மீண்டும் பள்ளிக்கு போகலாம்...
அரசுப்பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் பாடநூலைத் தொட்டு ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு ஆண்டு பாடத்தை சிறிதளவு கூட படிக்காமல் அடுத்து வகுப்புக்கு செல்லும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். எனவே ஊரடங்கு முடிந்து பள்ளிகள் துவங்கும் முன்பு அவர்கள் கடந்த ஆண்டு கற்றிருக்க வேண்டிய முக்கியமான பாடங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்வது பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறோம்.
குறிப்பாக அறிவியல், கணக்கு பாடங்களை ஜூம் செயலி வழியாக எளிய பரிசோதனைகள்/ புதிர்கள் மூலம் தொடர் வகுப்புகளாக நடத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திட்டமிட்டுள்ளது.
3, 4, 5 வகுப்புகளுக்கு தனியாகவும் 6, 7, 8 வகுப்புகளுக்கு தனியாகவும் நிகழ்ச்சிகள் நடக்கும்.
ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பயிற்சியாளர்களாகவும், வாட்சாப் மூலம் மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களைத் தீர்க்கவும் உதவலாம்.
துளிர் இல்ல, சிட்டுக்கள் மைய பொறுப்பாளர்களாக உள்ள தன்னார்வலர்கள் குழந்தைகள் இந்த வகுப்புகளில் கலந்து கொள்ளவும், ஆசிரியர்களோடு உரையாடி சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும் உதவலாம்.
இந்த புத்தாக்க வகுப்புகளில் பங்கேற்க விரும்பும் 3 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் தன்னார்வலர்களும் இந்த படிவத்தை நிரப்பி அனுப்பவும்.
*Google Form:*
https://forms.gle/f3FuAgox9YdeiQu29
பயிற்சிக்கான zoom இணைப்பும் கருத்துத் தாள்களும் வாட்சாப் மற்றும் மின்னஞ்சல் (Email) மூலமாகவே அனுப்பப்படும். எனவே தங்கள் Email id மற்றும் Whatsapp எண்ணை சரியாக குறிப்பிடவும்.
நன்றி.
அன்புடன்,
தேமொழிச்செல்வி
ஒருங்கிணைப்பாளர்
பகிர்வு: புலனம்
No comments:
Post a Comment