Monday, June 28, 2021

ஊஹான் ஆய்வகம்..நடந்தது என்ன..?

 சீனாவின் ஊஹான் நகரில் 

உள்ள வைரஸ் ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றிய ஒரே வெளிநாட்டு விஞ்ஞானியான டேனியெலெ ஆன்டெர்சென், அங்கு பணியாற்றிய அனுபவங்களை பற்றி முதன் முறையாக பேட்டியளித்துள்ளார். அதன் விவரங்களை தற்போது பார்க்கலாம்...



சீனாவின் ஊஹான் நகரில் உள்ள வைரஸ் ஆய்வு நிறுவனத்தில் இருந்து 2019இல் கொரோனா வைரஸ் முதன் முதலாக மனிதர்களுக்கு பரவியதாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கருதுகின்றன.

இதைப் பற்றி ஆராய  உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரியில் ஊஹான் நகருக்கு அனுப்பிய நிபுணர்கள் குழுவினரால், இதற்கான ஆதாரங்கள் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

ஊஹான் வைரஸ் ஆய்வு நிறுவனத்தில் 2019 நவம்பர் வரை பணியாற்றிய ஆஸ்த்ரேலியாவைச் சேர்ந்த வைரஸ் ஆய்வு நிபுணரான டேனியெலெ ஆன்டெர்சென், புளூம்பெர்க் என்ற புகழ்பெற்ற செய்தி நிறுவனத்திற்கு  பேட்டியளித்துள்ளார்.  

ஊஹான் வைரஸ் ஆய்வு நிறுவனத்தின் செயல்பாடுகளில் அசாதரணமாக எதுவும் தென்படவில்லை என்றும், அங்கு பணியாற்றியவர்கள் யாருக்கும் 2019 இறுதி வரை உடல் நலக் குறைவு ஏற்படவில்லை என்றும் டேனியெலெ ஆன்டெர்சென் கூறியுள்ளார்.

ஊஹான் வைரஸ் ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு வைரஸ் நோய் தொற்றாமல் தடுக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தாக அவர் தெரிவித்துள்ளார்.

யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, உண்மைகளை கண்டறிய ஒரு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பெண் விஞ்ஞானி கேட்டுக்கொண்டுள்ளார்.
நன்றி :தினத்தந்தி.

No comments:

Post a Comment

back to top

Back To Top