கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு சிறப்பு தேர்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்
டையன் தெரிவித்துள்ளார்.
டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் தான் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணியாற்ற முடியும் என திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, பணி ஆணைக்காக காத்திருப்பவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ''2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, மீண்டும் ஒரு சிறப்புத் தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு மிகவிரைவில் பணி நியமனம் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
No comments:
Post a Comment