Tuesday, March 24, 2020

MICE TEST RESULT

அன்பு மாணவ செல்வங்களே,
               இன்று தேர்வு கிடையாது. நாளை முதல் தேர்வு தொடரும். இந்த ஊரடங்கு உத்தரவினை அனைவரும் கண்டிப்பாக பின்பற்றுங்கள். அலட்சியப்படுத்தாமல் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருங்கள்..... நீங்கள் இருப்பதை பார்த்து மற்றவர்களும் கடைப்பிடிக்கும்படி நடந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்களை இன்றே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உங்களின் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். கைகளை சாதாரண சோப்பு கொண்டே அடிக்கடி கழுவுங்கள். நூடில்ஸ், பாஸ்தா போன்ற துரித வகை உணவுகளை தவிர்த்து வீட்டில் அம்மா செய்யும் உணவுகளை மட்டுமே உண்ணுங்கள். நிறைய தண்ணீர் பருகுங்கள். எனக்கு இதுதான் சாப்பிட வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள்... இதனால் உங்களின் பெற்றோர் வெளியே செல்ல நேரிடும்..... நீங்கள் இந்நாட்களை பத்திரமாகவும் பயனுள்ளதாகவும் கழியுங்கள்....


  • புத்தகம் படியுங்கள்
  • கலை வேலைப்பாடுகள் ஏதேனும் செய்யுங்கள்
  • பெற்றோருக்கு உதவுங்கள்
  • பெற்றோருடன் மனம் விட்டு பேசுங்கள்
  • உங்கள் தம்பி தங்கைகளை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
  • வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்களுடன் சிறிது நேரம் பேசுங்கள்..அவர்களுக்கு தைரியம் சொல்லுங்கள்
  • உறவினர்களுக்கு அலைபேசி மூலம் பேசி நலம் விசாரியுங்கள்
  • பிடித்த இசையை கேட்டு மகிழுங்கள்
  • அனைவரும் பார்க்ககூடிய நல்ல படங்களை தேர்ந்தெடுத்து பாருங்கள்
  • விட்டிற்குள்ளேயே விளையாடகூடிய விளையாட்டுகளை விளையாடுங்கள்
  • தியானம் செய்யுங்கள் 
  • தினமும் அரைமணி நேரம் நம் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறை நண்பர்கள், வணிகர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர் என இவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
  • மேலும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க அனைவரும் சேர்ந்து பிரார்த்திப்போம்.....

நேற்றைய சரியான விடைகள்



நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. S.V. ரசிகப்பிரியா, 7-ஆம் வகுப்பு, ஊ.ஒ.ந.பள்ளி, கணேசபுரம், கோயம்புத்தூர்

வாழ்த்துகள் பிரியா.....




from covaiwomenict https://ift.tt/2y76Y17

No comments:

Post a Comment

back to top

Back To Top