திருக்குறள் :
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்:வலி அறிதல்
குறள் எண்: 472
குறள்:
ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்.
பொருள்:
ஒரு செயலில் ஈ.டுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.
பழமொழி :
Trust not to a broken staff
மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.
இரண்டொழுக்க பண்புகள் :
1. உழாத நிலமும், இறைக்காத கிணறும், உழைக்காத உடலும் கெடும் இத்தவறை செய்ய மாட்டேன்.
2. இரக்கமில்லாத மனமும், இயற்கை அழிக்கும் நாடும் கெடும். எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளம் ஒரு நாளும் அழிக்க மாட்டேன்.
பொன்மொழி :
எப்போதும் வலிமையானவர்கள்
சாதனையாளர்கள் ஆவது
கிடையாது.. தோல்வியிலும்
நம்பிக்கையை இழக்காதவர்களே
சாதனையாளர்கள்..!------
பொது அறிவு :
1.ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம் எது?
மாலிக் அமிலம்.
2. மிகவும் குறைந்த எடையுள்ள எரியாத வாயு எது?
நைட்ரஜன்.
English words & meanings :
Pair - the same type of two things worn together. ஜோடி, இணை.
Pear - a type of fruit. பேரிக்காய்.
ஆரோக்ய வாழ்வு :
வெற்றிலை மறறும் மிளகு இரண்டையும் வாயில் போட்டு மென்றால் அது நார் சத்தாக மாறி உடலில் உள்ள நச்சையும் வெளியேற்றும். வெற்றிலையை கடுகு எண்ணெயில் சூடாக்கி மார்பு பகுதியில் போட்டால் சளியின் காரணமாக ஏற்பட்ட மூச்சு திணறல் குணமாகும்.
கணினி யுகம் :
Holding Shift During Boot up -- Boot safe mode or bypass system files.
நீதிக்கதை
கல்வியே அழியாத செல்வம்
கதை :
கடலோரப் பகுதி கிராமமான நல்லூரில் வசித்து வந்த இரத்தினசாமி என்ற எளிய விவசாயிக்கு சொந்தமாக இருந்தது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே. அவருக்கு மாணிக்கம், முத்து என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்தனர்.
இரத்தினசாமி தனது வறுமையின் காரணமாக மகன்கள் இருவரையும் அழைத்து, நீங்கள் உங்கள் கல்வியை இத்துடன் முடித்துக் கொண்டு என்னைப்போல் விவசாயத்தில் ஈடுபடுகிறீர்களா? என்று கேட்டார்.
கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த மாணிக்கம், அப்பா, நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, எனக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்றான். இளையவன் முத்து, எனக்கு படிப்பில் நாட்டமில்லை. விவசாயம் செய்யவும் விருப்பமில்லை. நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன் என்றான்.
இருவருக்குமே, விவசாயத்தில் நாட்டம் இல்லாததால், இரத்தினசாமி தன் நிலத்தை விற்று, கிடைத்த தொகையை இருவருக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தார். மாணிக்கம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து செவ்வனே பயின்று தேறி, நல்லதொரு வேலையில் அமர்ந்தான். முத்து தனக்குக் கிடைத்த தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்து வியாபாரம் தொடங்கினான்.
ஆனால், சில ஆண்டுகளில் வியாபாரத்தில் பெருத்த நட்டம் ஏற்பட்டு முதலீடு செய்த தொகையை முற்றிலும் இழந்து நின்றான். மனமுடைந்து பரிதாபமாக நின்ற முத்துவை நோக்கி மாணிக்கம், தம்பி கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம். நான் பெற்றுள்ள கல்வி எனும் செல்வத்தினால்தான், எனக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய வேலை கிடைத்தது.
ஒருவன் பெற்றுள்ள கல்வி எனும் செல்வம் காலத்தால் அழியாதது. அதை யாரும் திருடிச் செல்ல முடியாது. அதை யாராலும் சேதமாக்கவும் முடியாது. ஆனால் பணம் அவ்வாறு அல்ல, பணம் எனும் செல்வம் நிலையற்றது என்று கல்வியின் பெரும்மையை உணர்த்தினார்.
நீதி :
கல்வி யாராலும் அழிக்க முடியாத செல்வம்.
இன்றைய செய்திகள்
29.11.21
◆சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தால் ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும்: போக்குவரத்து ஆணையரகம் அறிவிப்பு.
◆ராமேசுவரம் அருகே பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் கடல் நீர் சாகச விளையாட்டு மையம் விரைவில் தொடங்கப்படஉள்ளது.
◆டெல்டாவில் தொடரும் கனமழை; தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 159 வீடுகள் சேதம்: ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
◆ஓமைக்ரான் அச்சம்: கரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளை தொடர்ந்து கண்காணியுங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.
◆இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் டிசம்பர் 6-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.
◆ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் போலந்தை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்த இந்திய அணி கால்இறுதிக்கு முன்னேறியது.
◆ஐ.எஸ்.எல். கால்பந்து: மோகன் பகான் அணிக்கு 2-வது வெற்றி.
Today's Headlines
![🌸](https://fonts.gstatic.com/s/e/notoemoji/14.0/1f338/32.png)
![🌸](https://fonts.gstatic.com/s/e/notoemoji/14.0/1f338/32.png)
![🌸](https://fonts.gstatic.com/s/e/notoemoji/14.0/1f338/32.png)
![🌸](https://fonts.gstatic.com/s/e/notoemoji/14.0/1f338/32.png)
![🌸](https://fonts.gstatic.com/s/e/notoemoji/14.0/1f338/32.png)
![🌸](https://fonts.gstatic.com/s/e/notoemoji/14.0/1f338/32.png)
![🌸](https://fonts.gstatic.com/s/e/notoemoji/14.0/1f338/32.png)
Prepared by
Covai women ICT_போதிமரம்
from Covai Women ICT https://ift.tt/3rhZPVg
No comments:
Post a Comment