Wednesday, June 9, 2021

ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் தொடர்பான அரசாணை..

 அரசு அலுவலர்கள் , பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கான ஊதியத்தினை அவர்களது சொந்த விருப்பத்தின் பேரில் , செலுத்த நடைமுறைகள் அறிவிப்பு.


1.கொரோனா வைரஸ் நோய்த் தொற்று கோவிட் 19 ) பரவலின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்கும் , நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கும் , போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது . மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது 11.05.2021 நாளிட்ட செய்தி வெளியீட்டில் , இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கு அரசு கூடுதலான நிதி ஆதாரங்களைச் செலவிட வேண்டிய தேவை உள்ளது என்றும் , அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டு , முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாரளமாக நன்கொடை வழங்க வேண்டும் என மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் . 

2. அதனைத் தொடர்ந்து , பல்வேறு அரசுப் பளயாளர் சங்கங்கள் அளித்த கடிதங்களில் , கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் , அரசு அலுவலர்கள் , பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தினை தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர் . 

3. அரசுப் பணியாளர் சங்கங்களின் மேற்குறிப்பிட்ட விருப்பத்திளை தீவிர பரிசீலனை செய்து , அதனை ஏற்க அரசு முடிவு செய்துள்ளது . அதன்படி , கொரோளா வைரஸ் நோய்த் தொற்று பரவல் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காக , அரசு அலுவலர்கள் , பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கான ஊதியத்தினை அவர்களது சொந்த விருப்பத்தின் பேரில் , பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றி , மே அல்லது ஜூன் , 2021 - ஆம் மாதத்திற்கான மாதியத்திலிருந்து பிடித்தம் செய்து , முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க அனுமதித்து அரசு ஆணையிடுகிறது .

G.O. download here

No comments:

Post a Comment

back to top

Back To Top