ஆசிரியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை எமிஸ் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது .
தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் 37 , 211 அரசுப் பள்ளிகள் இயங்கு கின்றன . இவற்றில் சுமார் 2 . 3 லட்சம் ஆசிரியர்கள் பணி புரிகின்றனர் . ' இதற்கிடையே அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம் படுத்த அரசு பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறது . அதன் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் செயல்பாடுகளைக் கண்காணிப்பதில் பள்ளிக்கல்வித் துறை தீவிரம் காட்டுகிறது .
கற்றல் பணிவிவர தின பதிவேடு , சொத்து விவரம் , பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக்கின்றனர் என ஆசிரியர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் கல்வி தகவல் மேலாண்மை முகமை ( எமிஸ் ) இணையதளம் வழியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன . இந்நிலையில் ஆசிரியர்கள் வைத்துள்ள அனைத்து வங்கி கணக்குகள் மற்றும் பான் கார்டு விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது . இதற்காக எமிஸ் இணையதளத்தில் பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டுள் ளன . இந்த பணிகளை விரை வாக முடிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது . ஆசிரியர்களின் வருமானம் , பணப் பரிமாற்றம் உள்ளிட்ட செயல்பாடுகளைக் கண்காணிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .
No comments:
Post a Comment