Thursday, June 17, 2021

கவனம்-கொரோனா மூன்றாம் அலை‌யா..?

 ‌முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்


கொரோனா மூன்றாம் அலை‌



*0 முதல் 20 வயது குழந்தைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.*

*1. குழந்தைகளை வீட்டில் இருக்க வைக்கவும்.*

*2. வீட்டிற்கு விருந்தாளிகள் வருவதையும் நண்பர்கள் வருவதையும் தவிர்க்கவும்.*

*3. குழந்தைகளை கூட்டமான இடங்களுக்கும் மற்றும் விசேஷங்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டாம்.*

*4. ஒரு நாளைக்கு இரண்டு தடவை குளிக்க வைக்க வேண்டும்.*

*5. கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவ வைக்க வேண்டும்.*

*6. குழந்தைகள் தங்களுடைய மூக்கு, வாய், கண் ஆகியவற்றை கைகளை சுத்தம் செய்யாமல் தொட விட வேண்டாம்.* 

*7.பெரியவர்களை கைகளை கழுவாமல் குழந்தைகளை தொட அனுமதிக்க வேண்டாம்.*

 *8.குழந்தைகள் உபயோகிக்கும் கைபேசி மற்றும் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.*

*9. ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது குழந்தைகளை சூரிய ஒளியில் விளையாட வைக்க வேண்டும்.*

*10. தினமும் வீடு மற்றும் கழிவறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.*

*11. தினமும் பாய் மற்றும் தலையணைகளை சுத்தம் செய்து தலையணை உறைகளை மாற்ற வேண்டும்.*

*12. மிதமான சுடு தண்ணீரில் வாய் கொப்பளிக்க வைக்க வேண்டும்.*

*13. பொதுவான‌ பல் துலக்கிகளை உபயோகிக்க வேண்டாம்.*

*14. தனிமனித இடைவெளி, முக கவசம் மற்றும் கை கழுவும் முறைகளை கற்றுக்கொடுங்கள்.*

*15. கைகுலுக்குவது, முத்தமிடுவது மற்றும் மற்ற எந்த வித முறையிலும் தொடுவதை தவிர்க்க வேண்டும்.*

உணவு முறைகள் 

*1. ஒரு நாளைக்கு இரண்டு முட்டை.*

*2.  அவித்த அல்லது ஊறவைத்த பருப்பு* *வகைகள்.*

*3. தினமும் ஒரு டம்ளர் பால் கொடுக்க வேண்டும்.*

*4. பழங்கள் காய்கறிகள் கீரை வகைகள்.*

*இவை* *குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை* *அதிகரிக்கும். முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுங்கள்.*

*வெளி உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.*

 *கடையில் வாங்கும் தின்பண்டங்களை தவிர்த்துவிடுங்கள்.

 மூன்றாம் அலையின் அறிகுறிகள்

1. காய்ச்சல் அல்லது தலைவலி.

2. உடல்வலி.

3. தொண்டை வலி.

4. வரட்டு இருமல். 

5. கால் வலி.

6. கண் வலி. 

*இவைகளெல்லாம் அறிகுறிகள்.*

*அனைத்து வீடுகளிலும் கட்டாயமாக காய்ச்சல்* 

*சரிபார்க்கும் தர்மா மீட்டர், பல்ஸ்ஆக்ஸி மீட்டர் மற்றும் டிஷு பேப்பர் வைத்திருக்க வேண்டும்.*

பெற்றோர்கள் மேற்கண்ட அறிகுறிகள் ஏதேனும் குழந்தைகளுக்கு தென்பட்டால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யவும் செய்தபிறகு பாஸ்டிவ் என்று வந்தால் தயவுகூர்ந்து அரசு குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும்.

இக்கட்டுரை மக்களை அச்சமூட்டவோ... புரளி பரப்பவோ அல்ல.. நம்மை கொரானாவில் இருந்து தற்காத்துக் கொள்ளும் பொருட்டு சமூக அக்கறையுடன் பகிரப்பட்டுள்ளன...

பகிர்வு:புலனம்

No comments:

Post a Comment

back to top

Back To Top