அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் - பள்ளிகல்வித்துறை அறிவிப்பு.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10 - ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது . தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காததால் , ஊரடங்கு 24 - ந் தேதி முதல் 31 - ந் தேதி வரையிலும் , பின்னர் 31 - ந் தேதியில் இருந்து 7 - ந் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது . கடைசியாக அறிவித்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கின் காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்தது . பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 14 - ந் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டிக்கப்பட்டது . இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கினை 5 - வது முறையாக மேலும் ஒரு வாரத்துக்கு , அதாவது ஜூன் 21 - ந் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் நீட்டித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மேலும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அச்சடித்து முடிக்கப்பட்டுள்ளன என்றும் , 6 கோடி இலவச பாடப் புத்தகங்கள் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் , அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் முழுமையாக அனுப்பப்பட்டு விட்டன என்றும் , பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும் புத்தகங்கள் உடனடியாக மாணவர்களுக்கு வழங்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது . இந்நிலையில் அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது . மேலும் நாளை முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது .

No comments:
Post a Comment