Tuesday, June 29, 2021

கவனமா இருங்க..! ஜூலை 1 முதல்

 ஜூலை 1 முதல் இந்த வங்கியின் IFSC,MICR, செக் புக், இயங்காது.. கவனமா இருங்க..!

இந்தியாவில் பல சிறிய வங்கிகள் பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டது. இது இதனால் இணைக்கப்பட்ட சிறிய வங்கிகளின் IFSC கோடுகள் மற்றும் செக் புத்தகங்கள் செல்லாது என வங்கிகள் அறிவித்துள்ளன.


இது குறித்து வெளியான அறிவிப்பில் பெரும்பாலான வங்கிகளின் நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதமாக வங்கிகள் இணைக்கப்பட்டன. அந்த வகையில் கனரா வங்கி, சிண்டிகேட் வங்கியுடன் இணைக்கப்பட்டது.

இதனால் சிண்டிகேட் வங்கியின் ஐ எஃப் எஃப் சி கோடுகள் ஜூலை முதல் இயங்காது என கனரா வங்கி அறிவித்துள்ளது.

பரிவர்த்தனை செய்ய முடியாது

ஆக சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஜூன் 30-க்குள் தங்கள் வங்கிக் கணக்கில் IFSC குறியீடுகளை மாற்றிக் கொள்ளலாம். பழைய ஐ எஃப் எஸ் சி கோடுகளை பயன்படுத்தி ஜூலை 1 முதல் வங்கிகளில் பரிவர்த்தனை செய்ய முடியாது என அறிவித்துள்ளதுமிகப்பெரிய மாற்றம்

மேலும் ஜூலை 1 முதல் எஸ்.ஓய்.என்.ஒ.பி (SYNB) என்ற அனைத்து IFSC கோடுகளும் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக CNRB எனத் தொடங்கும் IFSC கோடுகளை பயன்படுத்த வேண்டும். ஆக வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கிளைகளில் சென்று அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


IFSC கோடுகள்

அப்படி இல்லையேல் https://canarabank.com/IFSC.html என்ற இணைய பக்கத்தில் சென்று கிளிக் செய்து, உங்களது பழைய சிண்டிகேட் வங்கியின் IFSC கோடுகளை கொடுத்து, கிளிக் செய்து புதிய ஐஎப்எஸ்சி கோடினை பெற்றுக் கொள்ளலாம்.

அப்படி இல்லாவிட்டாலும் கனரா வங்கியின் வாடிக்கையாளர் சேவை மைய நம்பரான 18004250018 என்ற நம்பருக்கும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்எம்ஐசிஆர் கோடுகள்

இது தவிர ஸ்விப்ட் கோடு, எம் ஐ சி ஆர் கோடுகள் செக் புக் என அனைத்தும் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இதனையும் சரியான நேரத்தில் அப்டேட் செய்து கொள்ளவும். ஏனெனில் ஜூலை 1க்கு இதன் மூலம் பரிவர்த்தனை செய்ய முடியாமல் போகலாம்.

Source: Google news

.

.

No comments:

Post a Comment

back to top

Back To Top