ஆசிரியர் சமூகத்திற்கு ஒரு வேண்டுகோள்..
இந்த பதிவை முழுதாக படிப்பது மட்டும் இன்றி.. நண்பர்கள் உறவினர்கள் பொது மக்களுக்கு கொண்டு செல்லுங்கள்..
via - Whatspp
7000 ரூபாய் சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை மருத்துவர்களாக்கும் போது.. 1.25 லட்சம் சம்பளம் (வாங்குகிறோமா?) வாங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களால் ஏன் உருவாக்க முடிவதில்லை-அமைச்சர் சரமாரி கேள்வி...
இதற்கு தனியார் பள்ளியில் பணிபுரிந்து எண்ணற்ற மருத்துவ மாணவர்களை உருவாக்கியவன் தற்போது அரசுபள்ளியில் பணிபுரிபவன் என்ற முறையில் அமைச்சருக்கு விளக்கம் கொடுக்க கடமை பட்டுள்ளேன்....
முதலில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வை எடுத்து கொள்வோம்... ஆண்டு தோறும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஏன் தனியார் பள்ளிகளுக்கு மேலாக அரசுப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பெறுகிறார்கள்.. இத்தனைக்கும் தனியார் பள்ளிகள் 9ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெரும் மாணவர்களை கழித்து கட்டிவிட்டு நன்றாக படிக்கும் மாணவர்களை மட்டும் 10 ஆம் வகுப்பு செல்ல அனுமதிப்பார்கள்.. ஆனால் அரசுபள்ளிகளில் அப்படி அல்ல.. எல்லா மாணவர்களையும் சமமாக பாவித்து தாய்மையோடு சொல்லி தருகிறார்கள் நம் ஆசிரியர்கள்... ஏன் தனியார் பள்ளிகள் கழித்து கட்டிய மாணவர்களையும் சேர்த்து சொல்லி தருகிறோம்...
இரண்டாவதாக 11ஆம் வகுப்பு சேர்க்கை..
பெருமை பீற்றிக்கொள்ளும் தனியார் பள்ளிகள் 10 ஆம் வகுப்பில் 95 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண் பெற்றவர்களுக்குத் தான் சேர்க்கை கொடுக்கிறார்கள். அரசு பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் அதிகம மதிப்பெண் பெரும் மாணவர்களை வீடு தேடி வந்து free admission கொடுத்து அழைக்கிறார்கள் சில இடங்களில் பணம் கொடுத்து கூட அரசு பள்ளி மாணவர்களுக்கு தம் பள்ளிகளில் சேர்க்கை தருகிறார்கள்...
இன்னொரு மகா கேவலமான ஒரு செயலை அரசாங்கமே செய்தது அது 10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு அரசாங்கமே அனுப்பி வைத்தது..
இப்படி அரசு பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற எந்த மாணவனும் அரசு பள்ளிகள் 11th சேராத நிலை..
கீழ்நிலை, நடுநிலை கற்றல் திறன் கொண்ட குறும்பு நிறைந்த மாணவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு அரசு ஆசிரியர்கள் படும்பாடு சொல்லி மாளாது...ஆனால் மீத்திறன் மிகுந்த மாணவர்கள் மட்டும் தனியார் பள்ளிகளின் சிறப்பு கவனத்தில் அப்படிப்பட்ட மாணவர்களை மருத்துவராக்குவது ஒன்றும் கடினமான காரியம் அல்லவே.. Syllabus முடித்து கொடுத்து முறையாக test வைத்தால் அவன் எங்கிருந்தாலும் மருத்துவர் ஆவான்..
அவர் யோசித்திருக்க வேண்டும் TET, TRB போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று தேர்வான அரசு ஆசிரியர்களின் plus two. மாணவர்கள் மேற்கண்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறாது தோற்றுப்போன தனியார் பள்ளி ஆசிரியர்களின் plus two மாணவர்களிடம் தோற்றுப்போகும் காரணம் என்ன? என்று கொஞ்சம் சிந்தித்தால் உண்மை விளங்கும்...
அரசு பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் 10ஆம் வகுப்பு சராசரி மதிப்பெண் 300க்கு கீழ்.. ஆனால் தனியார் பள்ளிகளில் அது 400க்கு மேல்.
இப்படி இருக்கும் போது சும்மா சும்மா தனியார் பள்ளியை ஒப்பிட்டு அரசு ஆசிரியர்களை பழிப்பது முட்டாள்தனமானது மட்டுமல்ல அரசாங்கத்தையே பழிப்பதும் ஆகும்..
தனியார் பள்ளியில் மாணவர்களின் கீழ்ப்படிதல் வீதமும் அரசுப்பள்ளியில் கீழ்ப்படிதல் வீதமும்
தனியார் பள்ளிகளின் சுதந்திரமான சர்வாதிகார அடக்குமுறையும் அரசு பள்ளி ஆசிரியர்களின் பயம் கலந்த கண்டிப்பற்ற அணுகுமுறையும் கூட தேர்ச்சி வீதத்தின் காரணிகளில் அடங்குமென்பது அனைவர்க்கும் தெரியும்..
ஒன்று கவனிக்க வேண்டும் பொறுக்கி பொறுக்கி அட்மிஷன் போடும் தனியார் பள்ளிகள் தங்களின் அனைத்து மாணவர்களையும் மருத்துவர் ஆக்குவது இல்லை.. ஐந்நூறு அறுநூறு மீத்திறன் மாணவர்களை வைத்துக்கொண்டு இருபது முப்பது மருத்தவர்களை உருவாக்குகிறார்கள். அதே மாணவர்களை எங்களிடம் தாருங்கள் நூற்றுக்கணக்கில் மருத்துவர்களை உருவாக்கி காட்டுகிறோம்.. அரசு பள்ளிஆசிரியர்கள் சார்பில் நான் விடுக்கும் சவால் இது.. தயாரா மாண்புமிகு அமைச்சர் அவர்களே..
ஆடு மேய்ப்பவன் முதல் அமைச்சர் வரை ஆசிரியர் சமூகத்தை கரித்துகொட்டுவது ஏன்..?
நாங்கள் கோடி கோடியாய் ஊழல் செய்வதும் இல்லை..
ஊர் அடித்து உலையில் போடுவதும் இல்லை..
பணியிடத்தில் லஞ்சம் வாங்குவதும் இல்லை..
களியும் கம்மசோறும் வெங்காயம் கூட இல்லாம கரைச்சு குடிச்சிகிட்டு , ஒழுகிற கூரைல விளக்கு வெளிச்சத்துல படிச்சி, அம்மா நகை தோடு எல்லாம் வித்து டிகிரி வாங்கி b.ed படிச்சி TRB, TET னு pass பண்ணி வேலைக்கு சேர்ந்திருக்கோம்.. ஒழுங்கா படிக்காம ஊர் மேஞ்சிகிட்டு இருந்தவன், ஒழுங்கா படிக்காதவன், வேலை வெட்டிக்கு போகாதவன் எல்லாம் விவரம் போதாம எங்கள் மேல பொறாமை பட்டு பேசும்போது வலிக்கவில்லை..
எங்கள பற்றி முழுசா தெரிஞ்ச அமைச்சர் பேசியது.. அதுவும் சம்பளத்தை பொய்யாக மிகைப்படுத்தி பேசி எங்கள் மேல பொது மக்களிடம் எதிர்மறையான மனப்போக்கை ஏற்படுத்தியிருப்பது வலிக்கிறது..
ஆசிரியர்கள் வேலைக்கு கூலி வாங்குபவர்கள் அல்ல.. வருங்காலத்தை வகுப்பறைகளில் வடிவமைக்கும் தொண்டுக்கு சேவைக்கு தட்சணை பெறுபவர்கள்.. இதை மற்ற நிதி பரிவர்த்தனை போல் பார்ப்பது அறிவுடைமை ஆகாது.
5 ஆம் வகுப்பிலேயே நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி vidaraanga sir. LKG la ye 25 % Ida ஒதுக்கீடு நு சொல்லி private school Ku anuppidaraangale sir.
ReplyDeletePrivate schools la 10 th ah 2 varusam padikkaranga( 9th laye 10 class poguthu ) 12 th 2 varusam padikkaranga... So timing athikam kidaikkuthu...Padam full ah nadatha mudithu... Test athikam vaikka mudithu... Ana gov school la oru sum pottudu board ah alikkumpothae bell adichuruthu... Syllabus mudikkavae mukkavendi irukku... Hw kuduthalum student podarathu illa... Adikka kudathu... Manasu nogumpadi thittakudathu... Ana padikkamattum vaikkanum... Ithu onnum vakuruthi kuduthu vote vangura visayam illa... Yosichu pesuna nallarukkum...
ReplyDelete