திருக்குறள் :
குறள் :408
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
பொருள்: முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையை விட அதிக துன்பத்தைத் தரும்.
பழமொழி :
Every tide has its ebb
ஏற்றம் உண்டு எனில் இறக்கமும் உண்டு
இரண்டொழுக்க பண்புகள் :
1. பொறுமையை விட மேலான தவமில்லை எனவே எப்போதும் பொறுமையாக இருப்பேன் .
2.திருப்தியை விட மேலான இன்பமில்லை எனவே எனக்கு உள்ள பொருட்செல்வம் போதும் என்று இன்புற்று இருப்பேன்
பொன்மொழி :
உண்மையில் பக்தி உடையவர் எத்தகைய செல்வ நிலையிலும் வறுமை நிலையிலும் தானம் செய்து கொண்டே இருப்பார்...... திருக்குர்ஆன்
பொது அறிவு :
1.உலகின் மிகப் பழமையான விளையாட்டு எது?
போலோ.
2.கோல்ப் விளையாட்டு எங்கு தோன்றியது?
ஸ்காட்லாந்து.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
பருப்பு வகைகளின் நன்மைகள்
1)சுண்டல்
கொண்டைக்கடலையில் ஒரு வகை தான், இந்த சுண்டல்.
இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
2)கடலைப் பருப்பு
கடலைப் பருப்பு அதிகம் சாப்பிட உடல் வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும்.
குறிப்பாக இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் கரோனரி இதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
3)சிவப்பு காராமணி
சிவப்பு காராமணி புற்றுநோய், கொலஸ்ட்ரால் போன்றவை ஏற்படுவதைக் குறைக்கும்.
இதில் நிறைந்துள்ள வைட்டமின் K, மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும்.
4)தட்டை பயறு
தட்டை பயறில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இது இதய நோய் ஏற்படுவதை தடுக்கும்.
மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது
5)உளுத்தம் பருப்பு
இட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது.
மேலும் இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது
கணினி யுகம் :
ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளபடி சர்வதேச முதியோர் தினம் (International Day of Older Persons) உலகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையிலும், அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக காணப்படுகிறது.
குறையா? நிறையா?
இன்றைய செய்திகள்
from Covai Women ICT https://ift.tt/3AXJSp7