ஊரடங்கு நீட்டிப்பு- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு
தொற்று குறைவான பகுதிகளில் மளிகை, காய்கறிக் கடைகள் செயல்பட அனுமதி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அனைத்து அரசு அலுவலகங்களும் 30% ஊழியர்களுடன் திங்கட்கிழமை முதல் செயல்படலாம்
காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி!
பழங்கள், பூக்கடைகள் செயல்பட அனுமதி!
மருந்தகங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து இயங்கும்!
அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்கள் உடன் இயங்கும்!
எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பர்கள் E - பதிவு செய்து விட்டு பணிக்கு செல்லலாம்!
வாகன உதிரிபாகங்கள் கடைகள் ஹார்டுவேர் கடைகள், மற்றும் எலக்ட்ரானிக் புத்தக கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி!
இரு சக்கர வாகன விற்பனை யகங்களுக்கு அனுமதி இல்லை!
ஆட்டோக்களில் 2 பயணிகள் மற்றும் டாக்சிகளில் 3 பயணிகள் உடன் இயங்க அனுமதி!
நீலகிரி, கொடைக்கானல் ஏற்காடு மற்றும் குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் (E-PASS கட்டாயம்) அனுமதி!
சார்பதிவாளர் அலுவலகங்களில் 50 டோக்கன் மட்டும் வழங்கப்பட்டு அதனடிப்படையில் செயல்பட அனுமதி!
.
No comments:
Post a Comment