தூத்துக்குடி: "எனக்கு குழந்தை பிறந்திருக்கு..
சிசேரியன் செய்திருக்கேன்.. எனக்கு ஓய்வு தேவை. அதனால் எனக்கு 9 மாத கால விடுப்பு வேண்டும்" என்று அங்கன்வாடி பெண் ஊழியர் சங்கீதா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை முதலில் 6 மாத காலம் இருந்தது. ஆனால் மறைந்த ஜெயலலிதாவின் உத்தரவினால் 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்ததப்பட்டது. இதையடுத்துதான் 9 மாத விடுப்பு, முழு சம்பளம் என அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சங்கீதா என்ற அங்கன்வாடி பெண் ஊழியர், மற்ற அரசு பெண் ஊழியர்களை போல அங்கன்வாடி பெண் ஊழியர்களுக்கும் 9 மாத கால விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இப்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. சிசேரியன் என்பதால், லீவு தேவைப்படுவதாகவும், மற்ற அரசு பெண் ஊழியர்களை போலவே அங்கன்வாடி பெண் ஊழியர்களுக்கும் 9 மாத லீவு வேண்டும் என்று கேட்டு மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் உள்ளதாவது: "எனது பெயர் சங்கீதா. நான் திருச்செந்தூரில் அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வருகின்றேன். தற்போது நான் மகப்பேறு விடுப்பில் இருக்கின்றேன். மேலும் எங்களின் ஆறு மாத காலம் விடுப்பை ஒன்பது மாத காலம் வரை தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். இந்த உலகத்தில் பிறந்த அனைத்து பெண்களும் சமம்.
மேலும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட எங்களுக்கு ஆறு மாத காலம் விடுப்பு குறைவாக உள்ளது. அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் உடலளவில் ஓய்வு தேவைப்படுகிறது. இதனால் அரசு வேலை யில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் உள்ள மாதிரி அங்கன் வாடி ஊழியர்களுக்கும் ஒன்பது மாத காலம் விடுப்பு தரும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்" என்று தெரிவித்துள்ளார்.
சங்கீதாவின் இந்த கோரிக்கை தவிர்க்க முடியாத ஒன்றாகவும், அத்தியாவசியமானதாகவும், உள்ளதால் கண்டிப்பாக தமிழக முதல்வர் பரிசீலிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment