Sunday, September 22, 2019

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க செப்.25 வரை அவகாசம்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம்
செப். 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற அதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ("சி-டெட்') எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இதன்படி சிபிஎஸ்இ பள்ளிகள், நவோதயா பள்ளிகள், கேந்திர வித்யாலயா பள்ளிகளில், மத்திய திபெத்திய பள்ளிகளில் பணி நியமனம் பெற சிபிஎஸ்இ நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற வேண்டும்.
இதையடுத்து இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்வு மொத்தம் 20 மொழிகளில் எழுதலாம். நாடு முழுவதும் 110 நகரங்களில் இந்த தேர்வு நடக்கிறது.

தேர்வு எழுதுவோர் ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 18 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கால அவகாசம் ஏற்கெனவே முடிவடைந்த நிலையில் வரும் 25-ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும், தேர்வுக் கட்டணத்தை 30-ஆம் தேதி வரை செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

back to top

Back To Top