கொரோனா தடுப்பு பொருட்களான முகக்கவசம் , கிருமி நாசினி , கையுறை ஆகியவற்றுக்கு விலை நிர்ணயம்..
கொரோனா தடுப்பு பொருட்களான முகக்கவசம் , கிருமி நாசினி , கையுறை ஆகியவற்றுக்கு விலை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது . கொரோனாவை பயன்படுத்தி மாஸ்க் , சானிடைசர்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் தமிழக அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது . அந்த வகையில் , 200 மில்லி லிட்டர் அளவு கொண்ட கிருமி நாசினி பாட்டில் 110 ரூபாய்க்கும் , ஒரு N95 முகக்கவசம் 22 ரூபாய்க்கும் விற்பனை செய்ய வேண்டும் . அதேபோல் கையுறை 15 ரூபாய்க்கும் , பி.பி.இ.கிட் எனப்படும் பாதுகாப்பு கவச உடை 273 ரூபாய்க்கும் , சர்ஜிக்கல் மாஸ்க் 3 ரூபாய் முதல் 4 ரூபாய்க்கும் , அறுவை சிகிச்சை நிபுணர்கள் அணியும் உடை அதிகபட்ச விலை 65 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சரிபார்க்கும் பல்ஸ் ஆக்சிமீட்டர் 1500 ரூபாய்க்கும் , பேஸ் ஷீல்டு ப்படும் முகத்திரை 21 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் .

No comments:
Post a Comment