Sunday, June 20, 2021

புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது!


தமிழ்நாட்டில் நாளை முதல் ஜூன் 28 ஆம் தேதி காலை 6 மணி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது!


மாவட்டங்களை 3 வகையாக பிரித்து கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி உள்ளது



வகை-1 ல் ஏற்கனவே கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் அடங்கும்-இங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடரும்-புதிய தளர்வுகள் இல்லை!


👇👇👇👇👇👇👇👇👇

மாவட்டங்களுக்கான தளர்வுகள் விவரங்கள்!

1️⃣ மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி!

2️⃣  11 மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்டு உள்ள செயல்பாடுகளுக்கு மட்டும் தொடர்ந்து அனுமதி!

புதிய தளர்வுகள் இல்லை!

3️⃣ மாவட்டங்களுக்குள் குளிர் சாதன வசதிகள் இல்லாத 50% பேருந்துகள் இயங்க அனுமதி!

சென்னையில் மெட்ரோ இரயில் இயங்க அனுமதி

4️⃣ 33% பணியாளர்கள் உடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி!

5️⃣ காலணி, கண் கண்ணாடி கடைகள் செயல்பட அனுமதி!

6️⃣ வாடகை டாக்ஸியில் 3 பேரும் ஆட்டோக்கள் 2 பேருடன் செல்ல அனுமதி!

7️⃣ சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசின் அத்தியாவசிய அலுவலகங்கள்  100% பணியாளர்கள் உடன் செயல்பட வேண்டும்!*


பிற அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்கள் உடன் செயல்பட அனுமதி!


சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 100% அரசு அலுவலகங்கள் இயங்கும்! தனியார் நிறுவனங்கள் 50% பணியாளர்கள் உடன் 3 மாவட்டங்களில் மட்டுமே அனுமதி

8️⃣ உணவகங்கள், பேக்கரி, தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி!

9️⃣ வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் திறக்க அனுமதி!

🔟 செல்போன் கடைகள், TV, MIXIE, GRINDER பழுது பார்க்கும் கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி!

1️⃣1️⃣ திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் களிடம் இருந்து E- registration மூலம் அனுமதி பெற வேண்டும்!


தமிழகத்தில் தற்போது நாளை முதல் ஜூன்-28 காலை 6 மணி வரை அறிவிக்கப்பட்டு உள்ள தளர்வுகள் ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 1️⃣1️⃣ மாவட்டங்களில் கிடையாது!


1️⃣1️⃣ மாவட்ட விவரங்கள்!

கோவை, திருப்பூர்,நீலகிரி,ஈரோடு, சேலம்,நாமக்கல், கரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர்.

No comments:

Post a Comment

back to top

Back To Top