Sunday, March 1, 2020

CPS ஐ Option கொடுத்து GPF மாற்றுதல் சார்ந்த சில விளக்கங்கள் வாட்ஸப் பதிவு

CPS ஐ Option கொடுத்து GPF மாற்றுதல் சார்ந்த சில விளக்கங்கள் வாட்ஸப் பதிவு





மத்திய அரசு 01.01.2004 முதல் CPS நடைமுறை படுத்தியது.

தமிழக அரசு GO 259 நிதி துறை நாள் 06.08.2003 இன் படி முன் தேதி இட்டு *01.04.2003 முதல் CPS* நடைமுறை படுத்தியது.

CPS சார்ந்து பல்வேறு வழக்குகளுக்கு..
ஒட்டுமொத்த தீர்ப்பு கடந்த ஆண்டு இறுதியில் உச்ச நீதிமன்றம் வழங்கியது.

அதன் தொடர்ச்சியாக கடந்த வாரத்தில் (17.02.2020) மத்திய நிதித்துறை அரசாணை (நாம் G.O என்பது போல மத்திய அரசில் O.M என்பார்கள்), (office memorandum) வெளியிட்டுள்ளது.

CPS பணியாளர் அனைவரும் விருப்ப கடிதம் கொடுத்து GPF க்கு மாற முடியாது...


*01.01.2004 முன் தேர்வு செய்யப்பட்டு , 01.01.2004 பிறகு பணியில் சேர்ந்த மத்திய அரசு* பணியாளர்களுக்கு மட்டுமே இந்த அரசாணை பொருந்தும்.

இந்த ஆணை யாருக்கெல்லாம் பொருந்தாது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
( மத்திய அரசு ஆணை இணைக்கப்பட்டுள்ளது)

*தற்போதைய நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு இது பொருந்தாது...*

தமிழக அரசில் 2001-2006 வரை வேலை வாய்ப்பு நியமன தடை சட்டத்தால் எந்தவொரு அரசு பணியிடமும் நிரப்பப்படவில்லை.

(ஆசிரியர், காவல் துறைக்கு மட்டுமே விதிவிலக்கு இருந்தது) ...

2003 இல் BRTE நியமனம். மார்ச் கடைசியில் நியமன ஆணை கிடைத்தும்..

சிலர் நல்ல நாள், நட்சத்திரம், கிழமை பார்த்து... 01.04.2003 பிறகு பணியில் சேர்ந்து பாதிக்கப்பட்டனர்.

அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து...
முன்பே GPF க்கு மாறிவிட்டனர்...

2003 BRTE second list, third list ஆசிரியர்கள் சிலர் இன்னும் இது சார்ந்து வழக்கு நடத்திக்கொண்டு உள்ளார்கள்.

முதுகலை ஆசிரியர்களை பொருத்த வரையில்...
2001,2002 TRB நியமனம் 2003க்கு முன்பே எனவே அவர்கள் GPF...

2003 TRB..
நவம்பரில் தேர்வு...
டிசம்பரில் சான்றிதழ் சரிபார்ப்பு...
2004 ஜனவரியில் பட்டியல் வெளியீடு.....

2004 ஜூலை தொகுப்பூதிய நியமனம்....

எனவே மத்திய அரசின் இந்த ஆணை..
எந்த அளவில் முதுகலை ஆசிரியர்களுக்கு பயன் தரும் என்பது கேள்விக்குறி.....

இருப்பினும்... தற்போது
பல்வேறு நீதிமன்ற வழக்குகள் காரணமாக..

2004-06 தொகுப்பூதிய காலத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது... இதுதான் தற்போதைய நிலை.

No comments:

Post a Comment

back to top

Back To Top