Thursday, April 23, 2020

புத்தகம் 3 - செங்கிஸ்கான்

செங்கிஸ்கான்

மிக அருமையான நூல். நான் புத்தகங்களை தேர்வு செய்வது என்பது  புத்தக விமர்சனங்களை படித்து அதன் மூலமாக நூலை தேர்வு செய்வேன். ஆனால் இப்புத்தகத்தை வாங்கிய கதை மிகவும் வித்தியாசமானது. இறுதிசுற்று படத்தில் மாதவன் செங்கிஸ்கானின் போர் திறனைப் பற்றி ஒரு வரி  தெரிவித்திருப்பார். புத்தக கடையில் இப்புத்தகத்தைப் பார்த்ததும் அது நினைவுக்கு வந்தது. உண்மையிலேயே செங்கிஸ்கானின் போர்த்திறன் என்னை வியக்க வைத்தது. உலகையே கட்டியாளப் போகிறேன் என்ற அவரது கனவு.....ஆளுமைத்திறன்.....ஒரு சாதாரண மங்கோலிய  நாடோடிக் கூட்டத்தை  மங்கோலியப் பேரரசாக்கிய துடிப்பு....துணிச்சல்....என அனைத்தையும் கண்முன்னே கொண்டு வந்துள்ளார் இதன் ஆசிரியர் முகில். புத்தகத்தைப் படிக்கும் போது 800  வருடங்களுக்கு முன் சென்று உடன் இருந்து பார்த்தது போலவே இருந்தது. சில போர் தந்திரங்கள் பாகுபலி படத்தில் வருவது போலவே இருந்தது.(இந்த கதையை படித்திருப்பார்களோ....😊)


பதிவு
பழனிமுத்து செல்வி ஆசிரியை
காரமடை ஒன்றியம்

இந்த புத்தகத்தின் pdf வடிவம் பெற கீழ் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

https://drive.google.com/open?id=1T08vx3VILXiT82dppR8aH19h1U7VMDA2


from covaiwomenict https://ift.tt/3ax1CJG

No comments:

Post a Comment

back to top

Back To Top