அ.எண்.025/2021
தேதி : 21.02.2021
2009 - க்கு பின்னர் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு
சம ஊதியம் வழங்க வேண்டுமென
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்
நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வேண்டுகோள்
இடைநிலை ஆசிரியர்களாக 01.06.2009 க்கு முன்பு பணிநியமனம் பெற்றவர்களுக்கு ஊதியம் ரூ.11,170 ஆகவும், 01.06.2009 க்கு பிறகு நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ரூ.8000 ஆகவும் அடிப்படை ஊதியம் குறைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சார்பில் டிசம்பர், 2018 ல் டிபிஐ வளாகத்தில் நடைபெற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு எனது ஆதரவை தெரிவித்திருந்தேன்.
2012 - ஆம் ஆண்டு 13,000 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனம் பெற்றிருந்தாலும் அவர்களது உழைப்புக்கேற்ற ஊதியத்தை கோரி போராடும் போராட்டத்தில் உள்ள நியாயத்தினை உணர்ந்து அவர்களுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கிறது.
எனவே, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், "சம வேலைக்கு, சம ஊதியம்" கோரி மீண்டும் அறவழியில் இன்று (21.02.2021) போராடும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று சம ஊதியம் வழங்கிட ஆவன செய்ய வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்
உழைப்பவரே உயர்ந்தவர்
என்றும் அன்புடன்
ரா.சரத்குமார்
நிறுவனத் தலைவர்
No comments:
Post a Comment