நாட்டிலேயே முதல் முறையாக தனியார் ஆசிரியைகளுக்கும் 6 மாதம் பேறுகால விடுப்பு : அரசு உத்தரவு
இந்தியாவிலேயே முதன் முதலாக கேரளாவில் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகள் மற்றும் பெண் ஊழியர்களுக்கும் 6 மாதம் பேறுகால விடுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இது அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும் பொருந்தும். ஆனால் இந்த சலுகை தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு கிடையாது.
இந்த நிலையில் இந்தியாவிலேயே முதன் முறையாக கேரளாவில், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியைகள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு 6 மாத கால சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment