Tuesday, July 13, 2021

ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரலாம்..

 பள்ளிக்கல்வி ஆணையர் அடுத்த உத்தரவு வரும் வரை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல் !


தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பாட புத்தகங்களை வழங்குவது உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காக ஆசிரியர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரலாம் என்ற ஜாக்டோ அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்ததை அடுத்து புதிய மாணவர் சேர்க்கை மற்றும் மதிப்பீடுகள் உள்ளிட்ட சில நிர்வாகப் பணிகளுக்காக பள்ளிகளை மீண்டுமாக திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா 2 ஆம் அலை காரணமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக செயல்பட்டு வந்த பள்ளிகள் அனைத்தும் மீண்டுமாக மூடப்பட்டது. இதற்கிடையில் பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்தது.

இதை தொடர்ந்து அடுத்த 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கை, பாட புத்தகங்களை வழங்குவது, பள்ளிகளில் சுகாதார பணிகளை மேற்கொள்ளும் பணிகளுக்காக அனைத்து பள்ளிகளும் மீண்டுமாக திறக்கப்பட வேண்டும் எனவும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் உத்தரவின் படி, 100% ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.




மேலும், தினமும் வேலைக்கு வர, சங்க நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், ஜூன் 1 முதல், புதிய கல்வி ஆண்டு பணிகள் துவங்கின.அப்போது, கொரோனா ஊரடங்கு முழுமையாக அமலில் இருந்ததால், ஆசிரியர்கள் தினமும் சுழற்சி முறையில் மட்டும் பணிக்கு வந்தால் போதும் என, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் உத்தரவிட்டார்.


சுற்றறிக்கை

தற்போது, ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதால், பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட கல்வி பணிகளும் தீவிரமாகியுள்ளன. எனவே, தினமும் கல்வி பணிகளை மேற்கொள்ளவும், அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வர வேண்டும். பள்ளியில் இருந்தவாறு, 'ஆன்லைன்' வகுப்புகளை நடத்த வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.


சி.இ.ஓ.,க்கள் மீது புகார் இந்த சுற்றறிக்கைக்கு, ஜாக்டோ - ஜியோவில் உள்ள ஆசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.'கொரோனா தொற்று காரணமாக, ஆசிரியர்களின் உடல் நலன் பாதுகாப்பு கருதி, தினமும் பள்ளிக்கு வேலைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும், ஆசிரியர்களை தினசரி வேலைக்கு வர உத்தரவிட்ட கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மீது, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமாரிடமும், அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடமும் புகார் அளித்துள்ளனர்.


இதை தொடர்ந்து இந்த உத்தரவை ஆணையர் அவர்களின் உத்தரவின் கீழ் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஜாக்டோ நிர்வாக அதிகாரிகள், அம்மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட பிறகு, பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் அடுத்த உத்தரவு வரும் வரை அனைத்து ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு செல்லலாம் என ஜூலை 9 வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

பகிர்வு வழி :http://www.asiriyar.net/2021/07/blog-post_24.htm

முதல்வர் அறிவுரை..

அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு முறை கைத்தறி ஆடைகளை உடுத்த முதல்வர் அறிவுரை சார்ந்து செய்தி வெளியீடு!


 நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் அமைய வேண்டும் ” கைத்தறி , கைத்திறன் , துணிநூல் மற்றும் கதர்த்துறை ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுரை . 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று ( 13.07 2021 ) தலைமைச் செயலகத்தில் , கைத்தறி , கைத்திறன் , துணிநூல் மற்றும் கதர்த்துறையின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது . கைத்தறி மற்றும் துணிநூல் இக்கூட்டத்தில் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடித் திட்டங்களான வேட்டி , சேலை வழங்கும் திட்டம் மற்றும் பள்ளி மாணாக்கர்களுக்குச் சீருடை வழங்கும் திட்டம் குறித்தும் , நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திடும் வகையில் அவர்களுக்குத் தொடர் வேலைவாய்ப்பு அளிப்பது குறித்தும் , அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் நெசவாளர்களுக்குச் சென்றடைய உரிய அறிவுரைகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார் துறையின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் . துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் இதர நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய அணுகுமுறையாக , பாரம்பரியத்தை இளையதலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பது , அனைத்து வயதினருக்கும் ஏற்ற கைத்தறி ஆடைகளை வடிவமைப்பது , ஒருங்கிணைந்த விற்பனை வளாகங்களை உருவாக்குவது கைத்தறியை உயர் வருவாய் பிரிவினரிடம் கொண்டு செல்வதன் மூலம் நெசவாளர்களின் வருமானத்தை உயர்த்துவது , அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகளை உடுத்த அறிவுறுத்துவது , தமிழ்நாட்டின் நெசவிற்கு ஒரு வணிகப் பெயரை ( Branding ) உருவாக்குவது போன்ற அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார்

8ம் வகுப்பு / கணிதம் / இயல் 1 / எண்கள் / பகுதி 3

8ம் வகுப்பு / கணிதம் / இயல் 1 / எண்கள் / பகுதி 3
8ம் வகுப்பு / கணிதம் / இயல் 1 / எண்கள் / பகுதி 3 / விகித முறு எண்களை ஒப்பிடுதல் / ஏறுவரிசை -இறங்கு வரிசை, இடைப்பட்ட ஒரு விகிதமுறு எண்ணைக் கண்டறிதல்


View on YouTube

Monday, July 12, 2021

பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை !!!

 ஆசிரியர்கள் தினசரி பள்ளிக்கு வருவது குறித்து புகார் - பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை !!!


தமிழகத்தில் கொரோனா பரவல் குறைவாக உள்ளதால் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உதவிற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறுப்பு தெரிவித்து புகார் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் கடந்த ஆண்டு முதல் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆன்லைன் மூலமாக படிப்பதில் பல சிரமங்கள் உள்ளதால் பள்ளிகள் கட்டாயம் திறக்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் தேதி முறையாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்ததால் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புதிய கல்வியாண்டு ஜூன் 14 முதல் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே அனைத்து ஆசிரியர்களும் தினமும் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மேலும் ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகளில் இருந்தே நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பிற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பு ஆசிரியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக ஆசிரியர்கள் தினசரி பள்ளிக்கு வந்தால் உடல்நலன் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் தினசரி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில் விலக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் ஆசிரியர்களை தினமும் வேலைக்கு வர உத்தரவிட்ட கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மீது பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட்டு வரும் நிலையில், ஆசிரியர்கள் மட்டும் இவ்வாறு புகார் அளிப்பது சரி இல்லாத ஒன்றாக உள்ளது. இதனால் அரசு பள்ளிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். சுழற்சி முறையில் மட்டும் பள்ளிக்கு வருவோம் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அப்படியெனில் சுழற்சி முறையில் வரும் நாட்களுக்கு மட்டுமே சம்பளத்தை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

பகிர்வு வழி: daily tamilnadu

std7/maths/term1/exercise1.1/முழுக்களின் கூட்டல்

std7/maths/term1/exercise1.1/முழுக்களின் கூட்டல்
std7/maths/term1/exercise1.1/முழுக்களின் கூட்டல் ..


View on YouTube

back to top

Back To Top