Monday, December 6, 2021

ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதலை வழங்குவதற்கான கலந்தாய்வு குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது .

 ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதலை வழங்குவதற்கான கலந்தாய்வு குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது .

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை இன்று ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்திற்கு பிறகு மாவட்ட அலுவலர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளது. அதில், பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படவுள்ளது. இவை நடப்பு மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு, புதுப்பணியிடங்கள் கோரவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் புதிய மாணவர்கள் சேர்க்கையால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. ஆகையால் பட்டதாரி ஆசிரியர்கள் , முதுகலை ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்ய உத்தேச விவரம் சமர்பிக்கப்படவுள்ளது.

இந்தப் பணியிடங்களை ஜூன் மாதத்திற்குள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள இயலும்.மேலும் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அந்தந்த கமிட்டியிடம்தான் புகாரளிக்க வேண்டும். பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் நடைபெறும் தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடிப்பது, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லி கொடுப்பது போன்ற செயல்கள் மிகவும் வருந்தத்தக்கவை ஆகும். இது போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

back to top

Back To Top