Friday, June 11, 2021

11 மாவட்டங்களில் சில தளர்வுகள்..14.6.21 முதல்...

  11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் 14-6-2021 முதல் சில தேர்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது ..



நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதைக் கருத்தில் கொண்டும் , அதே சமயம் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் , மேற்காணும் 11 மாவட்டங்களில் கூடுதலாக கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் 14-6-2021 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது .

 * தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் , வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் ( Housekeeping இ - பதிவுடன் அனுமதிக்கப்படும் . 

* மின் பணியாளர் ( Electricians ) , பிளம்பர்கள் ( Plumbers ) , கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் ( Motor Technicians ) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ - பதிவுடன் அனுமதிக்கப்படுவர் . எனினும் இவ்வகைக் கடைகள் திறக்க அனுமதியில்லை .

 * மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் விற்பனை கடைகள் அல்ல ) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 

* வாடகை வாகனங்கள் , டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ - பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும் . மேலும் , வாடகை டேக்ஸிகளில் , ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும் , ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும் - வேளாண் உபகரணங்கள் , பம்பு செட் ( Pump sel ) பழுது நீக்கும் கடைகள் ( விற்பனை கடைகள் அல்ல ) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 

* கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் 

* மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* ஏற்றுமதி நிறுவனங்கள் , ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 25 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

No comments:

Post a Comment

back to top

Back To Top