Thursday, August 5, 2021

தலைவர்களின் சாதிப்பெயர்கள் நீக்கம் .. பாடநூல் கழகம் அதிரடி ஆக்சன்...

 தமிழக பாடப்புத்தகங்களில் தலைவர்களின் சாதிப்பெயர்கள் நீக்கம் .. பாடநூல் கழகம் அதிரடி ஆக்சன்...

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் தமிழறிஞர்கள் , கவிஞர்கள் , அரசியல் தலைவர்கள் , சுதந்திர போராட்ட வீரர்கள் உள்பட தலைவர்களின் பெயருக்கு பின்னால் இருக்கும் சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன . திண்டுக்கல் ஐ லியோனி தலைமையிலான தமிழ்நாடு பாடநூல் கழகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது . " தமிழ்நாட்டின் சாலைகள் , தெருக்கள் மற்றும் அலுவலக கட்டடங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்படும்போது அவர்கள் பெயரின் பின்னால் இருக்கும் சாதிப்பெயர் இடம்பெறக்கூடாது " என்று தமிழ்நாடு அரசால் அரசானை வெளியிடப்பட்டு நடைமுறையில் இருக்கிறது . இதன்படியே தமிழ்நாடு பாடநூல் கழகம் சாதி பெயர்களை பாடப்புத்தகத்தில் இருந்தும் நீக்கும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது .

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிப் பாடப்புத்தகத்தில் தமிழறிஞர்கள் , கவிஞர்கள் , அரசியல் ஆளுமைகள் உள்ளிட்ட தமிழ்த்தலைவர்கள் பெயர்கள் நீண்ட காலமாக அவர்களின் சாதி பெயர்களுடன் தான் இருந்து வருகின்றன . இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு , பாடப்புத்தகங்களில் உள்ள தலைவர்களின் பெயருக்கு பின்னால் உள்ள சாதிப்பெயர்களை நீக்கியிருக்கிறது . 

12 ம் வகுப்பு பாடம் :

தமிழ்நாடு பாடநூல் கழகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் படி , 12 ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருக்கும் " பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள் " என்ற பாடப்பகுதியில் , தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் என்றிருந்த பெயர் தற்போது உ.வே.சாமிநாதர் என மாற்றப்பட்டிருக்கிறது . ராமலிங்கம் பிள்ளை அதேபோல் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பதை மீனாட்சி சுந்தரனார் என்று மாற்றப்பட்டிருக்கிறது . மேலும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்பதை ராமலிங்கம் எனவும் மாற்றி தமிழ்நாடு பாடநூல் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது .

 பாடநூல் கழகம் :

மேலும் தமிழின் முதல் நாவலாசிரியரின் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்ற பெயரை வேதநாயகம் என்று மாற்றி உள்ளது . இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரான சி.வை.தாமோதரம் பிள்ளை என்ற பெயரை சி.வை.தாமோதரம் என்று மாற்றி உள்ளது.இதேபோல் தான் பல்வேறு தலைவர்களின் பெயருக்கு பின்னால் இருக்கும் சாதிப்பெயரை நீக்கி தமிழ்நாடு பாடநூல் கழகம் புதிய திருத்தம் மேற்கொண்டு உள்ளது . விரைவில் அனைத்து வகுப்பு பாடப்புத்தகங்களிலும் சாதிகளை நீக்கும் , பெயர் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . 

source : oneindia.com

ஆசிரியர்கள் கணக்கெடுக்க அரசு உத்தரவு.

 அரசு பள்ளி ஆசிரியர்கள் கணக்கெடுக்க அரசு உத்தரவு.

 சென்னை : அரசு பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கையை , மாணவர் விகிதத்துக்கு ஏற்ப கணக்கெடுத்து பட்டியல் அனுப்புமாறு , பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது . தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் , மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது . மேலும் , அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு , கற்பித்தல் பயிற்சிகள் வழங்கவும் , ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தவும் , பள்ளி கல்வி இயக்குனரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது . இந்நிலையில் , அரசு பள்ளிகளில் காலியாக மற்றும் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கண்டறிய , கணக்கெடுப்பு பணிகளை , பள்ளிக்கல்வி துறை துவங்கியுள்ளது . பள்ளிக்கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குனர் பொன்னையா , முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அதில் கூறியிருப்பதாவது :

அனைத்து அரசு பள்ளிகளிலும் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை , ஆக . , 1 ம் தேதி நிலவரப்படி , மாணவர் எண்ணிக்கை விகிதத்தின் படி , கணக்கெடுக்க வேண்டும் . வகுப்பு வாரியாகவும் , தமிழ் , ஆங்கில வழி மாணவர் எண்ணிக்கையிலும் கணக்கிட வேண்டும் . முந்தைய ஆண்டுகளில் உபரியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களை , பள்ளி கல்வி துறையிடம் ஒப்படைத்திருந்தால் , அந்த இடங்களை கணக்கில் எடுக்கக் கூடாது . இந்த விபரங்கள் அனைத்தையும் , பள்ளி கல்வி துறையில் , கல்வி மேலாண்மை , ' டிஜிட்டல் ' தளமான , ' எமிஸ் ' வழியாக , ' ஆன்லைனில் ' பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு , அதில் கூறப்பட்டுள்ளது .

std 8 / maths / ex 1.5 / Q1 to Q5. 8ம் வகுப்பு கணிதம் பயிற்சி 1.5 வினாக்கள் 1 முதல் 5 முடிய...

std 8 / maths / ex 1.5 / Q1 to Q5. 8ம் வகுப்பு கணிதம் பயிற்சி 1.5 வினாக்கள் 1 முதல் 5 முடிய...
std 8 / maths / ex 1.5 / Q1 to Q5. 8ம் வகுப்பு கணிதம் பயிற்சி 1.5 வினாக்கள் 1 முதல் 5 முடிய... கனம் மற்றும் கனமூலம் தொடர்பான கணக்குகள்


View on YouTube

பள்ளிக் கல்வி - மாநில நல்லாசிரியர் விருது வழங்கும் பொருட்டு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்களை அனுப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!! & இணைப்பு அரசாணை


பள்ளிக் கல்வி - மாநில நல்லாசிரியர் விருது வழங்கும் பொருட்டு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்களை அனுப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!  & இணைப்பு அரசாணை.


ஆணையர் செயல்முறைகள்....





Wednesday, August 4, 2021

std 7 / maths / ex. 1.3 / 7ம் வகுப்பு கணிதம் பயிற்சி 1.3

std 7 / maths / ex. 1.3 / 7ம் வகுப்பு கணிதம் பயிற்சி 1.3
std 7 / maths / ex. 1.3 / 7ம் வகுப்பு கணிதம் பயிற்சி 1.3 அனைத்து வினாக்களும் தீர்வுகளும்..


View on YouTube

back to top

Back To Top