Thursday, June 10, 2021

உயர்கல்விக்கு செல்வதில் சிக்கலா..?

 மாணவர்கள் உயர்கல்விக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

பிளஸ் 2 பொது தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் , பிளஸ் 1 அரியர் தேர்வுகள் நடத்தப்படாததால் , பிளஸ் 1 மாணவர்கள் , உயர்கல்விக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . கொரோனா பரவல் காரணமாக , பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வும் ரத்து செய்யப் பட்டு உள்ளது . அவர்களுக்கு , ' ஆல் பாஸ் ' வழங்கப்படலாம் என , கூறப்படுகிறது . தற்போது பிளஸ் 2 படித்து கொண்டிருப்பவர்களில் , 33 ஆயிரம் பேர் , 2020 ல் நடந்த பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர் . வழக்கமாக , சில பாடங்களில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களும் , பள்ளிகளிலேயே தொடர்ந்து , பிளஸ் 2 படிக்க அனுமதிக்கப்படுவர் . அவர்களுக்கு , பள்ளி அளவிலேயே தனித்தேர்வர்களாக பதிவு செய்யப்பட்டு , பிளஸ் 2 தேர்வு நடக்கும்போதே , பிளஸ் 1 பொது தேர்வின் அரியர் பாடங்களை எழுதவும் அனுமதிக்கப்படும் .

பிளஸ் 1 அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே , பிளஸ் 2 முடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும் . அதுவரை , வெறும் மதிப்பெண் பட்டியல் மட்டுமே தரப்படும் . அதை வைத்து கொண்டு , உயர்கல்வியில் சேர முடியாது . இந்நிலையில் , 2020 ல் பிளஸ் 1 முடித்து , பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு அரியர் தேர்வு நடத்தவில்லை .  

மேலும் 10 வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் எப்படி வழங்கப்பட உள்ளது என தெரியவில்லை.எனவே டிப்ளமோ படிப்புகள் சேரவும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது..

No comments:

Post a Comment

back to top

Back To Top