Sunday, March 8, 2020

WOMEN'S DAY MICE TEST - 08.03.2020


**மைத்துளி வணக்கம்**

**மகளிர் தின சிறப்பு MICE TEST:83**

**நான் யார்?**

1.நான் இந்தியாவில் பெண்
குழந்தைகளுக்கான முதல்
 பள்ளியை 1848ல் அமைத்த
பெண்மணி.நாட்டின் முதல்
ஆசிரியையும் நானே.
மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த
எனது கணவரும் நானும்
சமூகநீதியில் பெரும்
புரட்சியை
நிகழ்த்தினோம்.
நான் யார்?

2.நான் இந்திய உச்ச
நீதிமன்றத்தில்
1989ல்  முதன் முறையாக
நியமிக்கப்பட்ட பெண்
நீதிபதியாவேன்.
தமிழகத்தின் ஆளுநராக 1997
முதல் 2001 வரை பதவி
வகித்தேன்.நான் யார்?

3.ஏ.ஆர். ரஹ்மானும், ரெசூல்
பூக்குட்டியும் 2009 ல் ஆஸ்கார்
விருது பெறும்வரை,போட்டிப்
பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு
பரிந்துரைக்கப்பட்டு விருது
 பெற்ற ஒரே இந்தியர் மற்றும்
ஒரே பெண் நான்.ரிச்சர்ட்
அட்டன்பரோ இயக்கிய "காந்தி"
திரைப்படத்தின் ஆடை
 வடிவமைப்புக்காக அந்த
விருதைப்பெற்றேன்.
நான் யார்?

4.நர்மதை நதி மீது சர்தார்
சரோவர் அணையைக்
கட்டுவதற்கு்எதிராக
நெடிய போராட்டத்தை
முன்னெடுத்து,
பேரணைகளுக்கு
எதிரான விவாதத்தை உலக
அளவில் பரவலாக்கினேன்.
பெரும் திட்டங்களால்  எளிய,
விளிம்பு நிலை மக்கள்
வாழ்வாதரத்தை
இழப்பதை தேசிய அளவிலான
பிரச்சனையாக்கி இன்றைக்கும்
போராடி வருகிறேன்.நான் யார்?

5.தனி இயக்கம் போல
செயல்படும் நாட்டின் முன்னணி
சுற்றுச்சூழல்
இதழான "Down to Earth" இதழின்
ஆசிரியர் நான்.புது டெல்லி
அறிவியல்,சுற்றுச்சூழல்
மையத்தின் (Centre for Science and
Environment) தலைமை
இயக்குநராக உள்ளேன்.
குளிர்பானங்களில்
பூச்சிக்கொல்லி முதல்
கோழிப்பண்ணைகளில்
அன்டிபயாட்டிக்ஸ் வரையிலான
பிரச்சனைகளை வெளிச்சத்துக்கு
கொண்டு வந்தததில் எனது பங்கு
 நிறைய  உண்டு. நான் யார்?

6.இயற்பியலில் முனைவர் பட்டம்
பெற்றுள்ளேன். நான்,"பெண்ணிய
சுற்றுச்சூழல் "என்ற புதிய
துறையின் நிறுவனர்களில்
ஒருவராக உள்ளேன்.இந்திய
மரபு சார்ந்த  பொருட்களுக்கான
காப்புரிமை,விதைப் பாதுகாப்பு,
உள்ளூர் தொழில் பாதுகாப்புக்காக
போராடி வருகிறேன். இயற்கை
வேளாண்மை யை ஊக்குவித்து வருகிறேன்.எழுத்தாளராகவும்
உள்ளேன்.நான் யார்?

7.நான்,இத்தாலியைச் சேரந்த
மருத்துவர்,கல்வியாளர்.
ஆண்கள்ம ட்டுமே படித்த தொழில்நுட்பப்
பள்ளியில் அதிரடியாகச் சேர்ந்து
பொறியாளராக வர வேண்டும்
என எண்ணினேன்.
விரைவிலேயே
மனமாற்றம் அடைந்து ரோம்
பல்கலைக் கழக மருத்துவப்
பள்ளியில் சேர்ந்து சிறப்பு
நிலையில் தேர்ச்சி பெற்றேன்.
என்னுடைய கல்விக் கோட்பாடு
என்னுடைய பெயரிலேயே
இன்றளவும் அறியப்படுகிறது.
நான் யார்?

8.நான் அன்றைய பம்பாயைச்
சேர்ந்த பெண்.என் தாய் துர்கா
பாய் காமத் உடன்  சேர்ந்து
" மோகினி பஸ்மாகர்"என்ற
திரைப்படத்தில் நடித்தேன்.
அப் படம் 1914 ல் வெளியானது.
இந்திய சினிமாவின் முதல்
நடிகையான நான் யார்?

9.விடுதலை பெற்ற இந்தியாவின்
 முதல் பெண்  கவர்னர்  நான்.
அப்போது "யுனைட்டெட்
பிராவின்சஸ்" என்றழைக்கப்பட்ட
 உத்திரப் பிரதேசத்துக்கு நாடு
 விடுதலை பெற்றதிலிருந்து
இரண்டாண்டுகளுக்கு கவர்னராக இருந்தேன்.கவிஞராகவும்
அறியப்பட்டேன்.நான் யார்?

10.நாட்டின் உயரிய விருதான
 "பாரத ரத்னா", இதுவரை 45
பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களில் 5 பேர் பெண்கள்.
அந்த ஐவரான நாங்கள் யார் யார்?

**மாதரைப் போற்றுவோம்**

விடைகளை பதிவு செய்ய
வேண்டிய லிங்க்..........

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf65lHaKUOkxMuf-m_FlZOxFVk0cLAlHv-VkIk4-9iJtkJZHg/viewform?usp=sf_link

அனைத்து வீர
 மங்கைகளுக்கும் இனிய
மகளிர் தின
 நல்வாழ்த்துகள்.......


from covaiwomenict https://ift.tt/3aG72m7

No comments:

Post a Comment

back to top

Back To Top