Wednesday, May 25, 2022

ஆசிரியர்களுக்கு பயிற்சி - திறன் மேம்பாட்டு கையேடு..

  2022-2023 வரும்  கல்வி ஆண்டில் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்குவதற்கான திறன் மேம்பாட்டு கையேடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியீடு...


 Download Click Here...

அரசுப்பள்ளிகளுக்கான நாட்காட்டி 2022 - 2023

 பள்ளி வேலை நாட்கள் மற்றும் 1-5 வகுப்பு வரை ஆசிரியருக்கான குறுவள மைய பயிற்சி CRC மற்றும் பிற பயிற்சிக்கான அட்டவணை

 2022 - 2023  கல்வியாண்டில் திட்டமிடப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது..

தரவிறக்கம் செய்ய👇👇👇

Click Here to Download 

Saturday, May 14, 2022

Census 2022 - 2023 E Register 2.0

மக்கள் தொகை  கணக்கெடுப்பிற்கான எக்செல் பயன்பாடு  2.0

 மக்கள் தொகை மற்றும் பள்ளி வயது குழந்தைகள் கணக்கெடுப்பிற்கான எக்செல் பயன்பாடு 2.0 புதிய  வெளியிடப்பட்டுள்ளது. பயன்படுத்தி வேலையை எளிதாக்குங்கள்...

Click here for Download 

 GOA GEARING UP TO CONDUCT CENSUS OF POPULATION OF GOA IN 2021 – The  Goajunction


Thursday, May 12, 2022

நாளை 13.05.2022 துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு இறுதி வேலை நாள்....

 நாளை 13.05.2022 முதல் துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை...



நாளை 13.05.2022 துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு இறுதி வேலை நாள் ஆகும். கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 13 ஆம் தேதி திறக்கப்படும். பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.



Saturday, May 7, 2022

ILLAM THEDI KALVI...


 ILLAM THEDI KALVI NEW UPDATE HERE...

0.0.34






Update click here..

Wednesday, May 4, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.05.22

CCE record 2021 - 2022

 CCE  record 2021 - 2022

        கொரானா பெருந்தொற்றினால் மாணவர்கள் இரண்டாம் பருவத்திலிருந்து பள்ளிக்கு வருகை புரிந்தனர்.ஆகவே இந்த CCE record ல் முதல் பருவத்தில் மாணவர்கள் பெயர் , பாலினம் மற்றும்  இனம் என்ற கலத்தில் உள்ளீடு செய்தால் மட்டும் போதுமானது. இரண்டாம்பருவத்தில் வருகை நாட்களும் மற்றும் மூன்றாம் பருவத்தில் மாணவர்களின் மதிப்பெண் மற்றும் அனைத்து தகவல்களையும் உள்ளீடு செய்து ஆண்டு இறுதி அறிக்கையில் உள்ள மாணவர் பதிவேட்டை அச்செடுத்து பயன்படுத்திக்  கொள்ளலாம்.
 
தரவிறக்கம் செய்ய / Download Click Here..

Tuesday, May 3, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.05.22

 திருக்குறள் :

பால் : பொருட்பால் 

அதிகாரம் : மானம் 

குறள் : 962. 

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர். 

பொருள்: புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்

பழமொழி :

You may know by a handful of the whole sack 

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

இரண்டொழுக்க பண்புகள் :

1. உடல் வருத்தாமல் வந்த பொருள் நெடுநாள் நிலைக்காது. உடல் வருத்தியே பொருள் பெற்றுக் கொள்வேன். 

2. நேர்மையான முறையில் வந்த பொருள் கொஞ்சம் என்றாலும் மகிழ்ச்சியும் மன அமைதியும் தரும். நேர்மையான முறையிலே எல்லா பொருளும் பெற்றுக் கொள்வேன்.

பொன்மொழி :

தனி நபர்களை ஒருவர் கொல்வது எளிது. ஆனால், அவர் கூறிய கருத்துகளை யாராலும் கொல்ல முடியாது - பகத்சிங்

பொது அறிவு :

1.சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்? 

கௌதம புத்தர். 

2.அங்கோர்வாட் கலைக்கோவில்கள் எங்குள்ளன? 

கம்போடியா

English words & meanings :

valiant - full of courage and not afraid., மனத் துணிவு மிக்க அச்சமற்ற, 

vouch - confirm that something is true, ஒரு காரியம் சரி என்று உறுதி கூறுதல்

ஆரோக்ய வாழ்வு :

ஓமத்தை ஒரு துணியில் கட்டி மூக்கினால் நுகர்ந்தால், மூக்கில் நீர் ஒழுகுதல், சளி, மூக்கடைப்பு ஆகியவை குணமடையும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சரி செய்யவும் இதை தாராளமாக பயன்படுத்தலாம். வாய்வு, வயிற்று வலி ஆகிய உடல் உபாதைகளுக்கு ஓமத் திரவம் அற்புதமாக வேலை செய்யும் மருந்து.மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கவும், சிறுநீர் கழிக்கும் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் இது மிக உதவியாக இருக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய்  காலத்தில் ஏற்படும் வலிக்கும் இந்த ஓமத் திரவத்தை அருந்தினால் வலியில் இருந்து விடுபடலாம்.

கணினி யுகம் :

Shift + H - Add rhomb. 

Shift + T - Add text

மே 04


பன்னாட்டுத் தீயணைக்கும் படையினர் நாள் 



பன்னாட்டுத் தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters' Dayமே 4ஆம் நாளன்று ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகிறது. வழக்கமாக இந்நாளன்று ஐரோப்பிய நாடுகளில் தீயணைப்பும் படையினர் நாள் கொண்டாடப்பட்டு வந்தது. எனினும் 1999 ஆண்டு ஜனவரி 4 அன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பெரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் உயிரிழந்த ஐந்து தீயணைக்கும் படையினரை நினைவுகூருவதற்கு ஆதரவாக உலகெங்கும் மின்னஞ்சல் மூலமாக இடம்பெற்ற பரப்புரையினை அடுத்து மே 4ஆம் நாளை உலகெங்கும் நினைவுகூர முடிவுசெய்யப்பட்டது.

நீதிக்கதை

மூன்று புதிர்!

ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் பரம ஏழை. மற்றொருவன் பணக்காரன். பணக்காரனிடம் அவன் தம்பியாகிய ஏழை ஒரு பசுவைக் கேட்டான். அண்ணன் பசுவைக் கொடுப்பதற்கு முன், என் நிலத்தில் நீ தினமும் வந்து ஓராண்டு உழைக்க வேண்டும்! என்றான். அவனும் ஒத்துக் கொண்டான். 

பசுவை வாங்கிக் கொண்ட இளையவன், தான் ஒத்துக்கொண்டது போல் அண்ணன் நிலத்தில் ஓராண்டு முழுவதும் உழைத்தான். ஓராண்டு முடிந்தது. தம்பி அண்ணனிடம் வேலைக்குச் செல்லவில்லை. மறுநாளே பசுவை திருப்பிக் கேட்டான் அண்ணன். ஓராண்டு உன் நிலத்தில் உழைத்தேன் அல்லவா பசு எனக்குத்தான்! என்றான். மூத்தவன், ஓராண்டு காலம் நீ என் பசுவிடம் பால் கறந்து பலனை அனுபவித்தாய் அல்லவா? அதனால் இரண்டிற்கும் சரியாகிவிட்டது! என்றான். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒரு பிரபுவிடம் சென்றனர்.

வழக்கை விசாரித்த பிரபு, அவர்கள் இருவருக்கும் மூன்று புதிர்களைக் கொடுத்து, இதற்குச் சரியான பதில்களை யார் சொல்கிறீர்களோ அவர்களுக்குத்தான் பசு! என்று கூறி புதிரைச் சொன்னார். முதல் புதிர், மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது? இரண்டாவது புதிர், மனிதனுக்கு மிக மகிழ்ச்சியைத் தருவது எது? மூன்றாவது புதிர், அதிக விரைவாகச் செல்வது எது? இந்த மூன்று புதிர்களுக்கும் நாளை விடை கூறுங்கள் என்றார். இருவரும் வீட்டிற்கு வந்து மூளையைக் குழப்பி சிந்தித்தனர்.

மறுநாள் காலை பிரபுவைச் சந்தித்தனர். மூத்தவனைப் பிரபு அழைத்து, என் புதிருக்கு விடை சொல் என்றார். மேன்மை தங்கிய பிரபு அவர்களே! ஒரு மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது என்று கேட்டீர்கள். அதற்குச் சரியான விடை பன்றிக்கறி. கொழுத்த பன்றிக் கறியைச் சாப்பிட்டால் வயிறு நிரம்பும். பல மணி நேரம் பசிக்காது. இரண்டாவது, மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தருவது எது என்று கேட்டீர்கள். அதற்கு விடை பணம். பணம் பெட்டி நிறைய இருக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது தெரியுமா? பணம் குறையக் குறைய மகிழ்ச்சியும் குறையும்.

மூன்றாவதாக, அதிவிரைவாகச் செல்வது எது என்று கேட்டீர்கள். அதுற்குச் சரியான விடை வேட்டை நாய். வேட்டை நாய்கள் விரைவாக ஓடி முயல்களைக்கூட பிடித்து விடுகின்றன என்று சொல்லிவிட்டு பிரபுவைப் பார்த்து, பசு எனக்குத்தானே! என்று கேட்டான். முட்டாளே! நீ சொன்ன அனைத்தும் அபத்தமான பதில்கள்! என்றார் பிரபு. 

பிரபு! இளையவனை அழைத்தார். புதிருக்கு விடை சொல் என்றார். பிரபு! நம் வயிற்றை நிரப்புவது பூமி. பூமி தாயிடம்தான் நாம் உண்ணும் தானியங்களும், கிழங்குகளும் கிடைக்கின்றன. அந்த உணவால்தான் விலங்குகளும், பறவைகளும், வாழ்கின்றன. இரண்டாவதாக ஒரு மனிதனுக்கு அதிக மகிழ்ச்சி தருவது தூக்கம். தூக்கத்திற்காக விலையுயர்ந்த செல்வத்தையும் மனிதன் விட்டுவிடுவான்.

மூன்றாவது, அதிவிரைவாகச் செல்வது நமது சிந்தனை ஓட்டம். அது நாம் விரும்பியபோது விரும்பிய இடத்தில் கொண்டு போய்ச்சேர்க்கும்! இவையே சரியான விடைகள். இந்தப் பசு உனக்கே! என்று சொல்லி பசுவை இளையவனுக்கு கொடுத்தார். 

நீதி :
அறிவால் அனைத்தையும் வெல்லலாம்.

இன்றைய செய்திகள்

04.05.22

★10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு: செல்போனுக்கு தடை, தேர்வுக் கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியீடு.

★சென்னையில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி மெட்ரோ ரயில் பணிகளுக்காக 133 மரங்கள் வெட்டப்படவுள்ளன. இதற்குப் பதிலாக 1,596 மரங்கள் நட கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

★விடுமுறைக்கு பின் இன்று சட்டப்பேரவைக் கூட்டம்: மானியக் கோரிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை.

★பொது இடங்களில் அனுமதிக்க மறுப்பது சட்ட விரோதம்; தடுப்பூசி செலுத்துமாறு கட்டாயப்படுத்த கூடாது: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

★உணவு, ரசாயனம் உட்பட பல பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா முடிவு : ஒப்பந்தம் மேற்கொள்ள ஏற்றுமதியாளர் குழு உடனடி பயணம்.

★உக்ரைனுடனான போருக்கு மத்தியில் ரகசிய ராணுவ செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய ரஷியா.

★மாநில அளவிலான பூப்பந்து விளையாட்டு போட்டி - பழனி மாணவர்கள் சாதனை.

★உலக ஜூனியர் பளுதூக்குதல் போட்டி: இந்திய வீராங்கனைக்கு தங்கம்.

★செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணிகள் அறிவிப்பு.

Today's Headlines

★ 10th, 11th, 12th class general examination: ban on cell phones, the release of examination control room numbers.

 ★ Lighthouse in Chennai - 133 trees to be cut down for Poonthamallee Metro Railworks.  The Coastal Regulatory Commission has ordered the planting of 1,596 trees instead.

 ★ Meeting of the Legislature today after the holiday: Chief Minister's consultation on the grant request.

 ★ Refusal to allow in public places is illegal;  Do not force vaccination: Supreme Court orders state governments.

 ★ Russia decides to import many products from India, including food and chemicals: Immediate expedition of the Exporters Group to sign the agreement.

 ★ Russia launches a secret military satellite amid the war with Ukraine.

 ★ State Level Ball Badminton Tournament - Palani Students Achieved

 ★ World Junior Weightlifting Championship: Gold for Indian Athlete.

 ★ Announcement of Indian teams for the Chess Olympiad.

 
 Prepared by

Covai women ICT_போதிமரம்


from Covai Women ICT https://ift.tt/5buetl2

Monday, May 2, 2022

சிறுபான்மை பள்ளிகளுக்கு TET கிடையாது ...

 பள்ளி ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் சிறுபான்மை பள்ளிகளுக்கு TET கிடையாது என நீதிமன்றம் தீர்ப்பு

MADRAS HIGH COURT JUDGEMENT COPY-DATE-21.04.2022 PDF :

 

Download Click Here..

Sunday, May 1, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.05.22

 திருக்குறள் :

பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து குறள் 943:
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

பொருள்
உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்.

பழமொழி :

Never cast a clout till May be out.

கரையை அடைவதற்கு முன் துடுப்பை எறியக்கூடாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உடல் வருத்தாமல் வந்த பொருள் நெடுநாள் நிலைக்காது. உடல் வருத்தியே பொருள் பெற்றுக் கொள்வேன். 

2. நேர்மையான முறையில் வந்த பொருள் கொஞ்சம் என்றாலும் மகிழ்ச்சியும் மன அமைதியும் தரும். நேர்மையான முறையிலே எல்லா பொருளும் பெற்றுக் கொள்வேன்.

பொன்மொழி :

ஊக்கத்தை கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு - அறிஞர் அண்ணா

பொது அறிவு :

1. வளிமண்டலம் பற்றி அறிய உதவும் அறிவியல் துறை எது?

 வானியல் (astronomy)

2. நிலநடுக்கம் பற்றி அறிய உதவும் அறிவியல் துறை எது?

நிலநடுக்கவியல் (seismology)

English words & meanings :

undergo - to have a difficult experience.இடர்ப்பாடான அனுபவம். 

Underwood - small trees and shrubs growing beneath taller trees, பெரிய மரங்கள் கீழ் வாழும் செடிகள்

ஆரோக்ய வாழ்வு :

பலாப்பழத்தில் புரதச்சத்துக்களும், மாவுச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம் காணப்படுகின்றன. ஏ, சி மற்றும் சில பி வைட்டமின்களும் உள்ளன. தவிர கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமப்பொருட்களும் பலாப்பழத்தில் அடங்கியுள்ளன.சிறுநீரக குழாய் புற்றுநோய் பாக்டீரியாவினால் ஏற்படும் சிறுநீரக குழாய் தொற்றுநோய்க்கு தினமும் 2 வேளை பலாப்பழ ஜூஸ் தொடர்ந்து  ஐந்து நாட்கள் உட்கொண்டால் நோய் தீரும்.வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும். மேல் தோலை மிருதுவாகவும்,  வழவழப்பாகவும் செய்யும்.

கணினி யுகம் :

Shift + B - Add box. 

Shift + C - Add circle

மே 02


பாவுலோ பிரெய்ரி அவர்களின் நினைவுநாள்




பாவுலோ பிரெய்ரி (Paulo Freire) ஒரு பிரேசிலியக் கல்வியாளரும், மெய்யியலாளரும் ஆவார். கற்றல் கலையில் நுண்ணாய்வுடைய திறனுடன் பல புத்தகங்களை எழுதியுள்ளார். ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை என்கிற புத்தகம் அவரது சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இப்புத்தகமே ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை இயக்கத்தின் அடித்தளமாகவும் அமைந்தது

நீதிக்கதை

ஆமையும் இரண்டு வாத்துகளும்

அது ஒரு அழகிய ஏரி. அந்த ஏரியில் அழகிய ஆமை ஒன்று தனது இரண்டு வாத்து நண்பர்களுடன் வாழ்ந்து வந்தது. தினமும் அந்த இரு வாத்துகளை ஆமை சந்திப்பது வழக்கம். ஒருநாள் அந்த இரண்டு வாத்துகளும் வருத்தத்துடன் காணப்பட்டன. இதைக்கண்ட ஆமை, ஏன் இருவரும் வருத்தத்துடன் உள்ளீர்கள் என்று கேட்டது.

பல வருடங்களாக மழை பெய்யாத காரணத்தால் இந்த ஏறி வறண்டு வருகிறது. இன்னும் சில காலத்திற்கு பிறகு இங்கு முற்றிலும் நீர் வறண்டுவிடும். எனவே நாங்கள் இருவரும் பக்கத்துக்கு ஊரில் உள்ள ஏரிக்குச் செல்ல இருக்கிறோம் என்று வாத்துகள் கூறியது. என்னை விட்டு செல்வதற்கு உங்களுக்கு எப்படி மனம் வந்தது. நீர் குறைந்தால் உங்களுக்கு உணவு தான் குறையும், எனக்கோ உயிரே போய்விடும். என்மீது உங்களுக்கு அன்பு இருக்குமானால் என்னையும் அழைத்துச் செல்லுங்கள், என்றது ஆமை. உனக்கு தான் இறக்கைகள் கிடையாதே! உன்னை அழைத்துப்போக எங்களால் எப்படி முடியும்? என்றது வாத்து.

அதற்கு ஆமை ஓர் உபாயம் செய்யலாம், ஒரு நீண்ட குச்சியை எடுத்து வாருங்கள். நான் நடுவில் என்னுடைய பற்களால் கொட்டியாய் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் இருபக்கமும் பிடித்து தூக்கிக் கொண்டு பறந்து செல்லுங்கள், என்றது ஆமை. நாங்கள் உயரப்பறக்கும்போது நீ வாயைத்திறந்தால் கீழே விழுந்து இறந்து விடுவாய் என்று வாத்துகள் கூறியது.

அப்படியானால் பறக்கும்போது நான் வாய் பேசாமல் இருக்கின்றேன் என்று ஆமை கூறியது. இரு வாத்துகளும் இருபக்கமும் குச்சியை பிடித்து பறக்க நடுவில் ஆமை வாயில் பற்றிக்கொண்டு பறந்தன. சிறிது தூரம் பறந்தவுடன் ஆமை சந்தோஷத்தில் துள்ளிகுதிக்க ஆரம்பித்தது. இரு வாத்துகளும் ஆமையிடம் சிறிது நேரம் அமைதியாய் இரு. இல்லாவிடில் நீ கீழே விழுந்து விடுவாய், என்று கூறியது.

செல்லும் வழியில் வாத்துகள் ஆமையுடன் பறந்து செல்வதைப் பார்த்த மக்கள் வாத்துகள் எதையோ தூக்கிக்கொண்டு போகின்றன என கூச்சலிட்டனர். ஆமையின் கெட்ட நேரம் அந்த வார்த்தைகள் அதன் காதில் விழுந்தது. இந்த மக்கள் ஏன் இப்படி கூச்சலிடுகின்றனர் என வாய்திறந்து பேச அது பிடித்திருந்த பிடி விட்டுவிட கீழே விழத்தொடங்கியது. கீழே விழுந்த ஆமை உடல் சிதறி இறந்தது.

நீதி: வருமுன் காப்போனும், சமயோசித புத்தியுடையவனும் சுகம் பெறுவார்கள்.

இன்றைய செய்திகள்

02.05.22

💧பள்ளி ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடப்பது வேதனையளிக்கிறது: உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

💧வானிலை முன்னறிவிப்பு: சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

💧ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு.

💧கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து இந்தியா மீள்வதற்கு 12 ஆண்டுகள் ஆகும் என்றுரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

💧நிலக்கரி வாங்க பணமில்லை; 18 மணிநேரம் மின்வெட்டால் தவிக்கும் பாகிஸ்தான்: மக்கள் போராட்டம் .

💧ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் - பட்டம் வென்றார் கரோலினா மரின்.

💧மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: படோசாவை வீழ்த்தி 3 வது சுற்றுக்கு முன்னேறினார் ஹாலெப்.

Today's Headlines

💧 Student's misbehavior with teachers is very unfortunate: take proper action order by High Court. 

 💧Weather forecast: Chances of rain in some districts.

  💧General Manoj Pandey took charge as the new Chief of the Indian Army staff 

 💧The Reserve Bank of India has said it will take 12 years for India to recover from the economic damage caused by the corona.

 💧No money to buy coal;  Pakistan suffers an 18-hour power outage: People Started to protest.

 💧Carolina Marin wins European Championship Badminton title

💧 Madrid Open Tennis: Halep defeats Badosa to advance to the 3rd round.

 
 Prepared by

Covai women ICT_போதிமரம்


from Covai Women ICT https://ift.tt/N0U2iZe

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் அடிப்படை ஆய்வினை ( BaseLine Survey) ...


இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் அடிப்படை ஆய்வினை ( BaseLine Survey) 06.05.2022-க்குள் முடிக்க சிறப்பு அலுவலர் உத்தரவு.


 

இல்லம் தேடிக் கல்வி மையங்கள் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்டங்களிலும் அனைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மையங்களுக்கு வரும் மாணவர்களின் கற்றல் நிலையினை அறிந்து கொள்வது மிக முக்கியம். எனவே அதனை அறிந்து கொள்ளும் விதமாக கற்றல் மாணவர்கள் அடைவுகளின் அடிப்படையில் குறைந்தபட்சம் அடையவேண்டிய அனைத்து பாடங்களுக்கும் அடிப்படை ஆய்வு ITK கைப்பேசி செயலியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


 தன்னார்வலர்கள் மையத்திற்கு வரும் அனைத்து  மாணவர்களுக்கும் அடிப்படை ஆய்வினை மேற்கொண்டு 6.05.2022 க்குள் முடிக்க வேண்டும். அடிப்படை ஆய்வு வடிவமைக்கப்பட்டுள்ள விதம் மற்றும் அதனை மேற்கொள்ளும் விதம் குறித்த வழிகாட்டுதல்கள் 

https://youtu.be/b1RY8LkD84g 

காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது. 

எனவே அனைத்து தன்னார்வலர்களுக்கும் ஆசிரியர் பயிற்றுநர்கள் , மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் வாயிலாக தகவல் தெரிவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


back to top

Back To Top