Saturday, September 21, 2019

பிளஸ் 2 பாடப் புத்தகம் வழங்குவதில் தாமதம்

தமிழகத்தில், பிளஸ் 1க்கு, 2018ம் ஆண்டும்; பிளஸ் 2க்கு, இந்த ஆண்டும்,
புதிய பாடத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, முதல் பாக புத்தகங்கள் மட்டும் வழங்கப்பட்டன. இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு முடியும் நிலையில், இரண்டாம் பாக புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை.பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு, மாணவர்கள் தயாராக வேண்டிய நிலை உள்ளதால், வகுப்புகளை விரைந்து முடிக்க, பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. ஆனால், இரண்டாம் பாக புத்தகம் வராததால், வகுப்புகள் எடுப்பதிலும், பயிற்சி கொடுப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உடனடியாக, பாடப் புத்தகங்கள் வழங்கினால் மட்டுமே, அவர்களுக்கு பயிற்சி அளிப்பது எளிதாக இருக்கும் என, பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

back to top

Back To Top