Monday, June 7, 2021

பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி உரை

 மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள்


கோவிட் 2 வது அலைக்கு எதிராக இந்தியா கடுமையாக போராடி வருகிறது . அதில் , இந்தியா பல்வேறு இடர்பாடுகளை சந்தித்துள்ளது . ஏராளமானோர் , தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளனர் . அவர்களுக்கு எனது இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் . கடந்த நூற்றாண்டில் பெரிய பேரிடராக இது அமைந்துள்ளது . நவீன உலகம் கோவிட் போன்ற ஒரு பேரிடரை கண்டதில்லை . 

 மருத்துவமனைகள் அமைப்பதில் விரைவாக செயல்பட்டோம் . புதிய சுகாதார உள்கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளோம் , ஏப்ரல் , மே மாதங்களில் ஆக்சிஜன் தேவை கணிக்க முடியாத அளவிற்கு ஏற்பட்டது . ரயில் விமானம் டேங்கர்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டு தேவை பூர்த்தி செய்யப்பட்டது . போர்க்கால அடிப்படையில் செயல்பட்டோம் . மக்களுக்கு உதவ முப்படைகள் ஈடுபடுத்தப்பட்டன . அத்தியாவசிய மருந்துகள் உற்பத்தி வேகமாக அதிகரிக்கப்பட்டது . கோவிட் பாதிப்பை எதிர்கொள்ள சுகாதார கட்டமைப்பை 1.5 ஆண்டுகளில் வலுப்படுத்தி உள்ளோம் .

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தாக்கம் இந்தியாவில் மிக அதிகளவில் பரவி வருகிறது. இந்நிலையில், கரோனாவின் தாக்கத்தை குறைப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, தற்பொழுது இந்தியாவில் கரோனாவின் தாக்கமும் குறைந்து வருகிறது.


மனித குலத்திற்கு கோவிட் மிகப்பெரிய எதிரி . கோவிட்டிற்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது . முகக்கவசம் , சமூக இடைவெளியை பின்பற்றுதல் மிக அவசியம் . கொரோனாவை தடுக்க தடுப்பூசி தான் ஒரே பேராயுதம் , உலகில் ஒருசில தடுப்பூசி நிறுவனங்களே உள்ளன . இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியால் பலரை காப்பாற்றி உள்ளோம் . ஒரே ஆண்டில் இரு தடுப்பூசிகளை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது . தடுப்பூசி மட்டும் சரியான நேரத்தில் கண்டுபிடிக்காமல் இருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் . 2 வது அலையை எதிர்த்து போராட தடுப்பூசி தான் உதவியது . ஆரம்பத்தில் நமது தடுப்பூசி இயக்கம் மெதுவாக செயல்பட்டது . 21 ம் நூற்றாண்டின் மிகப்பெரிய துயரத்தை கோவிட் ஏற்படுத்தி உள்ளது . குழந்தைகளுக்காக சில தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன . தனது குடிமக்களை இந்தியா எப்படி காப்பாற்ற போகிறது என்ற கேள்வி பல நாடுகளில் எழுந்தது . இந்தியா குறித்த உலக நாடுகளின் சந்தேகத்திற்கு தடுப்பூசி மூலம் தீர்வு கண்டிருக்கிறோம் . உலகத்துடன் இணைந்து இந்தியா செயல்படுகிறது என்பதை நமது விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர் . இன்று வரை 23 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது . நம் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும் . 

குழந்தைகளுக்காக சில தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன . தனது குடிமக்களை இந்தியா எப்படி காப்பாற்ற போகிறது என்ற கேள்வி பல நாடுகளில் எழுந்தது . இந்தியா குறித்த உலக நாடுகளின் சந்தேகத்திற்கு தடுப்பூசி மூலம் தீர்வு கண்டிருக்கிறோம் . உலகத்துடன் இணைந்து இந்தியா செயல்படுகிறது என்பதை நமது விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர் . இன்று வரை 23 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது . நம் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும் . நமது விஞ்ஞானிகள் மீது இந்தியா நம்பிக்கை வைத்து உள்ளது . இன்னும் ஒரு ஆண்டில் கோவிட்டை தடுக்க இன்னும் 2 தடுப்பூசி விரைவில் வரவுள்ளது . மேலும் 3 தடுப்பூசிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் . மூக்கில் விடும் வகையிலான கோவிட் தடுப்பு சொட்டு மருந்து விரைவில் வரும் . தடுப்பூசிக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு கடந்தாண்டு ஏப்ரல் மாதத்திலேயே துவங்கிவிட்டது . வரும் நாட்களில் தடுப்பூசி வினியோகம் அதிகரிக்கப்படும் . தடுப்பூசி தயாரிப்பதற்கு முன்பே முன்களப்பணியாளர்கள் உயிரை பணயம் வைத்து சேவையாற்றினர் . மிகக் குறுகிய காலத்தில் தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு செலுத்தி வருவது இந்தியாவின் சாதனை . இவ்வாறு பிரதமர் பேசினார் .



No comments:

Post a Comment

back to top

Back To Top