Thursday, June 24, 2021

பள்ளி- கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் ! !

பள்ளி- கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் ! ! 

மத்திய அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை !!



 கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை தொடங்க மத்திய அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது . கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன் லைன் வகுப்புகள் மூலமா கவே மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன . ஸ்மார்ட்போன் மற் றும் இணைய தள வசதி ஆகியவை பெரும்பாலான மாணவ- மாணவிகளிடம் இல்லை . குறிப்பாக கிராமப்புற பகுதி களில் ஒருசில மாணவ - மாணவிகள் ஸ்மார்ட் போன் இருந்தாலும் செல்போன் சிக்னல் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள் . இதனால் பாடங்களைபடிக்க முடியவில்லை . மேலும் தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன் லைன் வகுப்பிலும் அனு மதிக்கவில்லை . இதனால் பல மாணவர்கள் முறையாக கல்வி கற்கமுடியாமல் போனது . ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகி யுள்ளனர் . தற்போது இந்தியாவில் இரண்டாவது கொரோனா அலை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் பள்ளி- கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது . இதை தொடர்ந்து பள்ளிகளுக்கு செல்லாமல் இருப்பதன் மூலம் மாணவர்களின் கல்வி யோடு , ஆளுமைத் திறனும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர் . ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகளுக்கு வரச் சொல்லலாம் , நேரத்தை மாற்றியமைத்து மாணவர்கள் கூட்டமாக வருவதை தவிர்க்கலாம் என பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன . இதனால் பள்ளி -  கல் லூரி திறப்பு குறித்து மத்திய அரசு விரைவில் முடி வெடுத்து அறிவிக்க உள்ளது .

செய்தி மூலம்: செய்தித்தாள்

No comments:

Post a Comment

back to top

Back To Top