Tuesday, June 22, 2021

இந்தியாவில் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது..

 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,640 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1,167 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,99,77,861 ஆக அதிகரித்துள்ளது.



  • கடந்த 24 மணி நேரத்தில் 42,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட, 10,616 ஆயிரம் குறைவாக உள்ளது.
  • கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,99,77,861 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1,167ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,88,135 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 81,839 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,89,26,038 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6,62,521 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாட்டில் இதுவரை 28,87,66,201 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  
  • நன்றி - தினச்சுவடு

No comments:

Post a Comment

back to top

Back To Top