Tuesday, December 7, 2021

கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.20,000-மாக உயர்த்தி வழங்கப்படும்.! தமிழக அரசு அரசாணை.

 இவர்களுக்கும் மாத ஊதியம் ரூ.20,000-மாக உயர்த்தி வழங்கப்படும்.! தமிழக அரசு அரசாணை.


தமிழகத்தில் 2,423 கவுரவ விரிவுரையாளர்களுக்கு அக்டோபர் 2021 முதல் மார்ச் 2022 வரை ஆறு மாதங்களுக்கான தொகுப்பூதியம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியதாவது; 2020-21-ஆம்‌ கல்வியாண்டிற்கு அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ மற்றும்‌ கல்வியியல்‌ கல்லூரிகளில்‌, சுழற்சி-1 பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு 2423 கெளரவ விரிவுரையாளர்களை மாதம்‌ ரூ.15,000 வீதம்‌ ஏப்ரல்‌ 2020, ஜூன்‌ 2020 முதல்‌ அக்டோபர்‌ 2020 வரை 6 மாதங்களுக்கும்‌ மற்றும்‌ நவம்பர்‌ 2020 முதல்‌ மார்ச்‌ 2021 வரை 5 மாதங்களுக்கும்‌, ஆக மொத்தம்‌ 11 மாதங்களுக்கு முறையே தொகுப்பூதிய அடிப்படையில்‌ பணியமர்த்த அணுமதியும்‌, இதற்கென ரூ.39,.97,95,000 நிதி ஒப்பளிப்பு செய்தும்‌ ஆணைகள்‌ வெளியிடப்பட்டன.

மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் (சுழற்சி-I மற்றும் சுழற்சி- II) அரசு கல்வியியல் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர தொகுப்பூதியத்தில் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக 1.01.2020 முதல் உயர்த்தியும் ஆணை வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

back to top

Back To Top