தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 5-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அடுத்தக்கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.. இந்த கூட்டத்தில் கூடுதல் தளர்வுகளை வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் கூடுதலாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்படுவது, கடைகள் திறக்கும் நேரத்தை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் " தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் ஜூலை 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. தேநீர் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையே இ- பாஸ், இ பதிவு இல்லாமல் பயணிக்கலாம்.. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிகப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sources: 1 news nation
No comments:
Post a Comment