவுள்ளன . பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் , பள்ளி வளாகத்தைச் சுத்தமாக வைத்திருப்பதை பள்ளி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் . பள்ளிக்கு வரும் மாணவர்களை , வெப்ப பரிசோதனைக்கு பின் , வளாகத்தில் அனுமதிக்க வேண்டும் . கரோனா அறிகுறி உள்ள மாணவர்கள் , ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்க கூடாது . அவர்களுக்கு உடனடியாக கரோனா பரிசோதனை செய்யவேண்டும் . அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன .
இந்நிலையில் , சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 24 மணி நேர கரோனா தடுப்பூசி மையத்தின் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , “ பள்ளி ஆசிரியர்கள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் . அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா என்பது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது . தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியர்களை மட்டுமேபள்ளிகளுக்குள் அனுமதிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது . தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளுக்குள் அனுமதி இல்லை ” என்றார்.
Tuesday, August 24, 2021
Life time Validity TET Certificate..
TET தேர்ச்சி சான்றிதழ் வாழ்நாள் முழுதும் செல்லுபடியாகும். அரசாணை GO.Ms.No: 128 நாள் : 23.08.2021
மகப்பேறு விடுப்பு 12 மாதங்கள் அரசாணை
மகப்பேறு விடுப்பு 9 மாதத்திலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படுகிறது. அரசாணை GO. Ms. No : 84 நாள் : 23.08.2021
Download here..
Monday, August 23, 2021
6ம் வகுப்பு -கணிதம்- பயிற்சி 1.4 -எண்களின் மதிப்பீடு- முழுமைப்படுத்துதல், உத்தேச மதிப்பு
6ம் வகுப்பு -கணிதம்- பயிற்சி 1.4 -எண்களின் மதிப்பீடு- முழுமைப்படுத்துதல், உத்தேச மதிப்பு
View on YouTube
Friday, August 20, 2021
BRC யில் பட்டியலில் உள்ளபடி உங்களுக்கென ஒதுக்கப்பட்ட பயிற்சி மையத்தை எவ்வாறு BOOK செய்வது?
ICT - ஆசிரியர்கள், உங்களின் BRC யில் பட்டியலில் உள்ளபடி உங்களுக்கென ஒதுக்கப்பட்ட பயிற்சி மையத்தை எவ்வாறு BOOK செய்வது?
Thursday, August 19, 2021
புத்தாக்கப் பயிற்சி கட்டகங்கள் 2021-2022..
புத்தாக்கப் பயிற்சி கட்டகங்கள் 2021-2022..
10 வகுப்பு
கணக்கு click here for download..
Mathematics download click here..
அறிவியல் download click here..
Wednesday, August 18, 2021
பள்ளி திறப்பு செப்டம்பர் 1 மேல்நிலை வகுப்புகள் மட்டும்..
பள்ளிகள் திறப்பின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்.
9 முதல் 12 வகுப்புகள் வரை...
மேலதிக தகவல்களுக்கு...
Tuesday, August 17, 2021
01.08.2021 நிலவரப்படி ஆசிரியர் மாணவர் விகிதம் நிர்ணயம்...
குறைக்கப்பட்ட பாடத்திட்டம்...
கோவில் பெருந்தொற்று காரணமாக 1 முதல் 8 வரைகுறைக்கப்பட்ட பாடத்திட்டம் பக்கம் வாரியாக தமிழில்....
1 முதல் 5 வரை click here..
Sunday, August 15, 2021
Saturday, August 14, 2021
CE0 கள் பள்ளிகள் ஆய்வின் போது .....
CE0 கள் பள்ளிகள் ஆய்வின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை - Commissioner Proceedings.
மாணவ / 2021-2022 ஆம் நிதியாண்டுக்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு அரசால் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது . எனவே கீழ்குறிப்பிட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிகள் ஆய்வின் போது கவனத்தில் கொண்டு சத்துணவு வழங்குதல் தடையின்றி வழங்கப்படுதலை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 50 இலட்சம் மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர் . தற்போது கோவிட் -19 காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்களின் மதிய உணவை பெற்று கொள்ள முடியாத நிலை உள்ளது . மேற்கண்ட காரணமாக சில பின்தங்கிய மாணவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்திட குழந்தை தொழிலாளர்களாக மாறும் சாத்தியங்கள் உள்ளன . சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை ஏற்படுகிறது . இந்த நிலையால் பள்ளிகளில் இடைநிற்றலை கனிசமாக அதிகரிப்பதுடன் அவர்களின் எதிர்காலமும் வெகுவாக பாதிக்கிறது .
அரசாங்கம் இதை தவிர்த்திடும் வகையில் மதிய உணவு திட்டத்தில் ரொட்டி மற்றும் முட்டையும் சேர்த்து பள்ளிக் குழந்தைகளுக்கு தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கிட அரசின் பரிசீலனையில் உள்ளது . மேலும் , பள்ளிக் குழந்தைகள் யாரேனும் உடல் உழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனாரா என்பதை ஆய்வு அலுவலர்கள் மேற்பார்வை செய்து குறைகள் இருப்பின் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் மூலம் அவற்றை நிவர்த்தி செய்து பள்ளி மாணவர்கள் பயன்பெற தக்க வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் .
Friday, August 13, 2021
பாடத்திட்டம் குறைத்து பள்ளிக் கல்வி ஆணையர் அரசாணை வெளியீடு!*
📙📗📕📘📔📗📕📘📙📕
*1️⃣ முதல் 1️⃣2️⃣ ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைத்து பள்ளிக் கல்வி ஆணையர் அரசாணை வெளியீடு!*
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
8ம் வகுப்பு கணிதம் அடுக்குக்குறிகளும் படிகளும் - அடுக்கு குறி விதிகள்
8ம் வகுப்பு கணிதம் அடுக்குக்குறிகளும் படிகளும் - அடுக்கு குறி விதிகள் *பெருக்கல் விதி *வகுத்தல் விதி *படி விதி
View on YouTube
Tuesday, August 10, 2021
7ம்வகுப்பு/கணிதம்/ பயிற்சி 1.4 / std 7 / maths / exercise 1.4
7ம்வகுப்பு/கணிதம்/ பயிற்சி 1.4 / முழுக்களின் வகுத்தல்
View on YouTube
உண்மைத் தன்மை தேவை இல்லை RTI...
உண்மைத் தன்மை தேவை பற்றிய RTI தகவல்கள்..
S.S.L.C, +2, D.T.Ed ஆகிய சான்றிதழ்கள் 1994ஆம் ஆண்டிற்கு முன்பாக முடித்து இருந்தால் உண்மைத் தன்மை தேவை இல்லை RTI தகவல்...
Sunday, August 8, 2021
COVID-19 தடுப்பூசி போட்டு என்ன புண்ணியம்? இந்த 'மேட்டர்' தெரியாம போச்சே!
Whatsapp இன் மூலம் நீங்கள் Covid -19 தடுப்பூசி செலுத்தியதிற்கான சான்றிதழை pdf வடிவில் பெற்றுக்கொள்ளலாம்..
*Method*
°°°°°°°°°°°
🔵 முதலில் 9013151515 என்ற எண்ணை உங்கள் மொபைலில் Covid 19 Services என்று save செய்துகொள்ளுங்கள்.
🔵 அந்த எண்ணை whatsapp இல் open செய்து
" Download certificate"
என்று type செய்து அனுப்புங்கள்.
🔵 உடனே உங்கள் மொபைலில் message inbox இல் 6 இலக்க OTP வரும். அதை 30 விநாடிகளுக்குள் whatsapp இல் type செய்து அனுப்புங்கள்.
🔵 Type 1. for Downloading Cowin vaccination Certificate என்று message வரும்...
🔵 1 என்ற எண்ணை type செய்து அனுப்பவும்..
🔵 உடனே COVID vaccination certificate pdf வடிவில் download ஆகிவிடும்.
முயற்சி செய்து பாருங்கள்...
ஒப்படைப்புகள் மாதிரி. - கல்வித்துறை வெளியீடு
மாதிரி ஒப்படைப்புகள் - கல்வித்துறை வெளியீடு
1 முதல் 8ம் வகுப்பு வரை.
தமிழ் & English Medium
முதல் வகுப்பு மாதிரி ஒப்படைப்புகள்.
Mathematics, Environmental science
இரண்டாம் வகுப்பு மாதிரி ஒப்படைப்புகள்.
Mathematics, Environmental science
மூன்றாம் வகுப்பு மாதிரி ஒப்படைப்புகள்.
கணக்கு, அறிவியல், சமூக அறிவியல்
Mathematics, science, Social science
நான்காம் வகுப்பு மாதிரி ஒப்படைப்புகள்.
கணக்கு, அறிவியல், சமூக அறிவியல்
Mathematics, science, Social science
ஐந்தாம் வகுப்பு மாதிரி ஒப்படைப்புகள்.
கணக்கு, அறிவியல், சமூக அறிவியல்
Mathematics, science, Social science
ஆறாம் வகுப்பு மாதிரி ஒப்படைப்புகள்.
ஏழாம் வகுப்பு மாதிரி ஒப்படைப்புகள்.
எட்டாம் வகுப்பு மாதிரி ஒப்படைப்புகள்.
Saturday, August 7, 2021
ஆசிரியர்களின் மனக்குமுறல்...
அதிகாரிகள் எனும் மாமியார்களே...
பள்ளிகளில்
தரமான துணி கொடுக்க துப்பில்லை
தரமற்ற
செருப்பை
தட்டிக் கேட்க
நாதியில்லை
அரைகுறை
கிரேயான்ஸை
சரிசெய்ய
நேரமில்லை
நெளிகின்ற
ஜாமின்றி பாக்ஸை
நிமிர்த்தி வைக்க
நெஞ்சுரமில்லை
அஸைன்மென்ட் கேட்கும் வேகம்
குறிப்பேடுகளை வழங்குவதில் இல்லை
ஆன்லைனில் காட்டும்
அக்கறையை
மாணவர்க்கு புத்தகத்தை பெற்றுத்
தருவதில் இல்லை
மெமோ கொடுப்பதில்
காட்டும் வேகம்
பணிப்பலன், பணப்பலன்
பெற்றுத்தருவதில்
இல்லை
ஆசிரியர்களை
கண்டபடி
வசைபாடும்
உயர் (அழுத்த) அதிகாரிகளே !
மாணவர் சேர்க்கை
அதிகரிக்கச் சொல்லும் நீங்கள்தான்
மூலை முடுக்கெல்லாம்
தனியார் பள்ளிகளை
துவங்குவதற்கு
துணை
போனவர்கள்
மாணவர்களிடம்
கண்டிப்பை தவிர்த்து
அன்பாய் மட்டும்
பேசுங்கள் என்று
எங்களை வழிகாட்டும்
நீங்கள்
எங்களை மட்டும்
பிரஷர் மாத்திரை
சாப்பிடும்
அளவிற்கு
திட்டிதீர்ப்பது ஏன்?
ஆன்லைன்கல்வி தொடங்கி
செயலிவரை உங்கள்
கல்விப் பிரமாதம்
பெரிய மலைப்பு
எவ்வளவு புதுமைகள்
எத்தனை திட்டமிடல்கள்
எத்தனை மாற்றங்கள்
அசைன்மென்ட், ஆன்லைன் கல்வி
இன்னபிற
எண்ணிலடங்கா முறை
பெருங் கல்வியாளர்களின்
பெருத்த சிந்தனைகள்
அளவில்லா மதிப்பீடுகள்
விரட்டும் அதிகாரிகள்
மாநில ஆய்வுகள்
எத்தனை வேகம்
எவ்வளவு துல்லியம்
அடடா சிலிர்க்கிறது
நினைக்க நினைக்க
செம்மாந்த
உங்கள்துறை
வளர்ச்சி
மேதகு
கல்விப்புலிகளே
முதலில்
புள்ளிவிவரங்களை
தூக்கி வீசுங்கள்
வந்து
பள்ளி நிலவரங்களை
அலசுங்கள்
உங்கள் சந்தேக
கண்களை
அறிவால் முதலில்
கழுவுங்கள்
ஒவ்வோர் ஆசிரியனும்
படும்துயர் உணருங்கள்
ஊருக்கு இளைத்தவனாகி
எவன் வேணுமாலும்
அதட்டி மிரட்டும்
குருக்களின்
துயர்களை
முதலில் மனங்கொண்டு
உணருங்கள்
மாணவன் மனம்நோக
நடவாதீர் என
எங்களுக்கு
வகுப்பெடுக்கும்
அதிபுத்திசாலிகளே
எங்களின் மனக்குமுறல்கள்
உங்கள் மனங்கீறவில்லையா?
முதலில் உங்கள்
அறிவுக்கூர்மையை
சுயபரிசோதனை
செய்யுங்கள்
மனிதமற்று நிற்கிற
மழலைகளுக்கு
இக்காலத் தேவை
எதென்பதை தீர்க்கமாய்
தீர்மானியுங்கள
சொல்லிக்கொடுக்கும்
எங்களுக்கே
சொல்லிக் கொடுப்பதை
மூட்டை கட்டி விட்டு
மனிதம் சார்ந்த
கல்வியை
முன்னெடுங்கள்
வகுப்பறை சுதந்திரமாய்
செயல்பட விரும்பும்
நீங்கள் தான்
குருக்களின் கைகளில்
விலங்கிட்டே
வைத்திருக்கிறீர்கள்
இது
எங்கள் ஒட்டுமொத்த
மௌனத்தின்
முதல்குரல்
எழுத்தறிவித்தவன்
இறைவனென்று..
அவனுக்குப்
படையலிடுதலே
வழக்கம்
அவனையே
பலியிடுதலா
இக்கால வழக்கம்??
தெளியட்டும் குழப்பம்.
ஆசானின்
அவசியமுணருங்கள்
நாளை முதலேனும்
நற்பூக்கள் பூக்க
புதுவிதி எழுதுங்கள்..
ஒவ்வொரு
கிராமத்திற்கும்
தகுந்தவாறு
தங்களையே
மாற்றிக்கொண்டு
கல்வி போதிக்கும்
ஆசிரியர்களைப்
புரிந்துகொண்டு
ஊக்கப்படுத்தும்
அதிகாரிகளை
ஆவலுடன்
எதிர்பார்த்து
காத்திருக்கும்
ஆசிரியர்களில்
நானும் ஒருவன்...
தோழமையுடன்
சீனி. சந்திரசேகரன்
Friday, August 6, 2021
செப்.1 முதல் பள்ளிகள் திறக்க உத்தேசம்!..
தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் 09-08-2021 காலை 6 மணி முதல் வரும் ⏰⏰ 23-08-2021 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் வழிபாட்டிற்கு தடை!
செப்.1 முதல் 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க உத்தேசம்!
மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் வரும் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கண்காணிப்பு குழுக்கள் வீடு வீடாக சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடும்!
மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் இறைச்சி, மீன் கடைகளை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்ய அறிவுறுத்தல்!
6ம்வகுப்பு/கணிதம்/ பயிற்சி 1.3 / பகுதி 2 / கணக்கு எண் 7 முதல் 10 முடிய ...
6ம்வகுப்பு/கணிதம்/ பயிற்சி 1.3 / பகுதி 2 / கணக்கு எண் 7 முதல் 10 முடிய ...BIDMAS rule
View on YouTube
8ம்வகுப்பு/கணிதம்/ பயிற்சி 1.5 / பகுதி 2 / கணக்கு எண் 6 முதல் 10 முடிய ...
8ம்வகுப்பு/கணிதம்/ பயிற்சி 1.5 / பகுதி 2 / கணக்கு எண் 6 முதல் 10 முடிய ...
View on YouTube
Thursday, August 5, 2021
தலைவர்களின் சாதிப்பெயர்கள் நீக்கம் .. பாடநூல் கழகம் அதிரடி ஆக்சன்...
தமிழக பாடப்புத்தகங்களில் தலைவர்களின் சாதிப்பெயர்கள் நீக்கம் .. பாடநூல் கழகம் அதிரடி ஆக்சன்...
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் தமிழறிஞர்கள் , கவிஞர்கள் , அரசியல் தலைவர்கள் , சுதந்திர போராட்ட வீரர்கள் உள்பட தலைவர்களின் பெயருக்கு பின்னால் இருக்கும் சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன . திண்டுக்கல் ஐ லியோனி தலைமையிலான தமிழ்நாடு பாடநூல் கழகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது . " தமிழ்நாட்டின் சாலைகள் , தெருக்கள் மற்றும் அலுவலக கட்டடங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்படும்போது அவர்கள் பெயரின் பின்னால் இருக்கும் சாதிப்பெயர் இடம்பெறக்கூடாது " என்று தமிழ்நாடு அரசால் அரசானை வெளியிடப்பட்டு நடைமுறையில் இருக்கிறது . இதன்படியே தமிழ்நாடு பாடநூல் கழகம் சாதி பெயர்களை பாடப்புத்தகத்தில் இருந்தும் நீக்கும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது .
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிப் பாடப்புத்தகத்தில் தமிழறிஞர்கள் , கவிஞர்கள் , அரசியல் ஆளுமைகள் உள்ளிட்ட தமிழ்த்தலைவர்கள் பெயர்கள் நீண்ட காலமாக அவர்களின் சாதி பெயர்களுடன் தான் இருந்து வருகின்றன . இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு , பாடப்புத்தகங்களில் உள்ள தலைவர்களின் பெயருக்கு பின்னால் உள்ள சாதிப்பெயர்களை நீக்கியிருக்கிறது .
12 ம் வகுப்பு பாடம் :
தமிழ்நாடு பாடநூல் கழகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் படி , 12 ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருக்கும் " பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள் " என்ற பாடப்பகுதியில் , தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் என்றிருந்த பெயர் தற்போது உ.வே.சாமிநாதர் என மாற்றப்பட்டிருக்கிறது . ராமலிங்கம் பிள்ளை அதேபோல் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பதை மீனாட்சி சுந்தரனார் என்று மாற்றப்பட்டிருக்கிறது . மேலும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்பதை ராமலிங்கம் எனவும் மாற்றி தமிழ்நாடு பாடநூல் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது .
பாடநூல் கழகம் :
மேலும் தமிழின் முதல் நாவலாசிரியரின் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்ற பெயரை வேதநாயகம் என்று மாற்றி உள்ளது . இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரான சி.வை.தாமோதரம் பிள்ளை என்ற பெயரை சி.வை.தாமோதரம் என்று மாற்றி உள்ளது.இதேபோல் தான் பல்வேறு தலைவர்களின் பெயருக்கு பின்னால் இருக்கும் சாதிப்பெயரை நீக்கி தமிழ்நாடு பாடநூல் கழகம் புதிய திருத்தம் மேற்கொண்டு உள்ளது . விரைவில் அனைத்து வகுப்பு பாடப்புத்தகங்களிலும் சாதிகளை நீக்கும் , பெயர் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
source : oneindia.com
ஆசிரியர்கள் கணக்கெடுக்க அரசு உத்தரவு.
அரசு பள்ளி ஆசிரியர்கள் கணக்கெடுக்க அரசு உத்தரவு.
சென்னை : அரசு பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கையை , மாணவர் விகிதத்துக்கு ஏற்ப கணக்கெடுத்து பட்டியல் அனுப்புமாறு , பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது . தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் , மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது . மேலும் , அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு , கற்பித்தல் பயிற்சிகள் வழங்கவும் , ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தவும் , பள்ளி கல்வி இயக்குனரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது . இந்நிலையில் , அரசு பள்ளிகளில் காலியாக மற்றும் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கண்டறிய , கணக்கெடுப்பு பணிகளை , பள்ளிக்கல்வி துறை துவங்கியுள்ளது . பள்ளிக்கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குனர் பொன்னையா , முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அதில் கூறியிருப்பதாவது :
அனைத்து அரசு பள்ளிகளிலும் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை , ஆக . , 1 ம் தேதி நிலவரப்படி , மாணவர் எண்ணிக்கை விகிதத்தின் படி , கணக்கெடுக்க வேண்டும் . வகுப்பு வாரியாகவும் , தமிழ் , ஆங்கில வழி மாணவர் எண்ணிக்கையிலும் கணக்கிட வேண்டும் . முந்தைய ஆண்டுகளில் உபரியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களை , பள்ளி கல்வி துறையிடம் ஒப்படைத்திருந்தால் , அந்த இடங்களை கணக்கில் எடுக்கக் கூடாது . இந்த விபரங்கள் அனைத்தையும் , பள்ளி கல்வி துறையில் , கல்வி மேலாண்மை , ' டிஜிட்டல் ' தளமான , ' எமிஸ் ' வழியாக , ' ஆன்லைனில் ' பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு , அதில் கூறப்பட்டுள்ளது .
std 8 / maths / ex 1.5 / Q1 to Q5. 8ம் வகுப்பு கணிதம் பயிற்சி 1.5 வினாக்கள் 1 முதல் 5 முடிய...
std 8 / maths / ex 1.5 / Q1 to Q5. 8ம் வகுப்பு கணிதம் பயிற்சி 1.5 வினாக்கள் 1 முதல் 5 முடிய... கனம் மற்றும் கனமூலம் தொடர்பான கணக்குகள்
View on YouTube
பள்ளிக் கல்வி - மாநில நல்லாசிரியர் விருது வழங்கும் பொருட்டு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்களை அனுப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!! & இணைப்பு அரசாணை
பள்ளிக் கல்வி - மாநில நல்லாசிரியர் விருது வழங்கும் பொருட்டு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்களை அனுப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!! & இணைப்பு அரசாணை.
Wednesday, August 4, 2021
std 7 / maths / ex. 1.3 / 7ம் வகுப்பு கணிதம் பயிற்சி 1.3
std 7 / maths / ex. 1.3 / 7ம் வகுப்பு கணிதம் பயிற்சி 1.3 அனைத்து வினாக்களும் தீர்வுகளும்..
View on YouTube
std 8 / maths / ex 1.4 / Q9 to Q15 / 8ம் வகுப்பு கணிதம் பயிற்சி 1.4 வினாக்கள் 9 முதல் 15 முடிய..
8ம் வகுப்பு கணிதம் பயிற்சி 1.4 வினாக்கள் 9 முதல் 15 முடிய..
View on YouTube
ஆசிரியர்களுக்கு on duty யில் தேர்வு எழுத அனுமதிக்கலாமா ?
துறைத்தேர்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு on duty ல் தேர்வு எழுத அனுமதிக்கலாமா ? TNPSC RTI விளக்கம் .
தகவல் அறியும் உரிமைச்சட்டம் , 2005 - ன் கீழ் தகவல்கள் கோரியுள்ள கடிதத்திற்கு தனியாளர் , திரும் , சயாவல் , கரூர் மாவட்டம் அவர்களுக்கு இதன் மூலம் தெரிவிப்பதாவது , அடிப்படை விதிகளில் விதி 9(6) (b) (iii) - ன் படி நகல் இணைக்கப்பட்டுள்ளது அரசுப்பணியாளர்கள் கலந்து கொள்ளும் எந்த ஒரு தேர்விற்கும் செல்வதை பணிக்காலமாக (on Duty ) கருதி துய்த்துக்கொள்ளலாம் . மேலும் அதே விதிகளின் கீழ் ஒரு குறிப்பிட்ட தேர்விற்கு அதிகபட்சமாக இருமுறைக்கு மேல் பணிக்காலமாக கருதி அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறார் . !
Tuesday, August 3, 2021
கோவிட் 19 சிறப்பு விடுப்பு
கோவிட் 19 சிறப்பு தற்செயல் விடுப்பு அரசாணை
ஒரு அரசு ஊழியரோ அல்லது அவரது குடும்பத்தினரோ, கோவிட் 19 பாதித்து
சிகிச்சையில் இருந்தாலோ, தனிமைபடுத்துதலில் இருந்தாலோ, அல்லது அவர்களின் குடியிருப்பு Containment zone பகுதியில் இருந்தாலோ இவர்கள் பணிக்கு வராத முழு நாட்களும் சிறப்பு தற்செயல் விடுப்பாக (Special Casual Leave) கருதப்படும்.
See Government Order para, 5 (vi)
Monday, August 2, 2021
உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு .
ஆகஸ்ட் 3 - தீரன் சின்னமலை நினைவு நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு .
ஈரோடு மாவட்டம் , சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் ஆடித்திங்கள் 18.
03.08.2021 செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்படுவதால் அரசாணையின்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து ஆணையிடப்படுகிறது . உள்ளூர் விடுமுறை நாளான 03.08.2021 செவ்வாய்க்கிழமை அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட வேண்டியது எனவும் ஆணையிடப்படுகிறது .
கல்வி டிவி நிகழ்ச்சி நிரல் ஆகஸ்ட் முதல் வாரம்..
ஆகஸ்ட் 2 முதல் ஒளிபரப்ப உள்ள கல்வி தொலைக்காட்சியின் நிகழ்ச்சி நிரல் முன்னறிவிப்பு...
நிகழ்ச்சி தகவல் அட்டவணை பார்க்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்..