Friday, December 24, 2021

இன்று செய்ய வேண்டிய பணிகள்: 24.12.21

 நாளை....

25-12-2021 முதல் 2-1-2022 வரை.. அரையாண்டு விடுமுறை.


💫 ஆசிரியர் வருகை பதிவேடு மற்றும் மாணவர்கள் வருகை பதிவேடு *ஜனவரி(2022)க்கு* எழுதுதல்..


💫 MR பதிவேடு மற்றும் MR படிவம் எழுதுதல் /  வீட்டில் எழுத எடுத்துக் கொள்ளுங்கள்.


💫 ஊதியப் பட்டியல்.. ஊதியச் செல்லுப்பட்டியல்.. PAY BILL.. மற்றும் IT படிவம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.. ஜனவரியில் IT எவ்வளவு பிடித்தம் செய்யலாம் என கணக்கிட்டு பார்க்கலாம்...


💫 SMC நோட்,

SMC முத்திரை,

School seal எடுத்துக் கொள்ளுங்கள்...


💫 விடுமுறையில் பள்ளி மானியம் வரவு செலவுகளை முடித்து PFMS ல் பதிவேற்றம் செய்ய தேவையான ஆவணங்களை எடுத்துக் கொள்ளுதல்...


💫 NOTES OF LESSON எடுத்துக் கொள்ளுங்கள்... விடுமுறையில் மூன்றாம் பருவத்திற்கு பாடத்திட்டம் எழுதுவதற்கு..... (ஜனவரியில் BEOs இரு அலுவலர்களும் புதிதாக வருவார்கள்...)


💫 விடுமுறையில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று மாணவர்களுக்கு அறிவுறுத்துதல்..


💫 மின்சார சுவிட்ச்களை மறக்காமல் சுச் ஆஃப் செய்தல்.


💫 அனைத்து ஜன்னல் மற்றும் கதவுகளை நன்கு அடைத்தல் அல்லது பூட்டுதல்..


💫 கழிவறையிலுள்ள வாளி, மக், சோப் டப்பா, டவல், பினாயில் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக எடுத்து வைத்தல்...


 💫 மழை நீர் செல்லும் பாதையில் அடைப்பு இருக்கிறதா என்று பாருங்கள்..


💫 Printer ... laptop, கனிணி, தெர்மோ ஸ்கேனர்.. டேப்ளட், பயோமெட்ரிக் டிவைஸ் உள்ளிட்ட சாதனங்களைப் பாதுகாப்பாக வைத்தல்..


💫 அனைத்து அறை சாவிகளையும் பத்திரமாக வைத்தல்.


💫 விடுமுறையில்.. அறிவிப்பு வரும் நாளில் மூன்றாம் பருவத்திற்கு பாடநூல்கள் எடுக்க வேண்டி வரும். அதற்குரிய ஏற்பாடுகள் மற்றும் முன் தயாரிப்புகளையும் செய்து வைக்கவும்.


    💫 வரக்கூடிய ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வில் நீங்கள் பதவிஉயர்விலோ அல்லது மாறுதலிலோ வேறு பள்ளிக்கு சென்று விடுவோம் என்று   கருதினால்.. தற்போதுள்ள பள்ளியில்.. எழுத்து வேலை நிலுவையில் உள்ள பதிவேடுகளை எழுதி முடித்து வைக்க ஏதுவாக எடுத்துக் கொள்ளுங்கள்..


💫 பள்ளி மேலாண்மை குழு தலைவரை அலைபேசியில் அழைத்து.. நாளை முதல் விடுமுறை என்ற தகவலைக் கூறி.. அவ்வப் போது பள்ளி வளாகத்தைக் கவனித்துக்கொள்ள அன்போடு கூறலாம். 


💫 விடுமுறை காலகட்டத்தில் நம் பள்ளி வளாகத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற வாய்ப்புள்ளது. அப்படி நடைபெறும்பட்சம்.. தேவைப்படும் தளவாட பொருட்கள், அந்த வகுப்பறை சாவி யாரிடம் இருக்கவேண்டும். என்பனவற்றையும் திட்டமிட்டு கொள்ளவும்.


✈️ இது போன்ற நீண்ட விடுமுறை அருகில் இல்லை.. எனவே குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடனான நிகழ்வுகளைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.


😷‌மீண்டும் கொரோனா, ஒமிக்ரான் என்றெல்லாம் பல தகவல்கள் வருகின்றன..  குடும்பத்தோடு பாதுகாப்பாக இருங்கள்.


HaPpy Holidays.

No comments:

Post a Comment

back to top

Back To Top